பங்காளிகளே வாங்க! காந்தித் தாத்தா என்ன சொல்றாரு கேட்போம்!
![]() |
தாத்தா...! நல்லா இருக்கீங்களா? |
பெண்கள் நீண்ட காலமாகவே அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். ஆண்களே எல்லா சட்டதிட்டங்களையும், சம்பிரதாயங்ககளையும் தீர்மானித்த நிலைதான் நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.
அஹிம்சையை மையமாகக் கொண்ட வாழ்க்கைமுறையில், ஆணுக்கு, தன்னுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் உரிமை எவ்வளவு இருக்குமோ, அதே அளவு பெண்ணுக்கும் தன்னுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் உரிமை இருக்கும்.
அஹிம்சை கடைப்பிடிக்கப்படும் சமூகத்தில், கடமை செய்தலின் பலனே உரிமையாகப் பெறப்படுகிறது. அந்த சமூகத்தில் உறவுகளுக்கு மத்தியில் நிலவும் சட்டதிட்டங்கள் எல்லோரின் ஒத்துழைப்பு மற்றும் ஒப்புதலின் பேரிலேயே இயற்றப்படுகிறது. எந்த சட்டமும் வெளியிலிருந்து திணிக்கப்படமாட்டாது.
ஆண்கள், பெண்களிடம் கொள்ளும் உறவுமுறையில், இந்த உண்மையின் சாரத்தை முழுதுமாக விளங்கிக்கொள்ளவில்லை. அவர்கள், பெண்களுக்கு எஜமானர்கள் போலவும், பிரபுக்கள் போலவும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். சரியாக சொல்வதென்றால், அவர்கள் நண்பர்கள் போலவும், உடன்பணிபுரிவோர் போன்றே பெண்களிடம் நடந்துக்கொள்ள வேண்டும்.
பெண்கள் எல்லோரும் பலகாலமாக அடிமைப்பட்ட கிழவனைப்போன்றே இருக்கிறார்கள். அவன் தான் அடிமை நிலையிலிருந்து விடுதலை அடைய முடியுமென்றே தெரியாத நிலையில், நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறான்.
விடுதலைக்கிடைத்த நொடியில், அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் போய்விடுகிறது. பெண்களும், அவ்வாறே பலகாலமாக ஆண்களுக்கு அடிமைகள் என்றே தங்களைக் கருதிக் கொள்ளுமாறு அறிவுருத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
அரசாங்கத்தில் இருப்போர் பெண்களுக்கு சம வாய்ப்புகளைக் கிடைக்கச் செய்யவேண்டும். அப்போது பெண்களும் ஆண்களுக்கு சமமாக தங்களின் பணிகளைச் செய்வர்.
எல்லோரும் மனம் வைத்தால், இந்த புரட்சியை நடைமுறை சாத்தியமாக்குவது மிகவும் எளிய ஒன்று தான். அரசாங்கத்தில் இருப்போர், தங்களின் வீடுகளில் இருந்தே இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.
மனைவிமார்களை பொம்மைகள் போன்றும், போகபொருட்கள் போன்றும் நடத்தப்படாதவாறு இருக்கட்டும். பொது சேவையில், ஆண்களுக்கு நிகராக மரியாதைக்குரிய தோழர்களாக மதிக்கப்படட்டும். இதற்காக போதுமான கல்வியறிவு பெறாத பெண்கள் தங்களின் கண்வன்மார்களிடமிருந்து கல்வியறிவு பெறட்டும். போதுமான கல்வியறிவு பெறாத அன்னையர்களுக்கும், மகள்களுக்கும் கூட இதுப் பொருந்தும்.
சட்டதிட்டங்கலும், சம்பிரதாயங்கலும் பெண்களுக்கு எதிராகவே இருக்கும் போக்கு நாடு முழுதுமே காணப்படுகிறது. இந்த நிலை உடனே கலையப்படவேண்டும்.
குறிப்பு: பங்காளிகளே! காந்திய சிந்தனை வாரமாக, இந்த வாரம் முழுதும் காந்தியக் கருத்துக்களை பதிவுகளாக இட உள்ளேன். படித்துப் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இடுங்கள்! ஆதரவைத் தாருங்கள்!
புதிய உலகத்தை நோக்கி நாம் பயணப்படலாம்! வாங்க ஒன்னா கைக்கோத்துக்கிட்டு வாங்க!
28 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
//சட்டதிட்டங்கலும், சம்பிரதாயங்கலும் பெண்களுக்கு எதிராகவே இருக்கும் போக்கு நாடு முழுதுமே காணப்படுகிறது. இந்த நிலை உடனே கலையப்படவேண்டும்.//
its needed for immidiate . thank u for sharing,
//சட்டதிட்டங்கலும், சம்பிரதாயங்கலும் பெண்களுக்கு எதிராகவே இருக்கும் போக்கு நாடு முழுதுமே காணப்படுகிறது. இந்த நிலை உடனே கலையப்படவேண்டும். //
சொல்லி எவ்வளவு வருசமாச்சு? இன்னும் களையப் படவில்லையே?
ஏன்? அதற்க்கான முயற்சி கூட எடுக்கப்படவில்லையே?
தென் ஆப்பிரிக்காவுல போய் அசைவம் மட்டும்தான் அங்க கிடைக்கும்னு தெர்ஞ்சப்ப,இவருக்குள்ள ஏற்பட்ட குழப்பங்கள்,அதை சாப்பிடவே கூடாதுன்னு இவர் காட்டின மன உறுதி பிரம்மிக்க வைக்கும்
மனைவிமார்களை பொம்மைகள் போன்றும், போகபொருட்கள் போன்றும் நடத்தப்படாதவாறு இருக்கட்டும்//
கஸ்தூரி பாயிடம் நான் நல்ல கணவனாக நடந்து கொண்டேனா என்பது சந்தேகமே என்கிறார் காந்தி...
மற்றபடி நீங்கள் தொகுத்துள்ள கருத்துக்கள் அற்புதம்
@மதுரை சரவணன்
////சட்டதிட்டங்கலும், சம்பிரதாயங்கலும் பெண்களுக்கு எதிராகவே இருக்கும் போக்கு நாடு முழுதுமே காணப்படுகிறது. இந்த நிலை உடனே கலையப்படவேண்டும்.//
its needed for immidiate . thank u for sharing,//
அவரு தீர்கதரிசணத்தோடு சொன்னது, இன்னமும் பெண்களின் நிலை அப்படியே இருக்கு பாருங்க. ஏதோ அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் மாற்றம் தான் வந்திருக்கு முழுசா இன்னமும் வரவேண்டி இருக்கு. நன்றி நண்பரே!
@கொல்லான்
//சொல்லி எவ்வளவு வருசமாச்சு? இன்னும் களையப் படவில்லையே?
ஏன்? அதற்க்கான முயற்சி கூட எடுக்கப்படவில்லையே?//
நீங்க சரியா சொல்லிட்டீங்க! இப்போதும் கூட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. முழுசா மாற்றத்திற்கு இன்னமும் எவ்வளவு காலம் பிடிக்குமோ தெரியவில்லை.
@ஆர்.கே.சதீஷ்குமார்
//தென் ஆப்பிரிக்காவுல போய் அசைவம் மட்டும்தான் அங்க கிடைக்கும்னு தெர்ஞ்சப்ப,இவருக்குள்ள ஏற்பட்ட குழப்பங்கள்,அதை சாப்பிடவே கூடாதுன்னு இவர் காட்டின மன உறுதி பிரம்மிக்க வைக்கும்//
ஆமாங்க சதீஷ்! உங்க கருத்து சரிதான். ஆனா ஊரைத்தான் மாத்தி சொல்லிட்டீங்க. அது இங்கிலாண்ட்ங்க தல! நன்றி தல!
@ஆர்.கே.சதீஷ்குமார்
//கஸ்தூரி பாயிடம் நான் நல்ல கணவனாக நடந்து கொண்டேனா என்பது சந்தேகமே என்கிறார் காந்தி...
மற்றபடி நீங்கள் தொகுத்துள்ள கருத்துக்கள் அற்புதம்//
அவரும் சாதரண மனுஷனா இருந்து, பின்னாடி தான் உயர்ந்த தெயவீக நிலைக்கு முயற்சி செய்து எட்டிப் பிடிக்கிறார். அதனால பல இடங்களிலில பல தவறுகள் செய்றாரு. அவரே எல்லா உண்மைகளையும் ஒத்துக்கிறாரு. அவரு துணிவு யாருக்கு வரும் சொல்லுங்க.
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க!
ennathu gandi seththuttaaraa? sollave illai...
பெண்களும், அவ்வாறே பலகாலமாக ஆண்களுக்கு அடிமைகள் என்றே தங்களைக் கருதிக் கொள்ளுமாறு அறிவுருத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
--------------------------------
நிஜம்
http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//ennathu gandi seththuttaaraa? sollave illai//
இதுக்குத் தான் ஹிஸ்ட்ரி க்லாஸை கட் பண்ணிட்டு சினிமாவுக்கு போகக்கூடாதுன்னு சொல்றது!
@பயணமும் எண்ணங்களும்
உங்க கருத்துக்கு நன்றி நண்பரே! தொடர்ந்து வாங்க! ரொம்ப சந்தோஷப்படுவேன்.
அற்புதமான காந்திய சிந்தனைகள்.
இந்த வாரம் முழுதுமா?
ம்ம் அசத்துங்க.
அவர்கள், பெண்களுக்கு எஜமானர்கள் போலவும், பிரபுக்கள் போலவும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். ///
காந்தியடிகள் அவர்களே கஸ்தூரிபாய் அவர்களை பல நேரங்களில் அப்படி தான் நடத்தி இருக்கிறார்.
@இந்திரா
//அற்புதமான காந்திய சிந்தனைகள்.
இந்த வாரம் முழுதுமா?
ம்ம் அசத்துங்க.//
உங்க பாராட்டுக்கு நன்றி தோழி! தொடர்ந்து வாங்க. இது காந்திய சிந்தனை வாரம்.
@தமிழ் உதயம்
//காந்தியடிகள் அவர்களே கஸ்தூரிபாய் அவர்களை பல நேரங்களில் அப்படி தான் நடத்தி இருக்கிறார்.//
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான் நண்பரே! அவரே அது தவறு என்று உணர்ந்தும் விட்டார். அந்த தவறை நமக்குத் தெரியப்படுத்தியதும் அவரே தான். அதனால் தான் அவர் மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர்ந்தார்.
மீண்டும் ஒரு நல்லதொரு பதிவு. தங்கள் சேவை தொடரட்டும் நண்பரே!
//
இந்த வாரம் முழுதும் காந்தியக் கருத்துக்களை பதிவுகளாக இட உள்ளேன். படித்துப் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இடுங்கள்! ஆதரவைத் தாருங்கள்! //
கண்டிப்பா ஆதரவு தரேன் அண்ணா ..!!
ahh
Orukku mattum thaan ubadesam
namakku illai-nu solra case andha kilam
thappu pannuvaaraam, romba naal kalichu varutthapaduvaaram, idhukku peru theiva nilai-nu solraaru ivarum
neenga comediyan-a irunga
edhukku indha vambu?
Gandhi solra indha visayathukku WORTH-a?
sarakku vikkadhu pangaali
madhumidha1@yahoo.com
Indli Service
gunalakshmi commented on your story 'காந்தி பெண்களை பற்றி என்னா சொல்றாருன்னா...'
'ஆண்கள் மிகவும் யோசிக்க வேண்டிய ஒரு செய்தி தோழரே...
வெறும் பேச்சில் மட்டும் பெண்களுக்கு சமஉரிமை...
நானும் இதை பலமுறை யோசித்துள்ளேன்.
இதற்கு ஒரு உண்மையான உதாரணத்தை நம் வளையுலகில் வெளியிடுகிறேன்.'
Here is the link to the story: http://ta.indli.com/story/345577
Thanks for using Indli!
- The Indli Team
@எஸ்.கே
//மீண்டும் ஒரு நல்லதொரு பதிவு. தங்கள் சேவை தொடரட்டும் நண்பரே!//
உங்க பாராட்டுக்கு நன்றி நண்பா!
@என்னது நானு யாரா?
//ஆண்கள் மிகவும் யோசிக்க வேண்டிய ஒரு செய்தி தோழரே...
வெறும் பேச்சில் மட்டும் பெண்களுக்கு சமஉரிமை...
நானும் இதை பலமுறை யோசித்துள்ளேன்.
இதற்கு ஒரு உண்மையான உதாரணத்தை நம் வளையுலகில் வெளியிடுகிறேன்.'//
நன்றி தோழி!
உங்களின் கருத்து எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. பெண் அடிமை தீர வேண்டும் என்றால் எல்லோருமே சேர்ந்து முயற்சித்தால் தான் முடியும். உங்களின் படைப்பை அறிந்துக் கொள்ள ஆவல். உடனே எழுதி வெளியிடுங்கள்.
@sweet
நீங்க ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. அதனால் உங்களை Friend என்று அழைக்கிறேன்.
Friend!
//thappu pannuvaaraam, romba naal kalichu varutthapaduvaaram, idhukku peru theiva nilai-nu solraaru ivarum//
அவர் தவறுகள் நிறைய செய்திருக்கிறார். அவர் நம்மைப் போலவே மனித பிறவியை எடுத்தவர் தான். பின் கொஞ்சம் கொஞ்சமாக பக்குவப்பட்டு ஆன்மீக வழியினைக் கண்டு தெய்வ நிலை அடைந்தார்.
அவரைப் பற்றி நாம் நிறைய படித்து ஆழ்ந்து சிந்தித்து தெரிந்துக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன Friend. நீங்கள் நேரம் கிடைக்கும்போது அவரைப் பற்றிப் படிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறேன்.
கருத்தினை சொன்னதற்கு நன்றி Friend!
உங்களுக்கு காந்திய புடிக்குமா பாஸ்???
எனக்கு அவர சுத்தமா புடிக்காது. ஏன்னு கேட்டா காரணமும் சொல்லத் தெரியாது. எனக்கு மட்டும் அல்ல, என் கூடப் படித்த பலபேருக்கு காந்திய புடிக்காது. சுபாஸ் சந்திர போஸ் தான் புடிக்கும். அதுக்குக் காரணம் எங்க சமூக அறிவியல் வாத்தியார்.
பாடத்தில காந்தியப் பத்தி வந்தா அந்த பாடமே எடுக்க மாட்டார். “இவன்லாம் ஒரு ஆளுன்னு இவனப் போயி எல்லாரும் மதிக்கிராங்க, இவன் பாடத்தையெல்லாம் படிக்காதிங்க, சாய்ஸ்ல விட்டுருங்கன்னு” சொல்லுவாரு. நம்ம நாட்டில உள்ள நிறைய பிரச்சனைக்கு காரணம் இவர் தான்னு சொல்லுவாரு, பாகிஸ்தானை பிரித்தது இந்தியாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்ன்னு சொல்லுவாரு...
நமக்கும் அது நெஞ்சிலே பதிஞ்சு போச்சு...
@Phantom Mohan
சிறிய வயதில், பெரியவர்கள் நம் மனதில் என்ன கருத்தினைப் பதிக்கிறார்களோ, அதுவே நிலைத்து விடுகிறது. அதுவே கோபமாக வெறுப்பாக மாறிவிடுகிறது.
நாம் பெரியவர்களாக ஆனபின்பும் அதேக் கருத்தினை கெட்டியாக பிடித்துக் கொள்கிறோம். என்ன செய்ய மனத்திற்கு இருக்கும் Limitations இவை. உங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே!
//நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான் நண்பரே! அவரே அது தவறு என்று உணர்ந்தும் விட்டார். அந்த தவறை நமக்குத் தெரியப்படுத்தியதும் அவரே தான். அதனால் தான் அவர் மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர்ந்தார்.//
அப்ப நாமலும் ஒரு கொலைய செஞ்சுட்டு அது தவறு என்று உணர்ந்துவிட்டால் நாமலும் தெய்வ நிலைக்கு உயரலாம்.
நல்லா இருக்கு...இந்தக் கருத்து.
இன்னும் ஒரு வாரத்துக்கா...
பல்லி சாப்பிடாதீங்க..பூரான் சாப்பிடாதீங்க...அப்படியே போகலாமே.
(எலி சாப்பிடாதீங்க,தவளை சாப்பிடாதீங்க,ஈசல் சாப்பிடாதீங்க என்று எழுதவேண்டாம்....ஏன்னா இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
@ராவணன்
//அப்ப நாமலும் ஒரு கொலைய செஞ்சுட்டு அது தவறு என்று உணர்ந்துவிட்டால் நாமலும் தெய்வ நிலைக்கு உயரலாம்.//
உங்க கருத்துக்கு முதலில நன்றிச் சொல்லிக்கிறேனுங்க. மனைவிகிட்ட கடுமையா நடந்துக்கிறதுக்கும் கொலை செய்றதுக்கும் எப்படி தலைவரே லிங்க் கொடுத்தீங்க. எனக்கு ஆச்சரியமா இருக்குங்க...
இந்தியாவில் பெண்மைச் சமத்துவம் ஓரளவுக்காவது மலர்ந்திருக்கிறது என்றால் அதில் காந்தியடிகளுக்குச் சிறப்பான பங்குண்டு.
காந்தி வாரமாக்கி வலைப் பதிவு செய்ய முன் வந்த உங்கள் சீரிய நோக்கிற்கும் அதிலும் பெண்ணை முதன்மைப்படுத்திய உங்கள் பெருந்தன்மைக்கும் என் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து இது போன்ற தரமான நல்ல பதிவுகளையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
முடிந்தால் தமிழினி வெளியீடாக வந்திருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’நூலைப் பாருங்கள்.இது ஒரு சிறிய ஆலோசனை மட்டுமே.
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!