பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

30-Sep-2010

வேலையில்லா திண்டாட்டமே போ! போ! போ!


குறிப்பு: பங்காளி! காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்த வாரம் முழுசும் காந்திய சிந்தனைகளை பதிவில் போடுறேன். உங்க ஆதரவை நோக்கி நிற்கிறேன்...

தாத்தா! உங்களை எப்பவுமே
மறக்காம இருப்போமாக!

காந்தித் தாத்தா வேலைவாய்ப்பற்ற அவல நிலையை, வறுமையை எப்படி போக்கிடலாம்ன்னு சொல்றாரு பாருங்க! வாங்க! அவரு சொல்றதை கூர்ந்து கவனிப்போம்.

நாம் வறுமையை நோக்கிச் சென்றுக்கொண்டே இருக்கிறோம். அதற்குக் காரணம் என்ன என்றுத் தெரியுமா? நம்முடைய 7 இலட்ச கிராமங்களையும் பாராமுகமாக கவனிக்காமல் விட்டுவிட்டோம். அவைகளை மேலும் மேலும் சுரண்டலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

வறுமையின் கோரப்பிடியில் இன்றைய இந்தியா! ஒருக் காலத்தில் தேனும் பாலும் ஆறாக ஓடியதாக வரலாறில் படிக்கிறோம். ஆனால் இன்றோ இந்த இழி நிலையில் நாம்!

சில தவறான புரிதல்கள் காரணமாகவே நாம் இந்த வறுமையில் பிடியில் சிக்கி இருக்கின்றோம். நாம் ஒரு விஷயத்தை நன்குப் புரிந்துக் கொள்ள வேண்டும். கிழக்கத்திய நாகரீகத்திற்கும் மேற்கத்திய நாகரீகத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த வித்தியாசம் எப்படிபட்டதென்று பொதுவாகவே அவ்வளவாக புரிந்துக் கொள்ளப்படவில்லை.

நம்முடைய புவியியல் அமைப்பு, நமது வரலாறு, நம்முடைய வாழும்முறை எல்லாமுமே மேற்கத்திய நாகரீகத்திலிருந்து முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. நம் நாட்டின் நிலப்பரப்பை கணக்கில் கொண்டால் நம்முடைய ஜனதொகையின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. இது மேற்கத்திய நாடுகளுக்கு சிறிதும் பொருந்தாத விஷயமாக இருக்கிறது.  

எங்கே, ஜனதொகையின் நெருக்கடி அதிகமாய் இருக்கிறதோ, அங்கே அந்த நாட்டின் பொருளாதாரமும், நாகரீகமும், அங்கிருக்கும் நிலைக்கேற்பவே இருக்கும். இப்படிபட்ட பிரச்சனைகள் இல்லாத நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாதபடி வேறுபட்டு இருக்கும். இயற்கைக்கு ஏற்புடைய விதி இதுவே.

குறைந்த ஜனதொகைக் கொண்ட அமெரிக்கா போன்ற நாட்டிற்கு, வேலைகளை எளிதில் செய்ய பல விதமான இயந்திரங்கள் தேவைப்படும். இந்தியநாட்டில் கோடிக்கணக்கானவர்கள் வேலையற்று வாடும் நிலையில் உழைப்பைக் குறைக்கும் இயந்திரங்கள் தேவையே இல்லை.

அதிகமானோர் வாழ்வதற்கு வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். விளை நிலத்தின் மீது அளவுக்கும் அதிகமானோர் சார்ந்திருக்கும் அவல நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம். போதுமான சம்பாத்தியம் இல்லாமல் துன்பபடும் கணக்கற்ற ஏழைகள். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவின் தற்போதைய ஜனதொகையான 35 கோடி (1935 கணக்குப்படி) மக்களுக்கு போதுமானதாக விவசாய விளை நிலங்கள் இல்லையென்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

நான் உறுதியாகச் சொல்வேன்! இன்றுக் கிடைக்கக்கூடிய விளைநிலங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் எல்லோருக்குமே உணவளிக்க முடியும். நாம் அதற்கான வழிவகைகளைக் காணவேண்டும். அவ்வளவு தான்! அதற்கான ஆக்கபூர்வமான சிந்தனைகளும், செயல்திறனும் இருந்தாலே போதுமானது.

இந்த இழிந்த நிலைக்குத் தீர்வாக நான் சொல்வது என்னவென்றால், ஏழை எளிய கிராம மக்களைப் புரிந்துக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவராக அவர்களை எண்ணுங்கள். அவர்கள் நல்ல முறையில் விவசாயம் செய்து நல்லப் பலன்களை அடைய அவர்களுக்கு உதவுங்கள். நாம் அவர்கள் என்ன விளைவிக்கிறார்களோ அவற்றை மட்டும் நுகர்ந்து திருப்திக் காண்போம். அவர்கள் வாழ்வதுப் போன்றே நாமும் எளிமையாக வாழ்வோம்.

பணக்காரர்கள் தங்களின் தேவைக்கும் அதிகமாய் பொருட்களை சேர்த்துக் குவிக்கின்றனர். அதனால் அவை கவனிப்பாரற்று வீனாகின்றன. அதே சமயம் ஏழைகள் பட்டினியால் அவதியுற்று செத்து மடிகின்றனர். உண்மையான நாகரீகம் என்பது பொருட்களை வாங்கிக் குவிப்பதன்று. அது சுயமாகவே தேவைகளை சுருக்கிக்கொள்ளுதல் ஆகும்.

அப்படி தேவைகளை குறைத்துக் கொண்டோமானால், உண்மை மகிழ்ச்சி - நீடித்த திருப்தி நமக்குள் உண்டாகும். இதுவே நாம் ஆக்கபூர்வமாக சேவை செய்வதற்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் கொடுக்கும். இந்த நிலையை அடைதல் எளிதன்று என்று எனக்கும் நன்றாகவே தெரியும். முதலில் சிந்தனை விதைகள் மனத்தில் தூவி அவை முளைத்து மரமாகும் வரைக்கும் விடாமுயற்ச்சியுடன் முயன்றால் இது கைக்கூடும்.

இயற்கையாய் இருக்கும் வளத்தினை நமக்குள் பகிர்ந்துக்கொண்டால் வறுமையையும், வேலையில்லா திண்டாடத்தையும் எளிதில் போக்கிக் கொள்ளமுடியும்.

திரும்பவும் நாளைக்கும் நம்மிடையே வந்துப் பேச இருக்காருங்க நம்ப காந்தித் தாத்தா.

உங்களுக்கு அவர் சொன்னதைப் பத்தி என்னக் கருத்து இருக்குதுங்க. சும்மா சொல்லிட்டுப்போங்க. உங்க கருத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிறதில ஒரு ஆர்வம் தான்.

இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?18 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

எஸ்.கே said...

//இன்றுக் கிடைக்கக்கூடிய விளைநிலங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் எல்லோருக்குமே உணவளிக்க முடியும்.//
உண்மைதான்! ஆனால் எல்லோரும் அந்த நிலத்திலயும் ஃபிளாட்ல கட்டப் பார்க்கிறாங்க!

எஸ்.கே said...

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளதாக தொழில்வல்லுநர்கள் சொல்கிறார்கள்! ஆனால் ஒரு பக்கம் எனக்கு வேலை கிடைக்கலைங்கிற பிரச்சினை! உண்மை நிலை என்ன?

DrPKandaswamyPhD said...

எனக்குத் தெரிந்தது கோயமுத்தூருக்குப் பக்கத்தில் உள்ள கிராமங்கள்தான். எங்கு சென்றாலும் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது இல்லை என்ற குறைதான். இது ஒரு சமூகப் பிரச்சினை. காந்திய தத்துவங்கள் இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கும் என்று எனக்குப் புரியவில்லை.

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

//உண்மைதான்! ஆனால் எல்லோரும் அந்த நிலத்திலயும் ஃபிளாட்ல கட்டப் பார்க்கிறாங்க!//

ரொம்ப சரி நண்பா! காந்திய சிந்தனைகளின்படி வாழ்ந்தா தான் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் கிடைக்கும். நன்றி நண்பா!

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

//இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளதாக தொழில்வல்லுநர்கள் சொல்கிறார்கள்! ஆனால் ஒரு பக்கம் எனக்கு வேலை கிடைக்கலைங்கிற பிரச்சினை! உண்மை நிலை என்ன?//

வேலைவாய்ப்புகள் மென்பொருள் துறை, கட்டுமானத்துறை, ஆட்டோமொபைல் துறை என்று சில துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கின்றன. ஆனால் எல்லாவற்றுக்கும் பிரதானமான உணவு உற்பத்தித் துறை மிகவும் மோசமான நிலையில் ஊசாலாடிக் கொண்டிருக்கிறது.

பிரதானமாக விவசாயத்திற்கு இன்னமும் அதிக ஊக்கமும் கவனிப்பும் தேவை என்பதைத் தான் அதிக அதிகமான விவசாயிகளின் தற்கொலைகள் சுட்டிக் காட்டுகிறது.

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD

//எனக்குத் தெரிந்தது கோயமுத்தூருக்குப் பக்கத்தில் உள்ள கிராமங்கள்தான். எங்கு சென்றாலும் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது இல்லை என்ற குறைதான். இது ஒரு சமூகப் பிரச்சினை. காந்திய தத்துவங்கள் இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கும் என்று எனக்குப் புரியவில்லை.//

ரொம்ப நல்ல கேள்விங்க ஐயா! இப்படிக் கேள்விங்களை கேளுங்கன்னு சொன்னா அதைவிட்டுப்போட்டு வெறும் ஆஜர் மட்டும் போட்டுட்டு போயிட்டு இருப்பீங்க. இன்னைக்கு ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு இருக்கீங்க. பதில் சொல்றேனுங்க ஐயா!

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD

ஐயா! காந்திஜி சமூகபிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடித்தான் அவரோட வாழ்நாள் முழுசுமே செலவிட்டாருங்க. அவரு தன்னோட வாழ்நாள்ல 4 ஆசிரமங்களை நிர்மானிச்சு நடத்திட்டு இருந்தாருங்க.

அந்த ஆசிரமத்தில சில விரதங்களை எல்லா ஆசிரமவாசிகளும் கடைப்பிடிக்கணும். உதாரணத்துக்கு திருடக்கூடாது, பொய்சொல்லக்கூடாது, தனக்கென பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளக்கூடாது, பிரம்மச்சாரயம், உடல் உழைப்புன்னு 11 விரதங்களை கட்டாயமா எல்லோருமே கடைப்பிடிக்கணுமுங்க.

இது ஒரு சோதனைக்கூட ஆராய்ச்சியா அவரு செய்தாருங்க. ஆசிரமம் அளவில செய்த ஆராய்ச்சிங்க அவருக்கு நிறைவான பலன்களைக் கொடுத்ததுங்க.

அவரு என்ன நம்பினாருன்னா சின்ன அளவில செய்கிற ஆராய்ச்சி சமூக அளவிலேயும் பெரிய அளவில செய்யமுடியும்ன்னு அப்பாவித் தனமா நம்பிட்டாருங்க.

நாம தான் அவரைக் கைவிட்டோமுங்க. அதனால பாதிப்புங்க எல்லாம் நமக்குத் தானுங்க. திரும்பவும் நாம காந்திவழி திரும்பி அஹிம்சையான ஒரு சமுதாயத்தை படைச்சாத் தானுங்க நமக்கு விடிவுகாலம். இல்லைன்னா சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present sir

Cool Boy கிருத்திகன். said...

உங்கள மாதிரி எல்லாரும் நெனச்சாங்கன்னா உலகம் ஏன் சார் இப்பிடியிருக்கபோவுது..?
விவேக் சொல்றமாதிரி “100 பெரியார்ஸ் வந்தாலும்...“

தமிழ் உதயம் said...

இயற்கையாய் இருக்கும் வளத்தினை நமக்குள் பகிர்ந்துக்கொண்டால் வறுமையையும், வேலையில்லா திண்டாடத்தையும் எளிதில் போக்கிக் கொள்ளமுடியும்.//

மனித வளம் என்கின்ற ஒன்றினால் தான் உலகின் பார்வை இன்று நம் மீது விழுந்துள்ளது.

ப.செல்வக்குமார் said...

// உண்மையான நாகரீகம் என்பது பொருட்களை வாங்கிக் குவிப்பதன்று. அது சுயமாகவே தேவைகளை சுருக்கிக்கொள்ளுதல் ஆகும். //
இதை புரிஞ்சிக்கிடாவே நிறைய பிரச்சினைகள் தீர்ந்திடும் .
ஏன் அப்படின்னு பார்த்தா தங்களுக்கு தேவை இருக்கோ இல்லையோ நாகரீங்கம் அப்படின்னு பொருட்களை மக்கள் வாங்க ஆரம்பிக்கும் போது அதோட தேவை அதிகமாகிறது .. இதனால விலையும் அதிகமாகிறது .. இதனால நாகாரீகம் அப்படிங்கிறத புரிஞ்சிக்க வேண்டும் ..!!

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//Present sir//

இது தான் தமிழ் வலைப்பக்கம் ஆச்சே! அப்புறம் என்ன Present Sir. உள்ளேன் ஐயா - ன்னு தமிழ்ல சொல்லுப்பா போலிசு.

எதுவும் கருத்து இல்லையா சொல்றதுக்கு??!! நம்பமுடியவில்லை...வில்லை...வில்லை...

என்னது நானு யாரா? said...

@Cool Boy கிருத்திகன்.

//உங்கள மாதிரி எல்லாரும் நெனச்சாங்கன்னா உலகம் ஏன் சார் இப்பிடியிருக்கபோவுது..?
விவேக் சொல்றமாதிரி “100 பெரியார்ஸ் வந்தாலும்..//

மாற்றம் வருமுங்க. பலப் பல மகான்கள் தோன்றுவதற்கு முன்னாடி இப்படித் தான் இருட்டா இருந்ததுங்க. அப்புறம் மகான்களோட சிந்தனைகளால பல நல்ல மாற்றங்கள் வந்ததுங்க. அதனால நம்பிக்கையை மட்டும் கைவிடாமல் இருப்போமுங்க நண்பா!

என்னது நானு யாரா? said...

@தமிழ் உதயம்

//மனித வளம் என்கின்ற ஒன்றினால் தான் உலகின் பார்வை இன்று நம் மீது விழுந்துள்ளது.//

சரியா சொன்னீங்க நண்பா! அந்த மனித வளத்தை சரியா பயன்படுத்திக்கிட்டிருந்தா, வறுமையாவது, ஏழ்மையாவது. எல்லாம் தூசா பறந்துப் போயிருக்கும். கருத்துக்கு நன்றி நண்பா!

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்

//இதை புரிஞ்சிக்கிடாவே நிறைய பிரச்சினைகள் தீர்ந்திடும் .
ஏன் அப்படின்னு பார்த்தா தங்களுக்கு தேவை இருக்கோ இல்லையோ நாகரீங்கம் அப்படின்னு பொருட்களை மக்கள் வாங்க ஆரம்பிக்கும் போது அதோட தேவை அதிகமாகிறது //

தம்பி! உங்க புத்திக் கூர்மையை கண்டிப்பா பாராட்டியே ஆகணும். எல்லோருக்குமே உங்களைப் போல நல்ல சிந்தனை வந்திட்டா அப்புறம் கவலையில்லை. எப்போவுமே சந்தோஷம் தான் அமைதி தான். நன்றி செல்வா!

சசிகுமார் said...

நல்ல பகிர்வு நண்பரே.

சசிகுமார் said...

நண்பா author comment நிறத்தை மாற்றவும். இந்த நிறம் கண்களுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும்.

கக்கு - மாணிக்கம் said...

உயர்ந்த கருத்துக்கள்தான். ஆனால் நாம் இதனில் இருந்து விலகி வெகு தூரம் சென்றாகி விட்டது. அவ்வாறு நம்மை ஆட்சியாளர்கள் இழுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். சுதந்திரம் என்று வந்தபின்னர். காந்தியின் கொள்கைகள் எல்லாம் மிக எளிதாக, விரைவாக மறைத்து அழிக்கப்பட்டு அதன் பின்னர் வந்தவர்கள் தங்கள் மனம் போல் செயல் பட ...................................................

எனகென்னவோ நாம் மீண்டும் அந்த வழி செல்வோம் என்று தோன்றவில்லை. இன்றைய நடப்பில் இது முற்றிலும் சாத்தியமில்லை.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!