பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

25 Sept 2010

முட்டையைத் தள்ளுங்க! ஜீவகாரண்யத்தை பாருங்க!


பங்காளி! மனித நாகரீகமாம்! ரொம்ப உயர்ந்த நாகரீகமாம்!


தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?


வள்ளுவரு நமக்குச் சொன்னது பங்காளி! உன் உடம்பை வளர்கிறதுக்காக மத்த ஜீவன்களோட உசிரை வாங்காதேன்னு சொல்றாரு! அப்படி மத்த ஜீவன்களோட மாமிசத்தை தின்னு உன் உடலை வளர்த்தா, தர்மம் எங்கே இருக்கப்போகுது சொல்லுன்னு ஸ்டார்ங்கா கேட்குறாருப்பா!

மனுஷங்க ராஷசக் கூட்டங்களா மாறி கும்பல் கும்பலா திறியறாங்கப்பா! என்னது மனுஷங்க ராஷசக் கூட்டமான்னு ஏன் கோபப்படற? உண்மை தான் சொன்னேன் பங்காளி.

நான் சொலறதக் கேட்டப்பின்னாடி, நீயே சொல்லு! சின்ன சின்ன இரும்புக் கூண்டுக்குள்ள, ஐந்தில இருந்துப் பத்து கோழிகளை அடைச்சு வைச்சிருக்காங்க. அதுங்க வாழ்நாள் முழுசும் நின்ற நிலையிலேயே தங்களோட ரக்கைங்களக் கூட விரிக்க முடியாதபடி ஒரு இறுக்கமான நிலையில அடைச்சி வைச்சிருக்காங்க. 

நினைச்சிப் பாரு! அதுங்க முட்டைங்க இடற காலம் 18ல இருந்து 20 மாசம் வரைக்குமாம். அதுக்குப்பின்னாடி, அதுங்களோட பயன் தீர்ந்தப்பின்னாடி கொலைச் செய்யப்படவேண்டியது தான்.

ஆனா அந்த 18 மாசமும் நின்னபடியே இருக்கணும்னா எப்படி இருக்கும் சொல்லு? அதைவிட கொலைச்செய்யப்படுறது எவ்வளவோ மேல் இல்லையா? இப்படி நரக வேதனை தினம் அனுபவிக்கிறதுக்குப் பதிலா கொலைச் செய்யப்பட்டா கூடப் பரவாயில்லைன்னு தான் அதுங்க மனசுக்குள்ள வேண்டிக்கும் இல்லையா?

காத்துப் புகாத கூடங்கள்ல ஒரு லட்சத்துக்கும் மேலே கோழிகளை வைச்சிருக்காங்க. இப்படி அடைச்சி வைச்சிருகிறதால அதுங்க ரக்கையெல்லாம் உதிர்ந்துப்போகுது, அதுங்க இயற்கையா செய்ற மண்ணை கிளறி விடறது, மண்ணில புரல்றதுன்னு, தங்களோட ரக்கைங்களை நீவி, சுத்தம் செய்றதுன்னு, எந்த செயலையும் செய்ய விடுறதில்ல. இந்த நெரிச்சலான சூழ்நிலையால பலக் கோழிங்க மிதிப்பட்டே செத்துப்போதுங்க. நோய் தொற்றி இறந்துப்போறது, அடிக்கடி நடக்குதுப்பா! 



இப்போ சொல்லப்போறது இன்னும் ரொம்பக் கொடுமை! தெரியுமா? கோழிகள் நெருக்கமா அருகருகே இருக்கிறதால, ஒன்னு இன்னொன்னை கொத்திக் காயப்படுத்திக்காம இருக்கிறதுக்கு அதுங்களோட மூக்குகளை உடைக்குறாங்கப்பா, இதுக்கு De-beaking -ன்னு பேராம். அதுவும் எப்படி? எந்த ஒரு மயக்கமருந்தும் கொடுக்காமலே. கற்பனைப் பண்ணிப்பாரு! அந்த கொடுமை எப்படி இருக்கும்னு. அதுங்களுக்கு நீங்காத துன்பமா இது அமைஞ்சுடுது.

இங்கே கீழே இணைச்சிருக்கிற வீடியோவைத் தான் கொஞ்சம் பாரு பங்காளி! உனக்கே உண்மைத் தெரியும்!



வீடியோ படம் எப்படி இருக்கு! பார்கவே பயங்கரமா இருக்குல்ல. 

வருஷம் பூராவும் முட்டை இடுகிற மாதிரி ஒளியையும், வெப்பத்தையும் கூடங்கள்ல செயற்கையா பாய்ச்சுறாங்க. கோழிகளுக்கு எப்பவுமே கோடைக்காலமா தெரியணும்ங்கிறதுக்காக இந்த ஏற்பாடு. 

தொடர்ந்து முட்டைகளை இடுறதால, அதுங்க எலும்புங்க எல்லாம் பலமில்லாம உடைஞ்சிப்போகுது.  Osteoporosis நோய் அதுங்களை தாக்குது. அதுங்களைப் பார்க்குறதுக்கேப் பரிதாபமா இருக்கு. நோய்வாய் பட்டு சீக்கிரமா செத்துப்போகுதுங்க.


மேல இருக்கிற வீடியோவையும் பாரு பங்காளி! 

இப்போ ஜீவகாரண்யத்தைப் பத்தி சொன்னேன் இல்ல. யோசிச்சிப் பாரு! இப்படி மத்த ஜீவன்களைக் கஷ்டப்படுத்தித் தான் நாம உயிர் வாழணுமான்னு நிதானமா யோசிச்சிப் பாரு!

நல்ல முடிவு எடுப்பேன்னு நம்புறேன். சீக்கிரமா அடுத்த முறை சந்திப்போம். வரேன்! வீட்டிலே எல்லோரையும் கேட்டதா சொல்லு!  

27 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எங்க வீட்டுக்கு பக்கத்தில கோவில் கொடைக்குனு ஒரு ஆடு வளர்த்தாங்க. இலை, தளைன்னு அப்படியொரு சாப்பாடு. நான் மாடி ஏறுறப்போ என்னைப் பரிதாபமா பார்த்து கேட்கும் " இவனுக எதுக்கு இப்படி கவனிக்கிறாங்கனு புரியலையே?"
"கொடை வரை கொஞ்சம் பொறுத்துக்கோ, அப்புறம் புரிஞ்சுடும்"
எந்த ஒரு உயிரினமும் அளவுக்கு அதிகமா அதிகரிச்சிடாம காக்றதுக்கு தான் இந்த ஏற்பாடு அது இப்போ கொல்றதுக்காகவே படைக்கிறதா ஆயிடுச்சு.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

என்ன கொடுமைங்க இது?? வீடியோ பார்த்தேன்... :(
வாயில்லா ஜீவனை..வதைக்காதே..!!
பகிர்வுக்கு நன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாவம் கோழிப்பா...

செல்வா said...

//
அதுங்க வாழ்நாள் முழுசும் நின்ற நிலையிலேயே தங்களோட ரக்கைங்களக் கூட விரிக்க முடியாதபடி ஒரு இறுக்கமான நிலையில அடைச்சி வைச்சிருக்காங்க. //

ஆமாங்க., ரொம்ப கொடுமையா இருக்கும் ..!!

செல்வா said...

// அதுங்க இயற்கையா செய்ற மண்ணை கிளறி விடறது, மண்ணில புரல்றதுன்னு, தங்களோட ரக்கைங்களை நீவி, சுத்தம் செய்றதுன்னு, எந்த செயலையும் செய்ய விடுறதில்ல.//

உண்மைதாங்க ., நாம வீட்டுல வளர்க்குற நாட்டுக்கோழி அப்படிங்கிற இனத்துக்கும் பண்ணைல வளர்க்கிற கோழி இனத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு ..!!

செல்வா said...

///நல்ல முடிவு எடுப்பேன்னு நம்புறேன்.//
கொஞ்சம் கொஞ்சமா கொறைச்சுக்கலாம்னு இருக்கேன் ..!!

எஸ்.கே said...

ஒரு உயிரினம் இயற்கையாக வாழும் வாழ்க்கையை கூட வாழவிடாமல் தடுப்பது, அதிக லாபத்திற்காக இப்படி செய்வது பயங்கர கொடூரம். இப்படி செய்து அதை சாப்பிடுவது தேவையே இல்லை.

Unknown said...

தலைவரே வீடியோ பார்த்தேன் மனசுக்கு கஷ்டமா இருக்கு, கொஞ்சம் கொஞ்சமா சைவத்துக்கு மாற முயற்சி பண்றேன் ,,

ராவணன் said...

யோவ்(உரிமையாய்)...அதத் திங்காதே..இதத் திங்காதே என்றால் நாங்கெல்லாம் சாகுரதா...
ரொம்ப சிம்பிளா...நம் உடல் ஒத்துக்கொள்ளும் எந்த உணவையும் நாம் உண்ணலாம்.
இதுதான் சரியான உணவு என்று ஒன்றுமே இல்லை.எனக்கு பால் ஒத்துவராது...புளித்த தயிர் ஒகே.
நானும் பல நூற்றாண்டுகளாக உயிரோடு உள்ளேன்.
நல்ல உணவு என்பது நம் உடல் ஒத்துக்கொள்ளும் உணவுகளே.நான் பச்சக்கறிகூட சாப்பிடுவேன்...நீங்க தப்பித் தவறிகூட சிங்கை வராதீர்கள்.
இது எப்படி?

cheena (சீனா) said...

அன்பின் பங்காளி

நான் பொறவிச் சைவம் பங்காளி

பாக்கவே பரிதாபம் - இத நாமும் சாப்பிடுறோம் - அவ்வளவு எளிதா வுட முடியாது .ம்ம்ம்ம்ம்

சரக்கு நிச்சயம் விக்கும் பங்காளி

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

ராவணன் said...

நான் உணவு உண்ணாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து பத்து நாட்களுக்கும் மேல் இருப்பேன்.
பரிசோதனை செய்துள்ளேன்.
அதற்காக சும்மா இருப்பதில்லை... தினமும் 12 மணி நேரம் வேலை செய்வேன்.
இப்போதுகூட தினமும் ஒரு வேளை, இரவில் மட்டுமே உணவு உண்பது என் பழக்கம்.சில ஆண்டுகளாக இதனைப் பழக்கியுள்ளேன்.
உணவு என்பது கட்டாயமல்ல...
அதிலும் நாம் உண்பது நம் உடலுக்கு ஒத்து வரக்கூடியதாய் இருக்கவேண்டும்.
அதுவே சிறந்த உணவு.
காற்றும் நீரும் சூழ்ந்திருக்க வெறும் வாயை மட்டும் சார்ந்திருக்கும் உயிர்கள் பாவம்.

என்னது நானு யாரா? said...

@நாய்க்குட்டி மனசு

//எந்த ஒரு உயிரினமும் அளவுக்கு அதிகமா அதிகரிச்சிடாம காக்றதுக்கு தான் இந்த ஏற்பாடு அது இப்போ கொல்றதுக்காகவே படைக்கிறதா ஆயிடுச்சு.//

மனித நாகரீகம் திசைமாறிப் போய்கிட்டு இருக்கு. அதனால தான் இத்தனைக் கொடுமைகளும். அஹிம்சை வழியைக் கடைப்பிடிக்கிற காலத்தை நோக்கி நாம பயணப்படணும். காலம் மாறும்! பார்ப்போம்! உங்க கருத்துக்கு நன்றி தோழி!

என்னது நானு யாரா? said...

@Ananthi

//என்ன கொடுமைங்க இது?? வீடியோ பார்த்தேன்... :(
வாயில்லா ஜீவனை..வதைக்காதே..!!//

பார்க்குறதுக்கே பாவமா இருக்கு இல்லையா ஆனந்தி. எல்லோருமே சைவ உணவு சாப்பிடறமாதிரி நிலைமை வந்தா தான் இந்த கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும்னு நினைக்கிறேன். நன்றி ஆனந்தி!

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//பாவம் கோழிப்பா//

போலிசு! நல்லதுப்பா! இதுவரைக்கும் கோழி பிரியாணி சாப்பிட்டு கிட்டு இருந்தன்னா, அதைக் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்க்ப்பா! வாயில்லா பிராணிங்களோட பாவம் நமக்கு வேணாம்.

என்னது நானு யாரா? said...

@ஜெய்லானி

வாத்தியாரே! நம்மையும் வலைசரத்தில அறிமுகம் செஞ்சு வைச்சதுக்கு நன்றிங்க! நீங்க புள்ளக்குட்டியோட சந்தோஷமா இருக்கணும்னு வேண்டிக்கிறேன்.

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்

//கொஞ்சம் கொஞ்சமா கொறைச்சுக்கலாம்னு இருக்கேன் ..!!//

நன்றி தம்பி! நல்ல ஒரு முடிவு எடுத்திருக்கீங்க செல்வா! வாழ்க வளமுடன்!

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

//ஒரு உயிரினம் இயற்கையாக வாழும் வாழ்க்கையை கூட வாழவிடாமல் தடுப்பது, அதிக லாபத்திற்காக இப்படி செய்வது பயங்கர கொடூரம். இப்படி செய்து அதை சாப்பிடுவது தேவையே இல்லை.//

உங்க கருத்து எல்லா இடத்திலேயும் பரவி, மிருகங்களை வதைப்பது இல்லாத நிலை வருமானால் அது எவ்வளவு நல்ல நிலையா இருக்கும். அதுதான் வாழும் சொர்க்கமா இருக்கும் என்பதில சந்தேகம் இல்ல.

என்னது நானு யாரா? said...

@கே.ஆர்.பி.செந்தில்

//தலைவரே வீடியோ பார்த்தேன் மனசுக்கு கஷ்டமா இருக்கு, கொஞ்சம் கொஞ்சமா சைவத்துக்கு மாற முயற்சி பண்றேன்//

நல்ல முடிவு அண்ணாச்சி! நம்ப வாழ்க்கை அமைதியா நடக்குறதுக்கு சைவ உணவு பழக்கம் முதல் படி. வாய் இல்லாத ஜீவன்களைக் கொடுமையில இருந்துக் காப்பாத்தினாலே மனசுக்கு ஆனந்தம் கிடைக்கும் அண்ணாச்சி! உங்க கருத்துக்கும், உங்க முடிவுக்கும் நன்றி அண்ணாச்சி!

என்னது நானு யாரா? said...

@cheena (சீனா)

//நான் பொறவிச் சைவம் பங்காளி

பாக்கவே பரிதாபம் - இத நாமும் சாப்பிடுறோம் - அவ்வளவு எளிதா வுட முடியாது .ம்ம்ம்ம்ம்

சரக்கு நிச்சயம் விக்கும் பங்காளி//

வீடியோக்களைப் பார்க்கவே பரிதாபமா இருக்கு இல்லை ஐயா? சிறுக சிறுக எல்லோருமே அசைவம் சாப்பிடறதை விட்டா எவ்வளவு நல்லா இருக்கும் இந்த பூமி!

உங்க நல்ல மனசு நினைக்கும்போது எனக்கு மலைப்பா இருக்குதுங்க ஐயா! ஒருத்தரை வாயார, மனசார பாராட்டுகிற குணம் உங்ககிட்ட நிறையவே இருக்கு. அது தெய்வீக குணமைய்யா!

உங்க பாராட்டு எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்குது. நன்றி ஐயா!

என்னது நானு யாரா? said...

@ராவணன்

//நான் உணவு உண்ணாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து பத்து நாட்களுக்கும் மேல் இருப்பேன்.
பரிசோதனை செய்துள்ளேன்.
அதற்காக சும்மா இருப்பதில்லை... தினமும் 12 மணி நேரம் வேலை செய்வேன்.
இப்போதுகூட தினமும் ஒரு வேளை, இரவில் மட்டுமே உணவு உண்பது என் பழக்கம்.சில ஆண்டுகளாக இதனைப் பழக்கியுள்ளேன்.//

அருமையான உங்களின் அனுபவங்களை கேட்க கேட்க மலைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது நண்பரே!

//காற்றும் நீரும் சூழ்ந்திருக்க வெறும் வாயை மட்டும் சார்ந்திருக்கும் உயிர்கள் பாவம்.//

இந்த அளவிற்கு ஆன்மீக சிந்தனை உலகத்தில வந்தா எவ்வளவு நல்லா இருக்கும் இல்லையா நண்பரே?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பதிவுக்கு நன்றி..
உண்மையில் மனிதனின் சைவ உணவை ஏற்றுக் கொள்ளும் வண்ணமே படைக்கப்பட்டிருக்கிறது..

ஊன் உண்ணும் விலங்குகளின் உடலைப்புக்கும் சைவ உணவாக தாவரப் பொருள்களை உண்ணும் விலங்குகளுக்கும் கூட உடலமைப்பில் வேறுபாடு உண்டு..

பதிவுக்கு நன்றி,இந்த செய்தி முன்பே அறிந்த ஒன்றுதான்..

சைவ உணவை வலியுறுத்தும் உலகளாவிய இயக்கம் ஒன்றின் வலைமனையில் இதைப் பார்த்திருக்கிறேன்...

என்னது நானு யாரா? said...

@ராவணன்

//யோவ்(உரிமையாய்)...அதத் திங்காதே..இதத் திங்காதே என்றால் நாங்கெல்லாம் சாகுரதா...
ரொம்ப சிம்பிளா...நம் உடல் ஒத்துக்கொள்ளும் எந்த உணவையும் நாம் உண்ணலாம்.
இதுதான் சரியான உணவு என்று ஒன்றுமே இல்லை.எனக்கு பால் ஒத்துவராது...புளித்த தயிர் ஒகே.
நானும் பல நூற்றாண்டுகளாக உயிரோடு உள்ளேன்.
நல்ல உணவு என்பது நம் உடல் ஒத்துக்கொள்ளும் உணவுகளே.நான் பச்சக்கறிகூட சாப்பிடுவேன்...நீங்க தப்பித் தவறிகூட சிங்கை வராதீர்கள்.
இது எப்படி?//

அண்ணாச்சிக்கு கோபம் வந்துடிச்சிப் போல! அண்ணாச்சி! மனசை அமைதிப்படுத்தி ஆன்ம சக்தியை பெருக்கி, மனிதன் உயர்ந்த நிலைக்கு முயற்சி சென்சு தெய்வீக நிலை அடையணும் இல்லையா? அதற்காகத் தான் இதெல்லாம் சொல்றேன் அண்ணாச்சி!

நான் சிங்கைக்கு எல்லாம் வரமாட்டேன். நல்ல ஆலோசனை சொன்னீங்க. அங்க சைவ உணவை பார்குறதே அபூர்வம்னு சொல்றாங்க. உண்மை தானா அண்ணாச்சி?

என்னது நானு யாரா? said...

@அறிவன்

//உண்மையில் மனிதனின் சைவ உணவை ஏற்றுக் கொள்ளும் வண்ணமே படைக்கப்பட்டிருக்கிறது..

ஊன் உண்ணும் விலங்குகளின் உடலைப்புக்கும் சைவ உணவாக தாவரப் பொருள்களை உண்ணும் விலங்குகளுக்கும் கூட உடலமைப்பில் வேறுபாடு உண்டு..//

ஆமாம் நண்பரே! உங்க கூற்று ரொம்ப சரியானது. நானும் அதைப்பத்தி பதிவுகளை எழுதி இருக்கிறேன். நேரம் இருக்கும்போது படிங்க நண்பரே!

//பதிவுக்கு நன்றி,இந்த செய்தி முன்பே அறிந்த ஒன்றுதான்..

சைவ உணவை வலியுறுத்தும் உலகளாவிய இயக்கம் ஒன்றின் வலைமனையில் இதைப் பார்த்திருக்கிறேன்.//

அப்படியா! நீங்கள் நல்லா விழிப்புணர்வு அடைஞ்சிருக்கீங்க நண்பரே! ரொம்ப சந்தோஷம்! மத்தங்களுக்கு கொஞ்சம் விழிப்புணர்வைக் கொடுக்கலாம்னு தான் இந்த பதிவை இட்டேன்! உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

கொல்லான் said...

பங்காளி, சரியா சொன்னீங்க.

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும்.

என்னது நானு யாரா? said...

@கொல்லான்

//பங்காளி, சரியா சொன்னீங்க.

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும்.//

உண்மை தான் நண்பரே!திருக்குறள்ல நல்ல நல்ல கருத்துக்கள் இருக்கு. அதன்படி வாழ்ந்தாலே நம்ப பூமி சொர்கம் தான். நன்றி நணபரே!

chandar said...

ரொம்ப கொடுமை, நான் சைவமாய்டேன்....

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

இந்த கேள்விக்கு பதில் சொல்லா விடில் வலையுலகம் உங்களை சும்மா விடாது......இதற்கு பதிலிருந்தால் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்திற்கு அனுப்புங்கள் நண்பரே.....

சில வருடங்களுக்கு முன் நீங்கள் எழுதிய கட்டுரையை இப்போ தான் படிக்க நேரிட்டது...மனிதன் தான் ருசியாக சாப்பிடுவதற்கு உங்கள் கட்டுரையில் உள்ள வீடியோ படத்தில் உள்ளதுபோல கொடுமை படுத்துவதை வேண்டுமானால் கண்டிக்கலாமே தவிர உயிர் வதையே கூடாது என ஜீவகாரண்யத்தை பேசுவது அறிவிற்கு பொருந்தாது...


நண்பா அசைவத்தை சாபிடக்கூடாது என்றால் மனிதன் உயிர்வாழ முடியுமா என்பதை யோசித்தாலே இந்த ஜீவகாருண்யம் என்பதெல்லாம் வெத்து பேசித்தான் என்பது விளங்கும்.
சைவத்தை மட்டும் நம்பி உயிர் வாழ முடியுமா-இன்றைய அறிவியல் சொல்கின்றது மரம்,செடி,கொடி இவை அனைத்திற்கும் உயிர் உண்டு,அதனால் தான் அவைகள் ஆக்சிஜனை வெளியிட்டு,மனிதர்கள் விடும் கார்பன்டைஆக்சைடை உள் இழுக்கிறது மேலும் தண்ணீரை உட்கொண்டு வளர்ந்து காய்,பழம்,பூ என்று இவை அனைத்தையும் தருகின்றது...செடியிலிருந்து வெண்டை,தக்காளி,மிளகாய்,ETC....அதுபோல மரங்களில் இருந்து தேங்காய்,ஆப்பிள்,..ETC...கொடியிலிருந்தும் இதுபோல நிறைய காய்கறிகள்,கீரைகள்....ETC...காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும் என்றாலும் அதை மரங்களில் இருந்து பிய்த்து தான் சாப்பிடவேண்டும்.உங்கள் பாசையில் சொல்வதென்றால் மரங்கள் உயிருடன் இருக்கும் போதே அதன் உறுப்புகளை மயக்க மருந்தின்றி பிடுங்குவது,மனிதன் உயிருடன் இருக்கும் பொது அவன் உறுப்புகளை மயக்கமருந்தின்றி பிடுங்கி எரிவது போல..என்ன மரம்,செடிகள் போடும் அலறல் உங்கள் காதில் கேட்டகவில்லை அவ்வளவே...இதற்கு உயிருள்ளதால் ஒரு வகையில் இதுவும் அசைவமே...
தண்ணீரை மட்டுமாவது குடித்து உயிர் வாழலாம் என்றால் அதுவும் முடியாது SORRY...
தண்ணீரில் கூட பக்டீரியா,வைரஸ் இன்னும் பல கிருமிகள் உள்ளது என்று அறிவியல் தான் சொல்கின்றது..அதற்கு உயிருள்ளதாலே இனபெருக்கம் செய்கின்றது என்று...தண்ணீரை அப்படியே குடித்தால் உயிருடன் அதை விழுங்குகிறீர்கள்,சுடு தண்ணீர் குடித்தால் அதை சூப் வைத்து சாபிடுவது போல..உங்கள் பாசையில் சொல்வதென்றால் மனிதனை வெந்நீரில் உயிருடன் வேக வைப்பது போல...இதற்கு உயிருள்ளதால் ஒரு வகையில் இதுவும் அசைவமே..
இப்போ சொல்லுங்க ஒரு உயிரை கொல்லாம நாம் உயிர் வாழ முடியுமா...ஆடு,மாடு,கோழி...etc..இவைகளில் மனிதனுக்கு ஆரோகியமானத்தை மனிதன் சாபிடலாம்,அது போல காய்கறிகளிலும் தான்...இறைவனால் இவை எல்லாம் படைக்க பெற்றது நாம் சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும் என்பதற்காக தான் நண்பா...ஜீவகாருண்யம் என்பதெல்லாம் வெறும் மேடை பேசித்தான் நண்பா உயிர் வாழ உதவாது...ஜீவகாருண்யம் பேசுபவர்கள் ஏன் கொசுவை அடிக்க வேண்டும் என்று m.r.ராதா ரத்தக் கண்ணீர் என்ற படத்தில் பேசுவதுதான் நினைவிற்கு வருகிறது.....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!