குறிப்பு: பங்காளி! காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்த வாரம் முழுசும் காந்தியின் சிந்தனைகளை பதிவில் போடுறேன். உங்க ஆதரவை நோக்கி நிற்கிறேன்...
காந்தி தாத்தா கிராமங்களின் மலர்ச்சிப் பற்றி என்ன சொல்றாரு கேட்போம் வாங்க பங்காளி!
![]() |
உங்களுக்கு தலை வணங்குகிறோம் தாத்தா... |
அதனால் ஒவ்வொரு கிராமத்தின் முக்கியமான சிந்தனை தன்னுடைய தேவைக்குத் தகுந்த உணவு தானிய உற்பத்தியும், ஆடைகளுக்குத் தேவையான பருத்தி உற்பத்தியும் எவ்வாறு செய்துக்கொள்வது என்பதனைச் சுற்றியே இருக்க வேண்டும்.
அந்தக் கிராமம், கால்நடைகளை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வதாக இருக்கவேண்டும். பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு தேவையான விளையாட்டு மைதானங்களும், பொழுது போக்கு பூங்காக்களும் கொண்டதாக இருக்க வேண்டும்.
அதிகமாய் இருக்கும் விளைநிலங்களில், கஞ்சா, புகையிலை ஓபியம் தயாரிக்கப் பயன்படும் கசகசா போன்ற போதை பொருட்களைத் தவிர்த்து மற்ற பணப்பயிர்களை விளைவித்துக் கொள்ளும்படி இருக்கும்.
அந்த கிராமத்தில் கிராமிய கலைகளை நடத்துவதற்க்கான ஒரு நாடக அரங்கமும், பள்ளிக்கூடமும், பொது நிகழ்ச்சிகளுக்கான சமூகக் கூடமும் இருக்கும். எல்லா மக்களுக்கும் நல்ல தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதாகவும் இருக்கும். இந்த திட்டம் சரியானபடி செயல்படுவதற்கு மேல்நிலை தொட்டிகள் மற்றும் கிணறுகள் அமைந்து இருக்கும்.
இந்த கிராமங்களில், பிள்ளைகளுக்கு உயர்நிலை வரையிலும் கட்டாயக் கல்வி ஆக்கப்பட்டிருக்கும். எல்லா செயல்பாடுகளும் கூட்டுறவு முறையில் நடக்கும்படி இருக்கும். இப்போது இருப்பதைப் போன்று தீண்டாமையும் சாதிகளும் இல்லாதிருக்கும்.
கிராம நிர்வாகம் பஞ்சாயத்தினால் நடத்தப்படும். பஞ்சாயத்தில் 5 உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த உறுப்பினர்கள் வருடத்திற்கு ஒரு முறை தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்களிக்கப்பவருக்கும் தேர்தலில் நிற்பவருக்கும் குறைந்தப்பட்ச தகுதி இருக்க வேண்டியதாய் இருக்கும்.
சேவை மனம் கொண்ட கிராம சேவகர்கள், கிராமங்கள் மலர்ச்சி பெறுவதற்காக முயல்வார்கள். கிராமங்கள் தங்களின் திறமையை நன்கு வளர்த்துக் கொள்வதால் அவை தயாரிக்கும் பொருட்களுக்கு நல்ல சந்தை உருவாகும்.
ஒவ்வொரு கிராமத்திலும் கிராம கவிஞர்கள், கிராம கலைஞர்கள், கிராம கட்டிட கலை வள்ளுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இருப்பர். சுருக்கமாக சொல்வதென்றால் கிராமங்களில் எல்லோருடைய தேவையையும் பூர்த்திச் செய்வதாக எல்லா வளமும் நிறைந்து இருக்கும்.
இன்றைய கிராமங்கள் பார்க்கவே அருவருப்பான குப்பைமேடுகளாக காட்சி தருகின்றன. நாளைக்கு இதே கிராமங்கள், அறிவு மிகுந்தோர் வாழும் சிறிய சிறிய சொர்கங்களாக உருவெடுக்கும். அங்கு வாழும் மாந்தரை யாரும் ஏமாற்றவோ, சுரண்டவோ முடியாது.
இந்த மாற்றங்கள் அனைத்தும், வாழ்க்கைக்கு உகந்தபடி மாற்றப்பட்ட கல்வி முறையினால் எளிதாக சாத்தியமாக்கப்படும்.
தாத்தா சொன்னதில எது பிடிச்சிருக்கு மக்கா? சும்மா சொல்லிட்டுப் போங்க. நானும் தெரிஞ்சிப்பேன் இல்ல.
இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் எளிதா சேர்றதுக்கு வசதியா மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே!
36 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
என்னா பங்காளி தினுசு தினுசா எழுதறிங்க.. பரவாயில்ல இதும் நல்லாதான் இருக்கு... :)
காந்தியின் கிராம சிந்தனைகளுடன் நேரு ஒத்துப்போகாமால் பிடிவாதமாக நகரங்களை நோக்கிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியதன் விளைவைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்! அருமையான பகிர்வு, நன்றி!
@TERROR-PANDIYAN(VAS)
//என்னா பங்காளி தினுசு தினுசா எழுதறிங்க.. பரவாயில்ல இதும் நல்லாதான் இருக்கு.//
ஆமாங்க பங்காளி! காந்தியோட பிறந்த நாள் வருதில்ல. அதனாலத் தான். உங்க பாராட்டுக்கு நன்றிங்க
@பன்னிக்குட்டி ராம்சாமி
பன்னிக்குட்டி சாரே! ரொம்ப சரியா சொன்னீங்க. கிராமங்களை மட்டும் வலுப்பெற செய்திருந்தா நாடு எவ்வளவோ நல்ல நிலையில இருந்திருக்கும்.
உங்க கருத்துக்கு நன்றி சாரே!
பங்காளி காந்தி பிறந்தநாள் அன்னிக்கு டாஸ்மாக் லீவாம் . இயற்கை மருத்துவத்துல இதை எதிர்த்து போராடலாமா?
//இந்த உறுப்பினர்கள் வருடத்திற்கு ஒரு முறை தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்களிக்கப்பவருக்கும் தேர்தலில் நிற்பவருக்கும் குறைந்தப்பட்ச தகுதி இருக்க வேண்டியதாய் இருக்கும். ///
நல்லா இருக்குங்க.. எண்ணங்கள் எல்லாமே நனவானால் நன்மை தான். :-))
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//பங்காளி காந்தி பிறந்தநாள் அன்னிக்கு டாஸ்மாக் லீவாம் . இயற்கை மருத்துவத்துல இதை எதிர்த்து போராடலாமா?//
போலிசா இருந்திட்டு என்னப்பேச்சு இது! நல்ல பாதையில போறது போலிசு வேலையா, இல்லை போதையில போறது போலிசு வேலையா?
நீங்க இப்படி கேட்டது தெரிஞ்சா காந்தி இந்த வருஷம் பிறக்காமல இருந்திடுவாரு. அப்புறம் காந்தி ஜயந்தியே கொண்டாட முடியாம போயிடும்
@Ananthi
//நல்லா இருக்குங்க.. எண்ணங்கள் எல்லாமே நனவானால் நன்மை தான்//
காந்தியோட எண்ணங்கள் எப்பவுமே நாட்டு நலனைப் பற்றிய எண்ணங்களாகவே இருந்ததுங்க. அவரை மறந்திட்டதால தான் பல பல துன்பங்களுங்க. உங்க கருத்துக்கு நன்றிங்க தோழி!
காந்தி ஜெயந்தியை நாங்க எல்லாம் மறந்து எந்திரன் ஜெயந்தியை கொண்டாடறோம்,உங்க சமூக அக்கறைக்கு ஒரு சல்யூட்
காந்தியடிகள் சொன்னவற்றில் இந்த கிராம மேம்பாடு என்னை மிக கவர்ந்தது.
@சி.பி.செந்தில்குமார்
//காந்தி ஜெயந்தியை நாங்க எல்லாம் மறந்து எந்திரன் ஜெயந்தியை கொண்டாடறோம்,உங்க சமூக அக்கறைக்கு ஒரு சல்யூட்//
உங்க பாராட்டுக்கு நன்றி நண்பா! எல்லோரும் காந்திய வழியைப் பின்பற்றினால் நாடும், உலகமும் எவ்வளவு நன்றாக இருக்கும்.
@தமிழ் உதயம்
//காந்தியடிகள் சொன்னவற்றில் இந்த கிராம மேம்பாடு என்னை மிக கவர்ந்தது.//
கிராமங்களைப் பற்றி அவருக்கு தீர்கமான கனவு இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் இன்று கன்வெல்லாம் காணல் நீராய் மாறிவிட்டது. விதியின் சோதனைத் தான் போலும்.
//சுருக்கமாக சொல்வதென்றால் கிராமங்களில் எல்லோருடைய தேவையையும் பூர்த்திச் செய்வதாக எல்லா வளமும் நிறைந்து இருக்கும். //
Nice thoughts.. but, when do we achieve these...?
@Madhavan
//Nice thoughts.. but, when do we achieve these...?//
எல்லா தீமைக்கும் முடிவில்லாமல் போகாது இல்லையா அண்ணாச்சி! இயற்கை அதன் பணியினை சரியாகவே செய்யும் என்று நம்புவோம்.
கிராமங்களில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்தான். ஆனால் இப்போது கிராமங்களும் பெரிதும் மாறி வருகின்றன. நகரத்தின் பாதிப்பு அவற்றில் பெரிதான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
தாத்தா அதனால்தான் மஹாத்மா என போற்றப்படுகிறார்
இது போன்ற உள்மனதிலிருந்து எழும் கருத்துக்களை சொல்லவும் கருத்து சொன்னால் அதன் படி வாழ்ந்து காட்டவும் தலைவர்கள் யாரும் இன்று இல்லையே என நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது
@எஸ்.கே
//ஆனால் இப்போது கிராமங்களும் பெரிதும் மாறி வருகின்றன. நகரத்தின் பாதிப்பு அவற்றில் பெரிதான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.//
மிகவும் வருந்ததக்க தான ஒரு மாற்றத்தினை நோக்கி நமது கிராமங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன. இன்னமும் எங்கே செல்லப் போகிறதோ தெரியவில்லை!
@ஆர்.கே.சதீஷ்குமார்
//தாத்தா அதனால்தான் மஹாத்மா என போற்றப்படுகிறார்//
ஆமாம் சதீஷ்! ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ஒரு மஹாத்மா! அவர் நம் நாட்டில் பிறந்தது நம்மிடையே வாழ்ந்தது எல்லாமுமே நம்முடைய பாக்கியம் தான்.
@ஆர்.கே.சதீஷ்குமார்
//இது போன்ற உள்மனதிலிருந்து எழும் கருத்துக்களை சொல்லவும் கருத்து சொன்னால் அதன் படி வாழ்ந்து காட்டவும் தலைவர்கள் யாரும் இன்று இல்லையே என நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது//
உங்களின் வருத்தத்தை நானும் பகிர்ந்துக்கொள்கிறேன்.
கிராமங்களைப் பற்றி பலர் மனதில் ஒரு பிம்பம் இருக்கிறது.
பட்டிக்காட்டான்கள், படிக்காதவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள் என்று..
அது முதலில் மாற வேண்டும்.
///அதிகமாய் இருக்கும் விளைநிலங்களில், கஞ்சா, புகையிலை ஓபியம் தயாரிக்கப் பயன்படும் கசகசா போன்ற போதை பொருட்களைத் தவிர்த்து மற்ற பணப்பயிர்களை விளைவித்துக் கொள்ளும்படி இருக்கும்.
//
இது உண்மைலேயே பின்பற்றப்படவேண்டிய விஷயம் ..!! ஆனா எங்க பின்பற்றுறாங்க ..?
//தாத்தா சொன்னதில எது பிடிச்சிருக்கு மக்கா? சும்மா சொல்லிட்டுப் போங்க. நானும் தெரிஞ்சிப்பேன் இல்ல.
/
எல்லாமே நல்லாத்தான் சொல்லிருக்கார்.. எல்லாமே பிடிச்சிருக்கு ..!!
காந்தீய வழி தான் எங்கள் வழி என்று என்று சொல்பவர்களுக்கு அவரது இந்த கருத்துகள் எல்லாம் புரியுமா ??
சிந்தனையை தூண்ட கூடிய கருத்துகள் தான் எல்லாம். ஆனால் இவை சாத்தியமானால்.....??!! கனவுகள் காண்பதுதான் நமக்கு மிகவும் தெரிந்த சுலபமான வழியாயிற்றே.....!! அதனால் 'கனவு காணுங்கள்'
நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
ஆஜர் போட்டுக்கிறேன். சொல்றதுக்கு ஒண்ணும் தோணலை.
@இந்திரா
//கிராமங்களைப் பற்றி பலர் மனதில் ஒரு பிம்பம் இருக்கிறது.
பட்டிக்காட்டான்கள், படிக்காதவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள் என்று..
அது முதலில் மாற வேண்டும்.//
ஆமாம் இந்திரா! அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும். எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நன்றி தோழி!
@ப.செல்வக்குமார்
//எல்லாமே நல்லாத்தான் சொல்லிருக்கார்.. எல்லாமே பிடிச்சிருக்கு//
நன்றி தம்பி செல்வா! காந்திய சிந்தனைகளை நாம பின்பற்றி இருந்தோம்னா பல பிரச்சனைகளை நாம் வெற்றிகரமாக கடந்திருக்க முடியும்.
@Kousalya
//சிந்தனையை தூண்ட கூடிய கருத்துகள் தான் எல்லாம். ஆனால் இவை சாத்தியமானால்.....??!! கனவுகள் காண்பதுதான் நமக்கு மிகவும் தெரிந்த சுலபமான வழியாயிற்றே.....!! அதனால் 'கனவு காணுங்கள்'//
நீங்கள் கூறும் கூற்று உண்மை தான். பல பல அவலங்கள் இன்று இருக்கத்தான் செய்கின்றன. ஆனால்... ஆனால்... நீங்கள் பார்த்துக்கொண்டே இருங்கள். ஒரு நாள், காலம் மாறுகிறதா இல்லையா என்று. காலச் சக்கரம் நல்ல விதமாகவும் சுழலப்போகிறது. இந்தியாவிற்கு நல்லவிதமாக பொழுது விடியத்தான் போகிறது. நன்றித் தோழி!
@DrPKandaswamyPhD
//ஆஜர் போட்டுக்கிறேன். சொல்றதுக்கு ஒண்ணும் தோணலை.//
ஒண்ணும் தோணலையா! அட சும்மா சொல்லுங்க ஐயா! ஏன் தயக்கம். காந்தி சிந்தனைகள் நாட்டை வளப்படுத்தி இருக்குமா இல்லையா?
உங்களைப் போன்ற அனுபவஸ்தரோட கருத்தை அறிய ஆவலுங்க ஐயா. உங்க கருத்தை தெளிவா சொல்லுங்கன்னு கேட்டுக்கிறேன்.
//இது போன்ற உள்மனதிலிருந்து எழும் கருத்துக்களை சொல்லவும் கருத்து சொன்னால் அதன் படி வாழ்ந்து காட்டவும் தலைவர்கள் யாரும் இன்று இல்லையே என நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது//
உண்மையான கருத்து... வாழ்த்துக்கள் நண்பரே!!!
மக்கா நீங்க நல்லா தான் சொல்றிங்க நம்ம ஆளுங்க அவர் பிறந்தால் அன்று டிவி நிழச்சி போடுறாங்க
@புஷ்பா
வருகைக்கும் உங்களின் கருத்துக்கும் நன்றிங்க தோழி! தொடர்ந்து வாங்க! நிறைய விஷய்ங்களை பகிர்ந்துக் கொள்ளலாம்.
@சௌந்தர்
//மக்கா நீங்க நல்லா தான் சொல்றிங்க நம்ம ஆளுங்க அவர் பிறந்தால் அன்று டிவி நிழச்சி போடுறாங்க//
உண்மை தான் சௌந்தர். போதையின் பாதையில் இருந்து எப்போ விடுப்ட்டு நீதியின் பாதையில நடக்க ஆரம்பிக்கிறானோ, அன்னைக்கித் தான் உண்மையான சுதந்திரம் நமக்கெல்லாம். நன்றி சௌந்தர்!
நல்ல கருத்துகள் நண்பா...
என்னது நீ யாரா?ன்னு கேக்க போறதில்லை..
ஹிட்ஸ்சுக்காகவும் வருமானத்துக்காகவும் ப்ளாக் எழுதற
பலபேர்க்கு மத்தியில சமூகத்துக்காக ப்ளாக் எருதறஒருத்தன் நீ
@Cool Boy கிருத்திகன்.
//நல்ல கருத்துகள் நண்பா...
என்னது நீ யாரா?ன்னு கேக்க போறதில்லை..
ஹிட்ஸ்சுக்காகவும் வருமானத்துக்காகவும் ப்ளாக் எழுதற
பலபேர்க்கு மத்தியில சமூகத்துக்காக ப்ளாக் எருதறஒருத்தன் நீ//
நன்றி நண்பா! உங்க பாராட்டுக்களை தலை வணங்கி ஏத்துக்கிறேன். ஏதோ ஒரு சின்ன சேவையா, இதைச் செய்யறேன். மனசு மகிழ்ச்சியா இருக்கு. நிறையப் பேர்களுக்கு தகவல்களைக் கொண்டுச் சேர்க்க முடியுதுன்னு ஒரு சந்தோஷம். மீண்டும் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
அருமையான கருத்துக்கள்... அவர் என்றோ சொன்னது இன்றைக்கும் பொருந்துவது இதன் சிறப்பை மேலும் கூட்டுகிறது. இதை தொகுத்த உங்களுக்கு நன்றிகள்
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!