என்ன ஆச்சி! ஒரே யோசனையா இருக்கீங்க போல இருக்கு? கையில என்ன, ஏதோ கல்யாண பத்திரிக்கை போல இருக்கே?
வாப்பா ராசு! ஒரே யோசனையா தான் இருக்கு! கொஞ்சம் பயமாவும் இருக்குப்பா!
ஆச்சி! இந்த மாதிரி கல்யாணத்துக்கு Chance கிடைச்சா போகலாம் இல்லையா, நீங்க? |
எதைபத்தி சொல்றீக ஆச்சி? விளக்கமா சொன்னா தானே புரியும்?
'ஆடம்பரமா கல்யாணத்தை செய்றேன்னு' ஜனங்க செய்ற அட்டகாசத்தை நினைச்சித் தான் ஒரே பயமா இருக்குப்பா! பத்திரிக்கை மேல பத்திரிக்கையா வெச்சிட்டு போறாங்க நம்ப பாசகார ஜனங்க! எல்லோருமே உறவுகாரங்க வேற! போகாம தட்டமுடியுதா சொல்லுபா?
இதில யோசனை பண்ணுறதுக்கு என்ன இருக்கு? சும்மா ஜம்முன்னு போயிட்டு வரவேண்டியது தானே ஆச்சி? என்னையெல்லாம் ஒரு மனுஷனாவே மதிச்சி யாரும் பத்திரிக்கை எதுவும் வைக்க மாட்டேங்கிறங்க. எனக்கு எவ்வளவு கவலையா இருக்கு, தெரியுமா உங்களுக்கு? நீங்க என்னாடான்னா...
சரி ராசு, நீயே சொல்லு! கல்யாண சாப்பாடுன்னு ஒன்னு போடறாங்களே கல்யாணங்கள்ல! அதை சாப்பிட்டா விளங்குமா?
மாசத்தில குறைஞ்சது 10, 12 கல்யாணங்கள்ல கலந்துக்க வேண்டியதா இருக்கு! ஆனா அங்க கொடுக்கிற சாப்பாடு எல்லாமே அசிடிட்டியை கிளப்பி விடற மாதிரியே இருக்கேப்பா!
ஒரு வேலை கேட்டரிங்காரங்களுக்கும் ஜெலுசில் மாத்திரை கம்பனிகாரங்களுக்கும் ஏதாவது இரகிசிய ஒப்பந்தம் இருக்குமோன்னு கூட பல சமயத்தில சந்தேகமா இருக்கு! ஒன்னும் புரிய மாட்டெங்குது.
ஒரே சமயத்தில 15, 20 ஐயிட்டம் வைக்க வேண்டியது. எல்லா ஐயிட்டத்திலேயும் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டா கூட 4 வயிறு வேணும் போல இருக்கு, இதையெல்லாம் வேஸ்ட் பண்ணாம சாப்பிடறதுக்கு!
அது முடிஞ்சி வெளியே வந்து பாத்தா ஐஸ்கிரிம், ஃப்ரூட் சேலட்ன்னு வைக்கவேண்டியது. எல்லாத்தையும் ஒரு கைபாத்திடலாம்னு சாப்பிடறவங்களை பாத்தா எனக்கு ஆச்சரியமாவும் இருக்கு ஒரு பக்கம்! இன்னொரு பக்கம் கவலையாவும் இருக்கு!
இவங்கயெல்லாம் கடோத்கஜன் பரம்பரையோ, இல்ல ராவணனோட தம்பி கும்பகரணனுக்கு சொந்தகாரங்களோன்னு எனக்குபடுது ராசு!
சாப்பிட்ட பின்னாடி மலைபாம்பு கணக்கா ஒரு ரெண்டு, மூனு மாசம் வேற எதுவும் சாப்பிடாம, ரெஸ்ட் எடுக்க போயிடுவாங்களோன்னு பாத்தா, அதுதான் இல்ல! அடுத்து வர்ற கல்யாணத்திலேயும் இதே பார்ட்டீங்க ஆஜர். எப்படி முடியுது இவங்களாலன்னு எனக்கு புரியவே மாட்டேங்குதுப்பா!
இவங்களுக்கு, கார், பைக்ல எல்லாம் பெட்ரோல் டாங்க்ல ரிசர்வ்ன்னு ஒரு அறை வெச்சி வருமே, அதுபோல 3, 4, அறைங்களை ஸ்பெஷலா, ரிசர்வா வயித்துக்குள்ள வெச்சி கடவுள் படைச்சிட்டானோன்னு கூட தோனும்!
பேசாம இந்த மாதிரி ஃபுள் கட்டு கட்டுற பார்ட்டிங்களை எல்லாம் ஒட்டுமொத்தமா நாடு கடத்திட்டோம்னா, ஒருவேலை நாட்டில இருக்கிற உணவு பஞ்சம் எல்லாம் தீர்ந்திடுமோன்னு கூட ஒரு யோசனை மண்டைக்குள்ள ஓடுது அப்பப்போ...
ஆச்சி! நல்ல நல்ல யோசனையா வைச்சிருக்கீங்க. பேசாம உங்களை பிரதமமந்திரி சீட்ல உட்காரவைக்கலாம் போல இருக்கே! இந்த ஜனங்களுக்கு தெரியமாட்டேங்குதே!
அடபோப்பா நீ ஒன்னு! இவங்க ஆரோகியத்தை பத்தி கவலைபட்டு சொன்னாக்கா, என்னையே நீ கிண்டல் அடிக்கறியே! இவங்களுக்கு அசிடிட்டி பிராப்ளம் எல்லாம் வராதா?
ஆச்சி! அவங்க எல்லாம், வேலை செய்றதில வேணா, “கைபுள்ள” கணக்கா இருக்கலாம், ஆனா சாப்பிடற விஷயத்தில எல்லோருமே “சூனா..பானாவா” இருப்பாங்க! எல்லாருமே சூரபுலிங்க தான் தெரியுமா?
ஜெலுசில் மாத்திரைகளை கிலோ கணக்கில வாங்கி ஸ்டாக் வைச்சுப்பாங்க. சாப்பிட்டு முடிச்ச கையோட பாக்கு தாம்பூலம் போடறதோடு, இந்த அசிடிட்டி மாத்திரைகளையும் சேர்த்து போட்டுப்பாங்க.
சரி அதுக்காக நீங்க ஏன் கவலைபடுணும் ஆச்சி! நீங்க வெறுமனை போய் மணமக்களை பாத்து வாழ்த்திட்டு மட்டும் வரலாமே?
அப்படி நம்பளை கண்டுகாம விட்டா தான் பரவாயில்லையே! எங்கே விடறாங்க நம்ப பாசகார உறவுகாரங்க..? நீங்க கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும்னு ஒரே அடம்பிடிக்கறாங்க அப்பு! இந்த அன்பு தொல்லை இருக்கே, அது வன்முறைக்கு மேல கொடுமையானதுப்பா! அதை அனுபவிச்சி பாத்தா தான் தெரியும்!
இதில இன்னொரு விஷயம், கல்யாணதை நினைச்சே கதிகலங்கற சங்கதி என்னான்னா, லைட்ம்யூசிக்ன்னு வைச்சி மனுஷங்களை இம்சை படுத்துறாங்க பாரு ராசு! அது பெரிய டார்சர்டா! யாருடா கண்டுபிடிச்சா இந்த லைட்மியூசிக்கை? அவன் மட்டும் என் கையில மாட்டினா, மவனே அவன் சட்னிதான்!
ஆச்சி! என்னா உங்களுக்கு இம்புட்டு கோபம் வருது?
கோபம் வராதா பின்ன? என்னா ஒரு இம்சைங்கிற. ஹிட்லர் உசிரோட இருந்த காலத்தில இப்படி ஒரு விஷயம் இருக்குங்கிறதை பத்தி கேள்விபட்டிருந்தாருன்னா, அவரு Concentration Camp எல்லாம் வைச்சி, மனுஷங்களை சாகடிக்க ரொம்ப கஷடபட்டி இருந்திருக்க மாட்டாரு! இந்த லைட் ம்யூசிக் ட்ரூப்புகளை அதிகமா ஏற்படுத்தி, நாடு முழுக்க, அங்க அங்க ரொம்ப ஈஸியா ஜனங்களை சாவடிச்சி இருந்திருப்பாரு.
ராசு! இப்ப புரியுதா ஏன் நான் கவலையா இருக்கேன்னு?
எனக்கும் டவுட் தான் ஆச்சி! பத்திரிக்கை வைச்சி எல்லோரையும் கூப்பிட்டு, கல்யாணம்னு ஒரு விழா நடத்துறப்போ, எல்லா உறவுகாரங்களும், நண்பர்களும், ஒன்னா சேர்ந்து, ஆசை தீர, பேசலாம்னு வந்தாக்கா, இப்படி லைட்ம்யூசிக் ரோதனை!
யாரு பேசறதும், யார் காதிலும் விழறதில்ல. கத்தி கத்தி பேசி தொண்டையில ஒரே எரிச்சல், வலி வந்திடுது. காது ஜவ்வு எல்லாம் கிழிஞ்சிடுமோன்னு ஒரே பயமா இருக்கு! கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே எப்படா ஓடலாம்னு இருக்கும். மண்டபத்தை விட்டு வெளியே வந்த பின்னாடி கூட ஒரு 1 மணி நேரத்துக்கு காது சரியா கேட்கமாட்டேங்குது... காது அடைச்சிகிட்டு இருக்கும்.
ராசு! நாட்டில எதை எதையோ தடை செய்றாங்களே! பேசாம இந்த லைட்ம்யூசிக் ட்ரூப்களை எல்லாம் தடை செய்றேன்னு எந்த கட்சியாவது சொன்னா, அவங்களுக்கு தான் என் ஓட்டு! அந்த கட்சி மெஜாரிட்டி ஓட்டு வாங்கி ஜெயிச்சிடும்னு நினைக்கிறேன்.
ஆச்சி! நான் ஒரு ஐடியா சொல்றேன் கேளுங்க! ஸ்டார்ங்கா ஒரு டிஷிஷன் எடுங்க! யாரை பத்தியும் கவலை படாதீங்க! பத்திரிக்கை கொடுக்க வர்றவங்ககிட்டே, கல்யாணத்தில இந்த மாதிரி அசிடிட்டி உணவு தான் இருக்குமா, இந்த டார்சர் தர்ற லைட்ம்யூசிக் தான் இருக்குமான்னு ஒரே கண்டிஷனா கேளுங்க.. உங்களுக்கு ஒத்து வர்ற கல்யாணங்கள்ல மட்டும் கலந்துக்கோங்க! அப்படி இல்லாத பட்சத்தில கலந்துக்க வேணாம்!
சரியாத்தான் சொல்ற ராசு! நீ சொல்றது தான் சரின்னு படுது!
மக்களே! உங்களுக்கு எது சரின்னு படுது? கீழே கருத்து பெட்டியில சொல்லிட்டு போங்க...
எல்லோருக்கும் விநாயக சதூர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்
எல்லோருக்கும் விநாயக சதூர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்
சரி, இப்போ ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டா! நானும் Privilaged Gang–ல சேர்ந்தாச்சி! புரியலையா! நம்ப Followers எண்ணிக்கை மூனு இலக்கத்தை தொட்டாசு!
எல்லோருக்கும் நன்றிங்க! நம்ப பதிவுகளை படித்த, படிக்கும், படிக்கபோகும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றீங்க... உங்க ஆதரவு தொடரணும்னு கேட்டுகிறேன்...
26 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
//சரி, இப்போ ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டா! நானும் Privilaged Gang–ல சேர்ந்தாச்சி! புரியலையா! நம்ப Followers எண்ணிக்கை மூனு இலக்கத்தை தொட்டாசு! //
Best wishesh...
அப்டின்னா கல்யாண வீட்டுல செருப்பு திருட மட்டும் போகலாமா?
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): உங்க வாழ்த்துக்கு நன்றிங்க ரமேஷ்!
//அப்டின்னா கல்யாண வீட்டுல செருப்பு திருட மட்டும் போகலாமா?//
இன்னமும் Junior லெவலிலேயே திருடிட்டு இருந்தா முன்னேறது எப்படி? உங்க திறமையை அதிகபடுத்திக்கோங்க.
செருப்பை விட்டு நல்ல Nike, Reebok Shoes ஏதாவது இருந்தா திருடுங்க. இந்த ஐடியாவை இரகசியமா உங்ககுள்ளேயே வைச்சிக்கோங்க ரமேஷ்!
கல்யாணத்தில மட்டுமில்லாம இந்த விஷேசங்களையும் மூக்கு முட்ட சாப்பிடுறேன்னு சாப்பிடுறாங்க பாருங்க! சாப்பிட்ட உடனே தூங்க வேற போயிடுவாங்க! என்ன ஆகும்? அது ஏன்னே தெரியலை சில பேர் மட்டும் கொலைப் பட்டினி கிடந்தவங்க மாதிரி அப்படி சாப்பிடுறாங்க!
@எஸ்.கே:
//மூக்கு முட்ட சாப்பிடுறேன்னு சாப்பிடுறாங்க பாருங்க! சாப்பிட்ட உடனே தூங்க வேற போயிடுவாங்க! என்ன ஆகும்?//
நச்சின்னு சொல்லிட்டீங்க உங்க கருத்தை. இது தான் பல சிக்கலுக்கும் காரணமாக இருக்கிறது. சரியா சொன்னீங்க நண்பா!
நூறுக்கு மேல followers! வாழ்த்துகள் நண்பரே!
(எனக்கு 94 தான் இருக்குங்கறதால லேசா என் காதுல புகை வர்றதை கவனிக்கலையே!)
நல்ல பதிவு பங்காளி...
நம்ம மக்கள் சாப்பிட்டாலே உடனே ஒரு குட்டி தூக்கம் போட்டுடுறாங்க... இதனால ஏதாவது பிரச்சனை வருமா.. அதை பற்றி கொஞ்சம் சொல்லு மக்கா...
நல்ல பதிவு. குட்டி தூக்கத்துக்கு பதில் ஒரு நீண்ட தூக்கம போடலாமா?
@பெயர் சொல்ல விருப்பமில்லை:
//எனக்கு 94 தான் இருக்குங்கறதால லேசா என் காதுல புகை வர்றதை கவனிக்கலையே!)//
எப்படி எழுதணும்னு சொல்லி கொடுக்கிற குரு நீங்க! குருவை மிஞ்சிய சிஷ்யனை மெச்சி வாழ்த்தறது தானே நல்ல குருவுக்கு அழுகு!
எத்தனை வெற்றிகள் வந்தாலும் எல்லா வெற்றிகளையும், உங்களை போல நல்ல உள்ளத்தோடு ஊக்கம் கொடுத்து பாராட்டுகிறவங்களுக்கு தான் சமர்பிக்க விரும்புகின்றேன்.
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
அசிடிட்டி உணவு,லைட்ம்யூசிக்
எனக்கும் இந்த ரெண்டும் அலர்ஜி. அழகா சொல்லிட்டீங்க.
//நம்ம மக்கள் சாப்பிட்டாலே உடனே ஒரு குட்டி தூக்கம் போட்டுடுறாங்க... இதனால ஏதாவது பிரச்சனை வருமா.. அதை பற்றி கொஞ்சம் சொல்லு மக்கா...//
அது தப்பு பங்காளி! கொஞ்ச நேரமாவது வெளியே மெது நடை நடந்தபின்னாடி சில ஏப்பங்கள் வந்தபின்னாடி தான் தூங்க போகணும். இல்லைன்னா, ஜீரண செயல் பாதிக்கபடும்.
பாராட்டுக்கு நன்றி பங்காளி!
@அருண் பிரசாத்
//குட்டி தூக்கத்துக்கு பதில் ஒரு நீண்ட தூக்கம போடலாமா?//
எந்த தூக்கமா இருந்தாலும் சாப்பிட்ட உடனே தூங்கபோக கூடாது அருண்!
@தமிழ் உதயம்:
//அசிடிட்டி உணவு,லைட்ம்யூசிக்
எனக்கும் இந்த ரெண்டும் அலர்ஜி. அழகா சொல்லிட்டீங்க.//
நீங்களும் நம்ப கட்சியா! ஒரே அலைவரிசையில யோசிக்கிறவங்களை சந்திக்கும் போது ஏற்படுகிற சந்தோஷமே தனி தான் போங்கள் நண்பரே!
நல்ல பதிவு சார். நம்ம வீட்டுக்கும் கொஞ்சம் வாங்க..
விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க
http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html
என்னாது நல்லா சாப்பிடகூடதா?? நான் போறேன் போங்க பங்காளி.. உங்க பேச்சி கா....
பங்காளி கலக்கிட்டீரு, பதிவு ஆரம்பிச்சி ஒரு மாசத்துக்குள்ள செஞ்சுரி அடிச்சிட்டீரு! சாதனை பண்ணிட்டீங்கப்பு! அப்பிடியே நம்ம வாழ்த்துக்களப் புடிச்சுக்குங்க!
நல்ல பதிவு வசந்த்
gelusil அதிகம் உபயோக படுத்துவதால் நெறைய கேடு இருக்கு , முடிஞ்சா வரை சுடு தண்ணீரில் சிறிது மிளகு போட்டு heavy meals க்கு அப்புறம் சாப்டால் கொஞ்சம் செரிமானம் ஆகும் .
சாப்ட உடனே தூங்க கூடாது செரிமானத்தை குறைக்கும் , படுக்கவும் கூடாது .
லைட் மியூசிக் எரிச்சல் தாங்க முடியவில்லை .
@Murali.R: உங்க வலைபக்கம் வந்து பாத்தாச்சு! கருத்தும் சொல்லி இருக்கேன். அவை உங்களுக்கு பிடிச்சிருந்தா ஏத்துக்கோங்க!
@TERROR-PANDIYAN(VAS): நல்லா சாப்பிடகூடாதுன்னு யாரு சொன்னா டெரர் பங்காளி? ஆரோகியமானதா சாப்பிடுங்கன்னு தான் சொல்றேன். செய்வீங்க இல்ல?
@பன்னிக்குட்டி ராம்சாமி:
//பங்காளி கலக்கிட்டீரு, பதிவு ஆரம்பிச்சி ஒரு மாசத்துக்குள்ள செஞ்சுரி அடிச்சிட்டீரு! சாதனை பண்ணிட்டீங்கப்பு!//
சாரே எல்லாம் உங்கள மாதிரி பெரிய மனுஷங்களோட சப்போர்ட் தான் காரணம். எப்பவும் உங்க ஆதரவை எதிர்பார்கிறேன் சாரே!
@dr suneel krishnan:
//முடிஞ்சா வரை சுடு தண்ணீரில் சிறிது மிளகு போட்டு heavy meals க்கு அப்புறம் சாப்டால் கொஞ்சம் செரிமானம் ஆகும் .
//சாப்ட உடனே தூங்க கூடாது செரிமானத்தை குறைக்கும் , படுக்கவும் கூடாது .//
அதிகமான தகவல்களை படிப்பவர்களுக்கு தந்து உதவி இருக்கிறீர்கள். நன்றி நண்பரே!
இனி வரும் சந்ததியினராவது லைட்ம்யூசில் இல்லாமல், நல்ல சூழ்நிலையில் வாழவேண்டும் என்பது எனது விருப்பம்.
Are you a Doctor ? You are giving wonderful natural-life tips. thanks
கல்யாண சமையல் சாதம் - இதே தலைப்பில் நான் எழுதிய பதிவை படித்து கமெண்ட் எழுதுங்களேன்.
http;//vedivaal.blogspot.com/2007/12/blog-spot.html
ஒத்த கருத்து.
சகாதேவன்.
@Madhavan:
நான் டாக்டர் இல்லைங்க அண்ணாச்சி! நான் படித்த பட்டம் M.Phil in Peace Making and Gandhian Thought.
எனக்கு காந்திய சிந்தனைகளில் ஈடுபாடு அதிகம். அதனால் அவர் கடைபிடித்த இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம் எனக்கும் பிடிக்கும். இதைபற்றி நிறைய படிப்பேன். இயற்கை மருத்துவர்கள், இயற்கை வாழ்வியல் சிந்தனையாளர்கள் என்று சந்தித்து கருத்துக்களை பரிமாறி கொள்வோம்.
என் வாழ்க்கையும் எளிமையாக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு மாற்றி கொண்டு வருகின்றேன்.
அதன் விளைவு தான் இந்த வலைபக்கம். நன்றி அண்ணாச்சி! நீங்க தொடர்ந்து வரணும்னு கேட்டுக்கிறேன்.
சகாதேவன்:
நண்பரே! படித்து பார்த்தேன். உணவு வீனாவதை மிகவும் நன்றாக நகைசுவையுடன் சுட்டி காட்டி இருக்கிறீர்கள்.
நீங்கள் சொன்னது போல் இப்போது கூலிக்கு மார் அடிப்பவர்கள் தான் இருக்கிறார்கள். உண்மையான அன்போடு உணவை வீனாக்காமல் பரிமாறுவது மிகவும் அரிதாகி விட்டது.
நன்றி நண்பரே! உங்களை போன்ற மூத்த பதிவர்கள் தொடர்ந்து என் வலைபக்கம் வந்து நிறை குறைகளை சுட்டி காட்ட வேண்டுகின்றேன்.
அப்பு, acidity க்கு ஒரு ஆப்பு வெக்கிரமாதிரி ஒரு மருந்து சொல்லிட்டு போங்க அப்பு.
@Anonymous:
//acidity க்கு ஒரு ஆப்பு வெக்கிரமாதிரி ஒரு மருந்து சொல்லிட்டு போங்க அப்பு//
Acidity-க்கு தானே? எண்ணெயில பொரிக்க பட்ட உணவுகள் எல்லாம் ரொம்ப குறைவா சாப்பிடுங்க.
வயிறு முட்ட சாப்பிடாதீங்க
தினம் ஒரு வேலை உணவாவது பச்சைகாய்கறி, பழங்கள் சேலட் செய்து சாப்பிடுங்க
காபி, டீ, Sweets எல்லாம் ரொம்ப ரொம்ப குறைச்சிடுங்க
நீராவியில வேகவைக்கபட்ட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்க.
அப்புறம் பாருங்க! உங்களுக்கு Acidity டா..டா காட்டிட்டு போயிடும்!
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!