பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

23 Sept 2010

வினோத அனுபவங்கள் -1: அமைதி பயணி


Peace Pilgrim - அமைதிப் பயணியை பற்றிய எல்லா பதிகளும் படிக்க இங்கே அழுத்தவும்

அனுபவங்களை சொல்லிக்கொண்டு
இருப்பவர் - அமைதிப்பயணி

என் அமைதி பயணத்தில், சில செயல்கள், சிரமமானதாக ஒன்றும் இருக்கவில்லை. நான் உணவு இல்லாமல் இருக்கவேண்டி இருந்த தருணங்களைப் பற்றி தான் சொல்லுகிறேன். 

தொடர்ந்து 3 அல்லது 4 வேலை உணவுகளை மட்டுமே தவறவிட்டிருப்பேன். நானாக யாரிடமும் உணவு கேட்பதில்லை என்கின்ற கொள்கையை வைத்திருக்கின்றேன். யாராவது எனக்கு உணவு வழங்கினால் உண்பது இல்லையென்றால் பட்டினி இருப்பது என்பதே என் வழக்கம்! 


ஒரு முறை, அதிகபட்சமாக 3 நாட்கள் உணவு இல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அந்த நேரத்தில் இயற்கை அன்னை எனக்கு உணவு அளித்தாள். அது மரத்தில் இருந்து கீழே விழுந்திருந்த ஆப்பிள்களின் ரூபத்தில். 


ஒரு முறை, பிராத்தனை கட்டுப்பாடாக 45 நாட்கள் உபவாசம் இருந்தேன். அதனால் எத்தனை நாட்கள் வரை உணவு இல்லாமல் இருக்க முடியும் என்று எனக்கு தெரியும். இப்பொதெல்லாம் என்னுடைய பிரச்சனை, எப்படி அடுத்த வேலை உணவு கிடைக்கும் என்பதல்ல. எப்படி தேவைக்கும் அதிகமாய் கிடைக்கும் உணவை, கொடுப்போரின் மனம் புண்படாமல் மறுப்பது என்பது தான். எல்லோருமே எனக்கு அதிகமாக உணவை கொடுக்கவே விரும்புகிறார்கள். அது ஏன் என்றே தெரியவில்லை!       

எனக்கு, தூக்கம் இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டமான செயலாகும். அதிகபட்சம் ஒரு இரவு வேண்டுமானால் தூக்கம் இல்லாமல் இருந்திடுவேன். அதைப்பற்றி பெரியதாக அலட்டிக் கொள்ளமாட்டேன்.

சில நேரங்களில் என் கட்டுப்பாட்டை மீறி, தூக்கம் இல்லாதபடி சூழ்நிலைகள் அமைந்துவிடுகின்றன. ஒரு முறை சரக்கு லாரிகள் நிறுத்தப்படும் இடத்தில், தூங்குவதற்காக சென்றிருந்தேன். அங்கிருந்த லாரி ஓட்டுனர் ஒருவர் நான் நுழைந்ததும், என்னை டி.வியில் பார்த்திருந்தாராம்; அதனால் எனக்கு உணவு வாங்கிக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார்.

பின் ஒருவர் பின் ஒருவராக பல லாரி டிரைவர்கள் என்னை சுற்றி நின்றுக் கொண்டு அடுக்கடுக்காக, உள்ளத்தில் அமைதியை வளர்பது எப்படி என்று பலவாறு கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். முழு இரவும் இப்படி அவர்களுடன் பேசிய படியே கழிந்தது. பொழுது விடிந்ததும் காலை சிற்றுண்டியை வாங்கி கொடுத்தனர். அதை உண்டப்பின் அங்கிருந்து கிளம்பினேன். 

இன்னொரு அனுபவத்தினை சொல்கிறேன் கேளுங்கள். ஒரு முறை ஒரு லாரி ஓட்டுனர் என்னிடம், "நீங்கள் ஒருமுறை டி.வியில், நமக்குள் முடிவே இல்லாத சக்தி ஊற்றெடுக்கிறது என்று சொன்னீர்கள் இல்லையா? என் அனுபவம் ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள்" என்று தனது அனுபவத்தினைக் கூறினார். 

"ஒரு முறை ஒரு டவுன் முழுதுமே வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. முதலில் எதுவும் யாருக்கும் உதவி செய்யும் மனமெல்லாம் எனக்கு இருக்க இல்லை. ஆனால் ஏதோ ஒரு சக்தி, வெள்ளத்தால் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற என்னை தூண்டியது. நானும் அந்த பணியில் ஆர்வமாகி, பலரையும் வெள்ளத்தில் இருந்து மீட்கும் பணியில் ஈடுப்பட்டேன். பசித் தூக்கம் எல்லாம் மறந்து அந்த சேவையில் என்னை நானே மறந்த நிலையில் முழுவதுமாக ஈடுபட்டேன். எனக்கு சோர்வு என்று எதுவும் ஏற்படவே இல்லை.

ஆனால் இப்போது, அவ்விதமான முடிவில்லாத சக்தி என்னுள் ஊற்றெடுப்பதில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

நான் அவரை, "இப்போது எதன் பொருட்டு வேலை செய்கிறீர்கள்" என்றுக் கேட்டேன். அதற்கு அவர் சிறிது தயக்கத்துடன், "பணத்திற்காகத் தான்" என்று சொன்னார்.அப்படி என்றால், நீங்கள் கூறுவது சரிதான். 


"முடிவேயில்லாத சக்தி, எல்லோருக்கும், நன்மை விளைவிக்கும் செயலில் ஈடுப்பட்டால் மட்டுமே, உங்களுக்குள் ஊற்றெடுக்கும். அந்த சக்தியை அடைய வேண்டுமானால், உங்களின் சிறு எல்லையை பாதுகாக்கும் சுயநலச் சிந்தனையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உலகத்திற்கு எதைக் கொடுக்கிறீர்களோ, அது தான் பல மடங்கு பெருகி உங்களுக்கு திரும்பி வருகிறது. இது தான் இயற்கை விதியின் இரகசியம்" என்று சொன்னேன்.

அமைதி தூதுவர் - காந்தி மகாத்மா!


பங்காளி! அமைதிப் பயணி, இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... 

சொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!    

10 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ஓஜஸ் said...

ME THE FIRST

ரவி said...

என்னுடைய ஓட்டுகளை போட்டுட்டேன்.

அருண் பிரசாத் said...

நல்ல பதிவு....

சரி நன்மை செய்தாலும் சிலர் திருந்துவது இல்லையே ஏன்? அவர்களுக்கும் நன்மைதான் செய்ய வேண்டுமா?

THOPPITHOPPI said...

ISO கம்பெனிக்கு ஆட்கள் தேவை

http://govindha420.blogspot.com/2010/09/iso.html

என்னது நானு யாரா? said...

@அருண் பிரசாத்

//சரி நன்மை செய்தாலும் சிலர் திருந்துவது இல்லையே ஏன்? அவர்களுக்கும் நன்மைதான் செய்ய வேண்டுமா?//

தீயதை நன்மையால் வெல்லுவது தான் ஆன்மீகத்தில் வளர்வதின் அறிகுறி! உங்களின் மனப்பக்கும வளர வளர இயேசு பிரான் சொன்னார் இல்லையா? இன்னதென்று அறியாமல் செய்கின்றனர். அவர்களை மன்னியும் என்று. அது தான் உயர்ந்த சிந்தனை. வன்முறை ஒழிய வேண்டும் என்றால் வேறு வழி ஒன்றும் இல்லை.

என்னது நானு யாரா? said...

படித்துப் பார்த்து கருத்து இட்ட உங்கள் அனைவருக்கும் நன்றிகள்!

வாழ்க வளமுடன்!

வெட்டிப்பேச்சு said...

அருமையான பதிவு.

தற்சமயம் அவசியமான பதிவு கூட.

நன்றிகள்

அன்பன்

வேதாந்தி.

suneel krishnan said...

இயற்க்கை விதி இது தான் நாம் உலகிற்கு கொடுப்பதையே பல மடங்கு நமக்கு திருப்பி தருகிறது

த.வசந்தகுமார் said...

உந்தன் வினோதமான அனுபவம் என்னை சற்று சிந்திக்க வைத்தது.

என்னது நானு யாரா? said...

@த.வசந்தகுமார் பண்ருட்டி பேர்பெரியான்குப்பம்.

அட நம்ப பேரை நீங்களும் வைச்சிருக்கீங்களே! உங்க பேரைக் கேட்டு ரொம்ப சந்தோஷம்! அமைதிப் பயணியோட வினோத அனுபவங்கள் அருமையா இருந்தது இல்லையா? அவங்க எனக்கு மானசீக குருங்க! உங்க வருகைக்கும் கருத்துக்கும், ரொம்ப நன்றிங்க நண்பரே!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!