அடுப்பில்லா சமையலுங்க!
ஆனந்த சமையலுங்க!
ஆர்வமா... வாங்க...!
சேர்ந்து....., சாப்பிட்டு போங்க....!
நம்மோடு நீங்க..., சாப்பிட்டு போங்க....!
எப்படிபா இருக்கே மாப்பிள? தங்கச்சி, குழந்தைங்க எல்லோரும் சௌகியம் தானே?
எல்லாம் நல்லா தான் இருக்கோம் மச்சான்! என்னது, நான் வரும்போது பாட்டு சத்தம் கேட்டதே?
அதுவா பழசேலட் சாப்பிட்டுன்னு இருந்தேனா மாப்பு! குஷியில பாட்டு தன்னால வந்தது!
சரி! விஷயத்தை சொல்லு? தங்கச்சிகிட்ட நம்ப பழ சேலட் ரெஸிபியை பத்தி சொன்னியா இல்லையா?
சொல்லாம இருப்பனா? சொன்னது மட்டும் இல்லாம, Life-லேயே முதல் முறையா சமையல் சேஞ்சி உன் தங்கச்சியை அசத்திபுட்டேன் இல்ல!
எந்த குறையும் இல்லாம, ரொம்ப டேஸ்டாவும் ஆரோகியமாவும் செஞ்சி, மொத்த குடும்பத்தையும் மலைக்க வெச்சிட்டேன் மச்சான்.
ஒரே பாராட்டு மழை தான் போ, உன் தங்கச்சி கிட்ட இருந்து! எப்படிங்க இவ்வளவு அறிவு? இத்தனை நாள் எங்க வெச்சிருந்தீங்கன்னு தலையில பெரிய ஐஸ்கட்டியா வெச்சிட்டா. எனக்கும் உச்சி குளிர்ந்து போச்சுப்பா. தேங்க்ஸ் மச்சான்.
இன்னைக்கு வேற ஒரு ஐயிட்டதை பத்தி சொல்லிகுடு மச்சான்.
அட பாவி மாப்புள! சொல்லி தந்தது நானு, பாராட்டு வாங்கறது நீயா? சரி, சரி எப்படியோ நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சரிதான்.
அடுத்த ஐயிட்டம் தானே? சொல்றேன் கேட்டுகோ மாப்பு!
இன்னைக்கி நாம பாக்க போற ஐயிட்டம் - பேரீச்சை முந்திரி லட்டு
இதுக்கு என்ன என்ன தேவைன்னு சொல்றேன். நல்லா கவனி!
முந்திரி பருப்பு - 200 கிராம்
பாதாம் பருப்பு - 100 கிராம்
பிஸ்தா பருப்பு - 50 கிராம்
பேரீட்சை - 250 கிராம் (கொட்டை நீக்கியது)
உலர் திராட்சை - 100 கிராம்
ஏலம் தூள் - சிறிய அளவு
இதை தயாரிக்கிற முறையும் ரொம்ப சிம்பிள்! சொல்றேன் கேட்டுக்கோ!
கொட்டை இல்லாத பேரீட்சை மற்றும் உலர் திராட்சையை நல்லா தண்ணியில போட்டு கழுவிக்கணும்.
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, எல்லாத்தையும் மிக்ஸியில போட்டு அரைச்சி அத்தோட இந்த பேரீச்சை, உலர் திராட்சையை போட்டு அரைச்சி எடுக்கணும்.
கடைசியில ஏலம் தூளையும் கலந்து லேசா அரைக்கணும். இந்த கலவை சூடா இருக்கும் போதே சின்ன சின்ன உருண்டையா பிடிக்கணும்.
மாப்பிளே! இது தான் பேரீச்சை முந்திரி லட்டு.
சாப்பிடாம குழந்தை ரமா அடம்பிடிக்கிறதா சொன்னீயே. இதை செஞ்சி கொடுத்து பாரு! அவ எப்படி சந்தோஷமா சாப்பிடறான்னு. காலைல, மாலையில டிபனா இதை குழந்தைக்கு கொடுக்கலாம்.
ஒரு வாரம் 10 நாளு வரை கூட கெடாம இருக்கும். தேங்காய் துறுவல் சேர்த்தும் செய்யலாம். தேங்காய் சீக்கிரம் கெட்டு போகும் என்கிறதால, செயதன்னைக்கே, சாப்பிட்டு காலி பண்ணிடணும்.
இந்த உணவில இருக்கிற பயன்களை பாத்தோம்னா, உடம்புக்கு தெம்பும், வேலை செய்ய நல்ல கலோரி சக்தியும் தர்ற உணவு. பசியை தாங்கிற உணவு.
விந்து பலம், ஆண்மை சக்தியை கூட்டுகிற உணவு. கபம் சம்பந்த நோயாளிகளும் சாப்பிடலாம். அவங்களுக்கு போதிய நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
வெளியில பயணம் செய்ற சமயங்கள்ல கண்டதை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காம, இதை கொண்டுபோய் சாப்பிடலாம் மாப்பு!
எண்ணெயில செய்ற லட்டை விட, இந்த இயற்கையா செய்ற லட்டு நம்ப உடம்புக்கு பல மடங்கு ஆற்றல் கொடுக்கும். எண்ணெய் லட்டு போல கெடுதல் செய்யாது
நீங்க செய்து தங்கச்சியை அசத்துங்க மாப்பிள. ஆனா மறக்காம இந்த முறையாவது நான் இந்த ரெஸ்பியை நான் சொல்லிகொடுத்ததேன்னு சொல்லு! அவளுக்கு என்மேலேயும் கொஞ்சம் மதிப்பு வரும் இல்ல.
அதுக்கென்ன தாராளமா சொல்லி போடறேன்! வர்றேன் மச்சான்.
------------------------------------------------------------
பிடிச்சிருக்கும்னு நம்பறேன். ஓட்டு போட்டுட்டு போங்க.
என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய மக்களே! நான் சொல்லி கொள்வது என்னவென்றால்....
என்னை ஓட்டு போட்டு, ஜெயிக்க வைத்து, மந்திரி ஆக்கினீர்கள் என்றால், ஆளுக்கு 50 கிலோ பேரீட்சை முந்திரி லட்டு அனுப்பி வைப்பேன் என்று ஆனிதரமாக சொல்லிகொள்கிறேன்.
என் பாசமிகு மக்களே! உங்களை ஏமாற்ற மாட்டேன்! இது உறுதி!
33 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
பங்காளி லட்டு பிரமாதம்!
வாவ்... சூப்பர் ரெசிபி... அதுவும் சிம்பிள் அண்ட் ஸ்வீட்... கிரேட் கிரேட்... அழகா கதை வடிவுல சொல்லி அசத்திடீங்க... ரெம்ப நல்லா இருக்கு எழுதற விதம்... வாழ்த்துக்கள்
கலக்கிட்டீங்க! ஈசியா செஞ்சறலாம்.
என் மனைவி அருமையா செய்யற ஸ்வீட்ல இதுவும் ஒண்ணு. உண்மையிலேயே அருமையான பயனுள்ள பக்க விளைவில்லாத ஒரு ஸ்வீட்டைத் தான் அறிமுகப்படுத்தி இருக்கீங்க, வாழ்த்துகள்! (அப்புறம், ஒட்டு போட்டாச்சு, 50 கிலோ ஸ்வீட் எதிர்பார்த்து வீட்டு வாசல்லநின்னுகிட்டிருக்கேன்!)
பங்காளி லட்டு பிரமாதம்!
பங்காளின்னே கூப்பிடலாம்.சொத்தெல்லாம் கேட்கமாட்டேன்.அடுப்பில்லா உணவிற்கு வாழ்த்துக்கள்
அடுப்பில் வைத்து சமைப்பதை சமையல்ன்னு சொல்லலாம்.இதை அடுப்பில்லா உணவுன்னு சொல்லுங்க பங்காளி
//முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, எல்லாத்தையும் மிக்ஸியில போட்டு அரைச்சி அத்தோட இந்த பேரீச்சை, உலர் திராட்சையை போட்டு அரைச்சி எடுக்கணும்.//
எங்க வீட்டுல மிக்சி இல்லை. சரி பக்கத்து வீட்டுல போய் அரைக்கலாம்னா ஆற்காட்டார் புண்ணியத்துல கரண்ட் இல்லை. இப்ப நான் என்ன செய்ய பங்காளி?
பங்காளி.. அடுப்பிலா உணவு கலக்கல்...
///ஒரு வாரம் 10 நாளு வரை கூட கெடாம இருக்கும்///
பத்து நாள் வரைக்கும் கெடாம இருக்குமா ..?
//எண்ணெயில செய்ற லட்டை விட, இந்த இயற்கையா செய்ற லட்டு நம்ப உடம்புக்கு பல மடங்கு ஆற்றல் கொடுக்கும்//
ஆமாங்க. எண்ணெய்ல இருக்குற கெடுதலும் குறையும்ல..!!
எளிமையான formula , இதில் உருண்டை பிடிக்கும் போது தேன் சேர்த்தல் இன்னும் நன்மை பயக்கும் என்று எண்ணுகிறேன் , உங்கள் நடை ரொம்ப இயல்பாக உள்ளது அறிவியல் பூர்வமான விஷயம் சொன்னாலும் வயலும் வாழ்வும் மாறி சொல்லமால் இயல்பாக ,வெகுசனங்களுக்கு பிடிக்கும் வண்ணம் எழுதுகிறிர்கள் ,வாழ்த்துக்கள்
@தமிழ் நாடன்: நன்றி பங்காளி! நான் பதில் அனுப்பிய ஈமெயில் உங்களுக்கு கிடைத்த்தா? சொல்லுங்க!
@அப்பாவி தங்கமணி:
//அழகா கதை வடிவுல சொல்லி அசத்திடீங்க... ரெம்ப நல்லா இருக்கு எழுதற விதம்... வாழ்த்துக்கள்//
அப்பாவி அக்கா! உங்க பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து என் வலைபக்கம் வந்து படித்து பார்த்து உங்க கருத்தை சொல்லணும்.
@தெய்வசுகந்தி,
பிரியமுடன் பிரபு
வெறும்பய:
பாராட்டு தெரிவித்த அன்பு பங்காளிகளுக்கும், தோழிக்கும் நன்றிகள் டன் டன்னாக!
@பெயர் சொல்ல விருப்பமில்லை:
//உண்மையிலேயே அருமையான பயனுள்ள பக்க விளைவில்லாத ஒரு ஸ்வீட்டைத் தான் அறிமுகப்படுத்தி இருக்கீங்க, வாழ்த்துகள்!//
பாராட்டுக்கு நன்றிங்க அண்ணா!
//(அப்புறம், ஒட்டு போட்டாச்சு, 50 கிலோ ஸ்வீட் எதிர்பார்த்து வீட்டு வாசல்லநின்னுகிட்டிருக்கேன்!)//
ஓட்டு போட்டதுக்கு நன்றிங்க! பதிவுல என்ன சொல்லி இருக்கேன் கொஞ்சம் கவனமா பாருங்க அண்ணா!
என்னை ஓட்டு போட்டு, ஜெயிக்க வைத்து, மந்திரி ஆக்கினீர்கள் என்றால், ஆளுக்கு 50 கிலோ பேரீட்சை முந்திரி லட்டு அனுப்பி வைப்பேன் என்று ஆனிதரமாக சொல்லிகொள்கிறேன்.
இன்னமும் நான் மந்திரி ஆகலையே! மந்திரி ஆனா கண்டிப்பா உங்க வீடு தேடி ஸ்விட்டை அனுப்பி வைக்கிறேன்.
@Chef.Palani Murugan, LiBa's Restaurant:
//பங்காளின்னே கூப்பிடலாம்.சொத்தெல்லாம் கேட்கமாட்டேன்.அடுப்பில்லா உணவிற்கு வாழ்த்துக்கள்//
நன்றி செஃப் பங்காளி! உங்க பாராட்டுக்கும் நன்றிங்க!
//அடுப்பில் வைத்து சமைப்பதை சமையல்ன்னு சொல்லலாம்.இதை அடுப்பில்லா உணவுன்னு சொல்லுங்க பங்காளி//
நீங்க சொல்றதும் நியாயமாத்தான் படுது! அடுப்பில்லா சமையல்ன்னு சொல்லும்போது ஒரு ஆச்சரியம், ஒரு Surprise இருக்கு இல்ல? அதனால தான் அப்படி பேரு வெச்சேன்.
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):
//எங்க வீட்டுல மிக்சி இல்லை. சரி பக்கத்து வீட்டுல போய் அரைக்கலாம்னா ஆற்காட்டார் புண்ணியத்துல கரண்ட் இல்லை. இப்ப நான் என்ன செய்ய பங்காளி?//
24 மணிநேரமும் கரண்ட் இல்லையா? என்ன ஒரு அநியாயம், அக்கிரமம், கேட்பார் யாரும் இல்லையா?
நீங்க ஏதாவது ஒரு நூதன முறையில போராட்டம் செய்யுங்க பங்காளி! கண்டிப்பா அதுக்கு ஆதரவு கொடுக்கிறேன்.
@ப.செல்வக்குமார்:
//ஆமாங்க. எண்ணெய்ல இருக்குற கெடுதலும் குறையும்ல..!!//
செல்வா! நீ கோமாலி இல்ல! விஷயங்களை சரியா புரிஞ்சிக்கிற புத்திசாலிப்பா! யாரு உனக்கு அப்படி பேரு வெச்சது. அவங்களை வண்மையா கண்டிக்கிறேன்!!!
@dr suneel krishnan:
//எளிமையான formula , இதில் உருண்டை பிடிக்கும் போது தேன் சேர்த்தல் இன்னும் நன்மை பயக்கும் என்று எண்ணுகிறேன்//
நிச்சயமா தேன் சேர்த்தா ரொம்ப நல்லது தான் டாக்டர் சாரே!
//உங்கள் நடை ரொம்ப இயல்பாக உள்ளது அறிவியல் பூர்வமான விஷயம் சொன்னாலும் வயலும் வாழ்வும் மாறி சொல்லமால் இயல்பாக ,வெகுசனங்களுக்கு பிடிக்கும் வண்ணம் எழுதுகிறிர்கள் ,வாழ்த்துக்கள்//
எனக்கு நகைசுவை பிடிக்கும். அதே சமயம் மற்றவர்களுக்கு, அவர்கள் அறிந்திடாத புதிய தகவல்களை கொடுக்க ஆவல்.
அதனால் ரெண்டும் கலந்து எழுதுகின்றேன். இந்த நடை உங்களை போன்றோர்க்கு பிடித்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சி!
லட்டு சூப்பர் பங்காளி..
வித்தியாசமா சொல்றீங்களே....அருமைங்க....படிக்கும் போதே செய்முறை பதிந்து விடுகிறது...!!
வாழ்த்துக்கள் ...
:))
@Riyas: உங்க பாராட்டுக்கு நன்றி ரியாஸ் பங்காளி! தொடர்ந்து வந்து போங்க நம்ப வீட்டு பக்கம்!
@Kousalya: ரொம்ப பாராட்டுறீங்க தோழி! எனக்கு கூச்சம் கூச்சமா இருக்கு!! (அதுக்காக பாராட்டுறதை நிப்பாட்ட கூடாது!
இது என் அன்பு கட்டளை
அடுத்த ஐயிட்டம் தானே? சொல்றேன் கேட்டுகோ மாப்பு!///
என்னது ஐட்டமா ???? ஹி.ஹி.ஹி. ............. (ஒண்ணுமில்லை ஜொள்ளு )
அது ஒன்னும் இல்லை சார் , ஐயிட்டமுன்னு கேட்டாலே நாங்க கொஞ்சம் ஜெர்க் ஆகிடுவோம்
நல்ல உணவு!
நல்ல ஐட்டமாத்தான் இருக்கு, புஷ்டி (!) யான ஐட்டம் போல? சரி சரி டெய்லி சாப்புட்டு உடம்பத் தேத்துவோம்!
ருசியான லட்டு.... செய்முறைக்கு நன்றி.
நல்ல உணவு! ருசியான லட்டு... super
@மங்குனி அமைசர்:
என்னது ஐட்டமா ???? ஹி.ஹி.ஹி. ............. (ஒண்ணுமில்லை ஜொள்ளு )
அமைச்சரே ஜொல்லுவிட்டா நாடு தாங்காது சாமி!
@எஸ்.கே
@Chitra
@prabhadamu
உங்க எல்லோருடைய பாராட்டுக்களுக்கும் நன்றிங்க!
@பன்னிக்குட்டி ராம்சாமி:
//நல்ல ஐட்டமாத்தான் இருக்கு, புஷ்டி (!) யான ஐட்டம் போல? சரி சரி டெய்லி சாப்புட்டு உடம்பத் தேத்துவோம்!//
பன்னிகுட்டி சாரே! நீங்க நம்ப கடைபக்கம் வந்தது சந்தோஷமுங்க! நல்ல நல்ல பலகாரம் எல்லாம் சுட்டு போடறேங்க! வாங்க தொடர்ந்து வந்து சாப்பிட்டு போங்க!
Good Laddu. But you didn't tell us about how many laddu we have to consume since it is full of calories.
@Anonymous:
//But you didn't tell us about how many laddu we have to consume since it is full of calories.//
ஆமாம் அளவோட தான் எதையும் சாப்படிணும். நல்லபடியா ஜீரணம் ஆகுறதுக்கு உடல் உழைப்பும் இருக்கணும். அப்போ பயப்பட வேண்டாம் நண்பரே!
ஒரு நாளைக்கு ஒரு லட்டு சாப்பிடுங்க. சின்னவங்க 2 லட்டு சாப்பிடலாம்.
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!