October 1ல் - 7 முடிய, 7 நாட்கள் யோக, இயற்கை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடக்குதுங்க. (Yoga & Naturopathy - Treatment cum Awareness Programme)
![]() |
அம்மணிக்கு ஆரோக்கியமா வாழற முறைங்க தெரிஞ்சிருக்குங்கோ.... |
இந்த ஏழு நாட்களும், அங்கேயே தங்கி உங்க ஆரோக்கியத்திற்கான வழிகளைத் தெரிஞ்சிக்கலாமுங்க. நோய்ங்க ஏன் வருது? அதுங்க நம்மை தாக்காத விதமா எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்றதுன்னு பல பல புது புது விஷயங்க தெரிஞ்சிகலாமுங்க! எல்லோமே செய்முறை விளக்கங்களோட சொல்றாங்க.
வாழையிலை குளியல், மண் குளியல் போல பல குளியல்களை படிச்சீங்க இல்ல! அதெல்லாம் நேரில அனுபவிக்கிற வாய்ப்புங்க.
நேரம் இருக்கிறவங்க மிஸ் பண்ணிடாதீங்க. உங்க வாழ்க்கையையே மாத்திற முகாமா இருக்கலாம். யாருக்குத் தெரியும் சொல்லுங்க பங்காளி!
இந்த முகாமை நடத்திக் கொடுக்கிறவங்க:
இயற்கை உணவு நிபுணர்: திரு. மூ. ஆ. அப்பன் அவர்கள்
இவரு “இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து” என்கின்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதி இருக்காருங்க.
இது நடக்குற இடம்:
இயற்கை வாழ்வு நிலையம் (Natural Life Centre )
125, கீழத் தெரு, குலசேகரன்பட்டினம்
தூத்துக்குடி மாவட்டம் - 628206
செல்பேசி: +91 - 9944042986, 9380873645
நன்கொடை: இந்த ஏழு நாட்களும் தங்குற வசதிக்கும், உணவுக்கும், சிகிச்சைக்கும் வெறும் 500/- ரூபாய் தான் கொடுக்கணும்ங்க.
இந்த காலத்தில இவ்வளவுக் குறைவான கட்டணமான்னு மலைப்பு வருதா அப்பு! அது தாங்க மனுஷன நேசிக்கிற குணமெங்கறது. இயற்கை வாழ்வு ஆர்வலருங்க எப்பவுமே எதுக்கும் பேராசைப் படறதில்லைங்க.
இந்த இடம் இயற்கை சூழலிலே, கடற்கறைக்கு பக்கத்தில அமைஞ்சிருக்கு. நினைக்கும் போதே ஜாலியா இருக்கு இல்ல! JJJ
இந்த இடம், 3 ஏக்கர் நிலமுங்க. முழுசுமே பழ முதிர் சோலையா, வெறும் இயற்கை விவசாய முறையில மட்டுமே மரங்களை வளர செய்திருக்காங்க. கற்பணை செய்யும் போதே ரொம்ப நல்லா இருக்கில்ல அப்பு?
இன்னொரு முக்கியமான தகவல் சொல்றேன் கேளு அப்பு!
ஒவ்வொரு மாசமும் 3வது வாரம் வெள்ளி, சனி, ஞாயிறுன்னு 3 நாட்கள் முகாம் நடத்துறாங்க. இந்த நவம்பர் மாசத்தில ஒரு முகாம் நடத்துறாங்க.
முகாம் 19-ம் தேதி காலையில தொடங்கி 21-ம் தேதி மாலை 6 மணிக்கு முடியும். வெளியூர்ல இருந்து வர்றவங்க முதல் நாளே வந்திடலாம். அதேப் போல கிளம்பறதும் முகாம் முடிஞ்ச மறுநாள் கூட கிளம்பி வரலாம்.
இதுக்கு நன்கொடை வெறும் 500 ரூபாய் மட்டுமே. பங்காளிகளே! உங்களுக்கு யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கோ அவங்க கட்டாயம் கலந்துக்கிட்டுப் பயன் அடையுங்க அப்பு!
வேற ஏதாவது நோய் இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை தர்றாங்க அப்பு! உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் சொல்லுங்க.
உங்க புண்ணியத்தோட அகௌண்ட்ல கொஞ்சம் சேர்த்துகிடுங்க.
16 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
vandhachi... padichachi.. ootu pottachi....kilambiyachi....
@TERROR-PANDIYAN(VAS)
படிச்சிப் பார்த்து ஓட்டுப் போட்டதுக்கு நன்றி பங்காளி! நீங்க வெளியூரில இருந்தாலும் மத்தவங்களுக்கு பயண்படட்டும்னு நினைச்சி ஓட்டுப் போட்டீங்க பாருங்க! You are really great!
வேற யாருக்காவது இந்த தகவல் தேவையா இருந்தா சொல்லுங்க. அவங்களுக்கு உதவியா இருக்குமில்ல! என்ன நான் சொல்றது?
நல்ல பதிவு.உங்களிடம் இருக்கும் அந்த கிண்டல் - satire எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க !
ok. sure
//இது நடக்குற இடம்:
இயற்கை வாழ்வு நிலையம் (Natural Life Centre )
125, கீழத் தெரு, குலசேகரன்பட்டினம்
தூத்துக்குடி மாவட்டம் - 628206
//
அட டா , நம்ம ஊரு பக்கம் நடந்திருந்தா போயிருக்கலாமே ..?!
//வேற ஏதாவது நோய் இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை தர்றாங்க அப்பு! உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் சொல்லுங்க.
//
கண்டிப்பா சொல்லுறேன் ..!!
@கக்கு - மாணிக்கம்
//நல்ல பதிவு.உங்களிடம் இருக்கும் அந்த கிண்டல் - satire எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க !//
வருகைக்கு நன்றி நண்பா! உங்க பாராட்டுக்கும் நன்றிங்க! நீங்க வெளிநாட்டில இருக்கீங்கன்னு நினைக்கிறேன். இந்த பதிவோட மேட்டரை, இந்தியாவில உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது தேவையா இருந்தா சொல்லி விடுங்க.
என்ன நான் சொல்றது? சரிதானுங்களே?
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
நன்றி நண்பா! தன்னலம் இல்லாம சேவை செய்ற பெரியவரு அவரு! மூ.ஆ. அப்பனைப் பத்தி தான் சொல்றேன். வயசனாவரு 71 வயசு ஆகுது.
எல்லோரும் நோய்நொடியில்லாம சந்தோஷமா இருக்கணும்னு அவருக்கு ஆசை!
இயற்கை மருத்துவத்தில அதிகமா நாட்டம். மத்தவங்களுக்கு சொல்றேன்னு சொன்னதுக்கு மீண்டும் நன்றிகள். நானும் ஒரு சேவையாத் தான் இதை வெளியிட்டேன்.
@ப.செல்வக்குமார்
//அட டா , நம்ம ஊரு பக்கம் நடந்திருந்தா போயிருக்கலாமே ..?!//
செல்வா! நீங்க வருத்தப்படாதீங்க! அவங்க மாசம் ஒரு முறை 3 நாள் முகாம் கூட நடத்துறாரு. உங்களுக்கு எப்போ நேரம் வாய்க்குமோ, அப்போ போகமுடியும். நன்றி தம்பி!
@ப.செல்வக்குமார்
////வேற ஏதாவது நோய் இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை தர்றாங்க அப்பு! உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் சொல்லுங்க.
//
கண்டிப்பா சொல்லுறேன் ..!!//
செல்வா! உங்க தங்கமான மனசைப் பத்தி என்ன சொல்ல! உங்களைப் போல நல்லவங்க நாலு பேரு இருக்கிறதால தான் நாட்டில ஏதோ கொஞ்சம் நல்லது நடக்குது.
நல்ல பதிவு :)
நல்ல பதிவு பங்காளி...
@வெறும்பய
நன்றி பங்காளி!
@prabhadamu: நன்றி நண்பரே!
நிகழ்ச்சியில் நிறைய அன்பர்கள் கலந்து பயன்பெற வாழ்த்துகிறேன் பங்காளி...
@நிகழ்காலத்தில்...
//நிகழ்ச்சியில் நிறைய அன்பர்கள் கலந்து பயன்பெற வாழ்த்துகிறேன் பங்காளி//
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி நண்பரே! உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காகிலும் தேவை இருந்தால், இந்த தகவலைச் சொல்லுங்கள். அவர்கள் பயன்பெறட்டும்.
Pagali i send mail plz advise any programme in Coimbatore or Tirupur .
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!