பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

24 Sept 2010

காமன் வெல்த் Games-ம் Common Man கந்தசாமியும்!

"அண்ணே முனுசாமி அண்ணே! இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டீங்களா?"

"
அட வாப்பா கந்தசாமி! எப்படி இருக்கே? எந்த விஷயத்தைக் கேள்விப்பட்டீங்களான்னு கேட்கிறா? எதைப்பத்தி சொல்ற?

"
காமன் வெல்த் Games பத்தி தான் அண்ணே சொல்றேன்! இந்தியா, அமோகமா காமன் வெல்த் போட்டிகள்ல, அதிக தங்க மெடல்களை வாங்கி குவிச்சிடுச்சாமே!"

காமன் வெல்த் தெய்வம் -1

"அப்படியா சங்கதி! எனக்குத் தெரியாதே! விஷயம் என்னான்னு தான் விவரமா சொல்லேன்."

அதாவது அண்ணே! காமன் வெல்த் போட்டிகள்ல நடந்த கூத்தெல்லாம் பாத்திட்டு, போட்டிகள்ல, பங்கு பெற்றதுக்கு மத்த நாட்டு விளையாட்டு வீரர்கலெல்லாம் வர்றதுக்கு பயந்தாங்க இல்ல? அதனால தான் நம்ப நாட்டுக்கு கிடைச்சிருக்கு லக்கிப் ப்ரைஸ்!

யாருமே கலந்துக்கல என்கிறதால, இந்தியா வீரர்கள் மட்டும் தானே மீதி எஞ்சி இருந்தாங்க! இப்போ புரியுதா அண்ணே? ஏன் இந்தியா, போட்டிகள்ல, அதிகமா தங்க மெடல்களா வாங்கி குவிச்சிட்டாங்கன்னு.

காமன் வெல்த் தெய்வம் - 2

அண்ணே! அது மட்டும் இல்ல! யாரும் வெளியல இருந்து வராததால காமன் வெல்த் கேம்ஸ்சையே, நேஷனல் கேம்ஸ்சா அறிவிச்சிட்டாங்களாம். அதனால மொத்தமா இந்தியா இத்தனை மெடல்களை ஜெயிசதுன்னு பேருக்கு சொல்லிகலாமாம்.

அது மட்டும் இல்லாம, தமிழ்நாடு இத்தனை மெடல்கள் ஜெயிச்சது, ஆந்திரா இத்தனை மெடல்கள் ஜெயிச்சது, கர்நாடகா இத்தனை மெடல்கள் ஜெயிச்சதுன்னு, மாநில மாநிலமா தனித்தனியா பிரிச்சி அறிவிச்சி இருக்காங்க! ஒட்டுமொத்த இந்தியா நிறைய மெடல்கள் ஜெயிச்சதுன்னும் ஒரு வகையில பெருமை. 

அதே சமயத்தில, அந்த அந்த ஸ்டேட்டை சேர்ந்தவங்களுக்கும், தங்களோட ஸ்டேட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைப் பாத்து பெருமைப் பட்டுக்கலாம். எப்படி ஒரே சமயத்தில, ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்சிட்டாங்க இல்ல? என்ன இருந்தாலும் இந்த மாதிரி மாத்தி யோசின்னு சொல்ற ப்ளான்ல நம்ப நாட்டை, அடிச்சிக்க ஆளே இல்லைன்னே

அது சரி கந்தசாமி! எதிர்கட்சி ஆளுங்க எல்லாம் இனி சுரேஷ் கல்மாடின்னு, அவரு பேரு வெச்சிக்க கூடாது, வேணும்னா, அவரு மண்மாடின்னு பேரு வெச்சிக்கலாம்னு போராட்டம் செய்றாங்களாமே! அவர் தலைமையில கட்டி இருக்கிற கட்டிடம் எல்லாம் பீச் மணல் கோபுரம் அளவுக்குத் தான் ஸ்டார்ங்கா இருக்காமே! 

ஆமா அண்ணே! நம்ப நாட்டு தலைவருங்க எல்லோருக்கும் மணல் கோபுரம் கட்டி விளையாடுற குழந்தை மனசு தான் அண்ணே!" 

இதை யோசிச்சீங்களா?” குழந்தைங்க தானே, பரிட்சை வருதுன்னு, கொஞ்சமும் பயம் இல்லாம, பரிட்சை வர்ற வரைக்கும் விளையாட்டுபுத்தியோட இருந்திட்டு, பரிட்சைக்கு முதநாள், ராத்திரியெல்லாம் கண் விழிச்சி படிச்சி பரிட்சைக்குப் போவாங்க!

அந்த மாதிரி, இருக்கிற காலம் எல்லாம் விட்டுட்டு, சாகும்போது சங்கரா! சங்கராங்கிற மாதிரி விளையாட்டு ஆரம்பிக்கிறதுக்கு, இன்னும் 1 வாரம் தான் இருக்குன்னு தெரிஞ்சவுடனே, பரபரப்பா எல்லா தலைவருங்களும் முண்டியடிச்சிட்டு வேலை பாத்தாங்களே. அப்போ எல்லோருக்குமே குழந்தை மனசு தானே?

 கந்தசாமி!இப்படி விளையாட்டை, விளையாட்டா எடுத்துகிட்டு நம்ப மானம் மரியாதை எல்லாத்தையும் சிக்ஸர் அடிச்சி கிரவுண்டுக்கு வெளியே அனுப்பிட்டாங்களேப்பா. இவனுங்களுக்கு மானம் ரோஷம் எல்லாம் இல்லையா?

மானமாவது! ரோஷமாவது! அதெல்லாம் பாத்தா துட்டைப் பாக்கமுடியுமா அண்ணே? இவனுங்களுக்குன்னு ஸ்பெஷல் போட்டி வைச்சா இவங்க தான் அண்ணே அதில நிறைய தங்க பதக்கமா வாங்கிட்டு வருவானுங்க!

காமன் வெல்த் தெய்வம் -  3

 அது என்ன போட்டின்னு கேட்கறீங்களா? அதாவது எவ்வளவு காரித்துப்பினாலும், அதைக் கண்டுக்காத மாதிரியே சிரிச்ச முகத்தோடயே, டீவியில பேட்டி கொடுக்குறானுங்களே, அதுக்கு ஒரு தங்கப் பதக்கம்

ஊழல் செய்தா, திட்டத் தொகையில 10% ஊழல் செய்வாங்க. அதுதான் உலகம் பூரா எல்லா நாடுகள்லேயும் இருக்கிற நடைமுறை. ஆனா நம்ப ஆளுங்க 90% ஊழல் செய்றானுங்களே! அந்த திறமைக்கு ஒரு தங்கப் பதக்கம்.

இத்தனை விஷயம் வெளியில தெரிஞ்சாலும், திரும்ப திரும்ப எலக்ஷன்ல நின்னு ஜெயிச்சி வர்றாங்களே, இந்த விஷயத்துக்கு மட்டும், முதல் பரிசுக்கு ரெண்டு பேரயையும் ஜாயின்ட் வின்னரா அறிவிக்கணும் அண்ணே.

ஒன்னு எலக்ஷன்ல நின்னு ஜெயிக்கிற தலைவனுங்க. இன்னொன்னு யாரு தெரியுமாண்ணே? திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு இவனுங்களை பதவிகள்ல உட்கார வைக்கிறோமே, அந்த மடை சாம்பிராணிகளா இருக்கிற நாமத்தான்! எப்படியோ சின்ன சின்ன நாடெல்லாம் கூட நம்பளை பாத்து சிரிப்பா சிரிக்கிற மாதிரி வைச்சிட்டானுங்க. த்தூன்னு காரித்துப்பி ரொம்பவே கேவலமா பாக்க வைச்சிட்டானுங்க!

அட விடு கந்தசாமி! இவ்வளவு நடந்தப் பின்னாடியும் ஒலிம்பிக்ஸ்சை நம்ப நாட்டுல நடத்துறதுக்கு ரகசியமா பேரம் பேசிக்கிட்டு இருக்கானுங்களாமே. அந்த தில்லுக்குக் கூட ஒரு தங்கபதக்கம் கொடுக்கலாம் இவனுங்களுக்கு!

யப்பா! யோசிக்கும் போதே மயக்கம் வருதே! இந்த விஷயத்தில கூட இவனுங்க சாதிச்சாலும் சாதிப்பானுங்க! ஒன்னும் சொல்றதுக்கு இல்ல அண்ணே! இந்தியாக்காரன்னா சும்மா இல்லைன்னு ஆச்சரியபட வைச்சாலும் வைப்பானுங்க! சரி! நான் நம்ப ஜோலியைப் பாக்க கிளம்பறேன்.

31 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

Unknown said...

இந்தியாவுக்கு வெளியிலும் நாம் கேவலம் வெளிச்சம் போட்டு காமிக்கப்படுகிறது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இவர்கள் சளைத்தவர்கள் இல்லை ....

ப்ரியமுடன் வசந்த் said...

இந்தியாகாரன் என்றால் இளப்பமாய் தெரியும் அனைத்து நாட்டுக்காரர்களுக்கும் இனி...

:(

எஸ்.கே said...

அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. மொத்தத்தில் இந்தியாவின் மானம் கொஞ்சம் கொஞ்சமாக செல்கிறது!

suneel krishnan said...

காமன் வெல்த் நிர்வாகம் - இந்திய ஒலிம்பிக் குழுவிடம் - " யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு பா டீ ஆத்துற".

வெங்கட் நாகராஜ் said...

:( இங்க அடிச்சது பத்தாதாம்.... அதுனால F1 [ஃபார்முலா1 ரேஸ்] வேற இந்தியாவில நடத்தப் போறாங்க.....

மானம் போகுதே......

வெங்கட்.

ப.கந்தசாமி said...

//மானம் போகுதே......//

இருந்தாத்தானே போறதுக்கு?

தெய்வசுகந்தி said...

//மானம் போகுதே......//

இருந்தாத்தானே போறதுக்கு?//

அதானே!!

என்னது நானு யாரா? said...

@கே.ஆர்.பி.செந்தில்

//இந்தியாவுக்கு வெளியிலும் நாம் கேவலம் வெளிச்சம் போட்டு காமிக்கப்படுகிறது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இவர்கள் சளைத்தவர்கள் இல்லை ...//

இந்த நிலை வருந்ததக்கதும், அவமானப்படத்தக்கதுமாய் இருக்கிறது. வெட்கம்!

Madhavan Srinivasagopalan said...

'Shameless' people did 'shameless' job

என்னது நானு யாரா? said...

@ப்ரியமுடன் வசந்த்

//இந்தியாகாரன் என்றால் இளப்பமாய் தெரியும் அனைத்து நாட்டுக்காரர்களுக்கும் இனி...

:(//

இவர்களை எல்லாம் இந்தியத் தாய் ஈன்று எடுத்தாலே! துக்கமாக இருக்கிறது.

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

//அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. மொத்தத்தில் இந்தியாவின் மானம் கொஞ்சம் கொஞ்சமாக செல்கிறது!//

நம் நாட்டிற்கு சரியான தலைவர்கள் கிடைக்கவில்லையே! எப்போது மாறுமோ இந்த இழி நிலை?

என்னது நானு யாரா? said...

@dr suneel krishnan

//காமன் வெல்த் நிர்வாகம் - இந்திய ஒலிம்பிக் குழுவிடம் - " யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு பா டீ ஆத்துற"//

மானம்கெட்டவர்கள்! புதிய சமூகம் வரும் வரை நாம் காத்திருப்போம் நம்பிக்கையுடன் நண்பரே!

என்னது நானு யாரா? said...

@வெங்கட் நாகராஜ்

//:( இங்க அடிச்சது பத்தாதாம்.... அதுனால F1 [ஃபார்முலா1 ரேஸ்] வேற இந்தியாவில நடத்தப் போறாங்க.....

மானம் போகுதே......//

இந்த இழி நிலை சீக்கிரம் மாறும் என்றே நம்பிக்கையுடன் இருப்போம் நண்பா!

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD

////மானம் போகுதே......//

இருந்தாத்தானே போறதுக்கு?//

மானம் கெட்டக் கூட்டம் நாட்டை ஆள்கிறது. என்ன செய்யலாம் ஐயா! நம் நிலை சீக்கிரம் நல்ல நிலை அடைய வேண்டும்.

என்னது நானு யாரா? said...

@தெய்வசுகந்தி

////மானம் போகுதே......//

இருந்தாத்தானே போறதுக்கு?//

அதானே!!//

இன்றைய சூழ்நிலையை நினைத்து வெட்கப்படுகின்றேன். இப்படியும் நடக்குமான்னு இன்னமும் நம்ப முடியாமல் இருக்கின்றேன் தோழி!

என்னது நானு யாரா? said...

@Madhavan

//Shameless' people did 'shameless' job..//

அண்ணா! இந்த அநியாயத்தை தட்டி கேட்பதற்கு எல்லோரும் சரியான முடிவு எடுக்க வேண்டும். இந்த அவமானத்தை எப்பாடு பட்டேனும் துடைத்தெரிய வேண்டும்.

அலைகள் பாலா said...

ஒரு ஒரு இந்தியன் முகத்துலயும் கிலோ கணக்குல சாணி அப்பிட்டாங்க.

Chitra said...

நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும். நல்லபடியாக நடத்தி முடிப்பார்கள் என்று நம்புவோம்.

மாயாவி said...

//நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும். நல்லபடியாக நடத்தி முடிப்பார்கள் என்று நம்புவோம்.//

சான்ஸே இல்லை.

அவுஸ்திரேலியா ஒலிம்பிக் தலைவர் சொன்ன மாதிரி இந்தியாவுக்கு காமன்வெல்த் போட்டிகளை நடத்த அனுமதித்திருக்க கூடாது.

இனிமேல் ஒரு போட்டியையும் இங்கு நடத்த அனுமதிக்க மாட்டார்கள்.

வேணும்னா மாடு புடிக்க மாதிரி போட்டி ஏதாவது இருந்தால் முயற்சி பண்ணி பார்க்கலாம்!!

Anonymous said...

நாமெல்லாம் இந்தியர்கள் . இதை தவிர வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.
அப்படியே இதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க.

http://kuwaittamils.blogspot.com/2010/09/blog-post_24.html

GSV said...

//மானம் போகுதே......//

இருந்தாத்தானே போறதுக்கு?

Repeatuuu

என்னது நானு யாரா? said...

@மாயாவி

அவுஸ்திரேலியா ஒலிம்பிக் தலைவர் சொன்ன மாதிரி இந்தியாவுக்கு காமன்வெல்த் போட்டிகளை நடத்த அனுமதித்திருக்க கூடாது.

இனிமேல் ஒரு போட்டியையும் இங்கு நடத்த அனுமதிக்க மாட்டார்கள்.

வேணும்னா மாடு புடிக்க மாதிரி போட்டி ஏதாவது இருந்தால் முயற்சி பண்ணி பார்க்கலாம்!!//

மானம் மரியாதை சுத்தமா போச்சுப்பா! ஏன் இந்த இழிவான நிலையிலேயே இருக்கணும்! மாற்றம் வர்றதுக்கு நாம ஏதாவது செய்ய முடியாதா?

என்னது நானு யாரா? said...

@Chitra

//நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும். நல்லபடியாக நடத்தி முடிப்பார்கள் என்று நம்புவோம்.//

உங்க நம்பிக்கைப்படி நல்லபடியா நடந்தா சரிதான். எல்லோருக்குமே சந்தோஷம் தான்.

என்னது நானு யாரா? said...

@அலைகள் பாலா

//ஒரு ஒரு இந்தியன் முகத்துலயும் கிலோ கணக்குல சாணி அப்பிட்டாங்க.//

சரியா சொன்னீங்க பாலா! இந்த அவமானத்தை எப்படித் துடைக்கப்போறோமோ தெரியல.

என்னது நானு யாரா? said...

@ஷேக்பாஷா

//நாமெல்லாம் இந்தியர்கள் . இதை தவிர வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.
அப்படியே இதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க. //

உங்க பதிவில சொல்லி இருக்கிற மாதிரி எருமைமாட்டு சகிப்புத்தன்மை அதிகமா இருக்கிற இந்தியர்கள். நன்றி நண்பரே!

என்னது நானு யாரா? said...

@GSV

////மானம் போகுதே......//

இருந்தாத்தானே போறதுக்கு?

Repeatuuu//

காந்திப் பிறந்த மண் இந்த பூமி! ரொம்ப ரொம்ப வேதனையான விஷயம் நண்பா! காலம் மாறும் என்று நம்பிக்கையுடன்...

vasu balaji said...

காமன்வெல்த்னா பொது சொத்துதானே. அதான் பங்கு போட்டானுவ போல. இதுக்கு வேற லஞ்சம் கொடுத்த ஊழல் எட்டி பார்க்குது.அவ்வ்வ்

Chef.Palani Murugan, said...

என்ன‌ ப‌ங்காளி ப‌ண்ற‌து.எல்லாம் ந‌ம்ம‌ள‌த்தான் சொல்ல‌னும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன பங்காளி இதுக்கே இப்பிடின்னா இன்னும் ஏசியன் கேம்ஸ், ஒலிம்பிக்ஸ் எல்லாம் இருக்கே?

ப.கந்தசாமி said...

ஆமாங்க இப்பத்தான பாக்கறேன், காமன் மேனுக்கு நாந்தான் கெடச்சனா? நான் எப்பேர்ப்பட்ட ஆளு. என்னைப்போய் காமன் மேன் ஆக்கீட்டீங்களே? உங்க பேர்ல ஏன் மான நஷ்ட வழக்கு போடக்கூடாது?

Anonymous said...

A thousand-li journey is started by taking the first step.

-----------------------------------

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!