பங்காளி! உனக்கே மனசே சரியில்லைன்னு ஃபோன் செய்த இல்லை. அதுக்கு சில பல காரணங்கள் இருக்குப்பா! நான் சொல்ற விஷயத்தை நல்லா கவனி! அப்புறம் யோசிச்சி நல்ல முடிவா எடு, என்ன?
முதல்ல நாம பார்க்க போறது உடலையும் மனசையும் எப்படி லேசா வைச்சுக்க முடியும்னு தான். அதற்கு பேரு Simple Living!
தமிழ்ல இதை எளிய வாழ்க்கை இல்லைன்னா இயற்கை வாழ்வியல்ன்னு சொல்லலாம்!
முதல்ல நாம பார்க்க போறது உடலையும் மனசையும் எப்படி லேசா வைச்சுக்க முடியும்னு தான். அதற்கு பேரு Simple Living!
தமிழ்ல இதை எளிய வாழ்க்கை இல்லைன்னா இயற்கை வாழ்வியல்ன்னு சொல்லலாம்!
நம்ப தேவையை ஒட்டியே பொருட்களை பயன்படுத்துறது. சரியா பங்காளி? தேவைக்கு மிஞ்சி எதையும் சேர்த்துகறதில்ல; எதையும் வீனாக்குறதில்லை; முடிஞ்ச வரைக்கும் நம்ப சுற்று சூழலை பாதிக்காத வகையில, ஆன்மீக சிந்தனையோடு, ஆரோக்கியத்தை பேணி காக்கிற வகையில வாழ்றது. இந்த சிந்தனை நிறைய பேர்களுக்கு புதுசா இருக்கலாம்!
ஏன்னா இன்னைக்கி பொருட்கள் நுகர்ச்சி என்கிறது, வெறி லெவல்ல எங்கேயோ போயிட்டு இருக்கு! எங்க போய் முட்டிகிட்டு மோதிகிட்டு மண்டை உடைபட்டி நிக்குமோ நம்ப நாகரீகம் தெரியலைப்பா!
நம்ப காந்தி தாத்தா சொன்னது, உலகத்தில எல்லோருடைய தேவைக்கும் போதுமானபடி பொருட்கள் இருக்கு, ஆனா எல்லோருடைய பேராசைக்கு தகுந்த மாதிரி தான் பொருட்கள் இல்லைன்னு சொன்னாரு.
நம்ப ஆசையை அளவோட வைச்சிக்கிட்டா நோ டென்ஷன்மா கண்ணு! வள்ளுவர் தாத்தா என்ன சொல்றாரு பாரு!
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
விளக்கம் புரியுது இல்ல? அதாவது எந்த எந்த பொருட்கள்ல இருந்து விலகி இருக்கிறோமோ, அந்த அந்த பொருட்கள் மூலமா வர்ற டென்ஷன் இல்லைன்னு சொல்றாரு.
நீ ஒரு விஷயத்தை நல்லா கவனிச்சி பாத்தா தெரியும்! நம்ப கிட்ட அதிகமா பொருட்கள் சேர சேர, அதுங்களை பராமரிக்கறதுக்கு, அதிகமா செலவு செய்ய வேண்டி இருக்குது. அதனால பல டென்ஷன், மனசுல குழப்பம், ஒரு ஏமாற்றம், பயம்! இதெல்லாம் தேவை தானா?
பாலைய்யா பாடுவாரு இல்ல, பாமா விஜயம் என்கிற படத்தில
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால், நிம்மதி இருக்காது, அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால், உள்ளதும் நிலைக்காது, அம்மா உள்ளதும் நிலைக்காது
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால், நிம்மதி இருக்காது, அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால், உள்ளதும் நிலைக்காது, அம்மா உள்ளதும் நிலைக்காது
தமாஷாவே உண்மையை எளிமையா சொல்லிட்டாரு இல்ல... பங்காளி? |
எப்படி சிம்பிளா அழகா புரிய வைச்சிட்டாரு பாத்தியா? யோசிச்சி பாரு! நம்ப வாழ்க்கையும் அந்த மாதிரி போகுதா? இல்ல, நல்ல மாதிரி தான் போகுதான்னு!
உன் பிரச்சனைக்கு காரணம் அளவுக்கு மேல ஆசைப் படறது தான். போதும் என்கின்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு சும்மாவா சொல்லிவைச்சாங்க நம்ப பெரியவங்க.
உன் பிரச்சனைக்கு காரணம் அளவுக்கு மேல ஆசைப் படறது தான். போதும் என்கின்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு சும்மாவா சொல்லிவைச்சாங்க நம்ப பெரியவங்க.
நான் சொல்றதை யோசிச்சிப் பாத்தா, உனக்கே உண்மை புரியும்! எந்த டீவியில படம் பாத்தாலும் பாடாவதி படமாத்தான் பாக்கபோறோம். ஆனா டீவியை விக்க விளம்பரம் செய்றவன், டீவியில படம் பாக்கணும்னா, அதுக்கு LCD TV வாங்குங்கிறான், இல்லை LED TV வாங்குங்கிறான், இல்லை PLASMA TV வாங்குங்கிறான், இல்லை! இல்லை! Latest Technology - 3D TV வாங்குங்கிறான்.
புத்தி உள்ளவங்க சிந்திச்சி செயல்படணும் இல்லையா? எது வீனான ஆடம்பர செலவுன்னு சிந்திச்சி, எது தேவையில்லாத பொருள்ன்னு யோசிக்கணுமா இல்லையா? ஆனா அப்படித் தான் செய்றோமா? பக்கத்து வீட்டுக்காரன், எதிர்த்த வீட்டுக்காரன் ஏதேதோ வாங்கறான்னு, நாமலும் அதையே வாங்கறோம். Peer Pressure என்கிற பேரில, Office-ல லோன் போட்டாவது, பொருட்களா வாங்கி குவிக்கிறோம்.
பங்காளி! எதையும் வீனாக்க கூடாது! ஒவ்வொரு பொருளையும் அதன் முழுமையான பயன்பாட்டினை உபயோகிச்சே ஆகணும். வேஸ்ட் பண்ண நினைசான்னா, வேஸ்ட் ஆகி போயிடுவான் மனுஷன்!
காந்தி தாத்தைவை பத்தி உனக்கு தெரியுமா? அவரு எதையும் வேஸ்ட் செய்யவே மாட்டாரு! டர்ன்னு கிழிச்சி எறிகிற காலண்டர் ஷீட் பின்னாடி கூட வேஸ்ட் பண்ணாம, அவரு சின்ன சின்ன குறிப்புக்கள், அன்றைய தேதியில யாரை பார்கணும், என்ன செய்யனும்னு லிஸ்ட் எல்லாம் அதில எழுதி வைப்பாரு.
ஒரு முறை, அவருடைய ஆசிரமத்தில ஒருத்தரு ஒரு சின்ன குட்டியூண்டு பென்சிலை தொலைச்சிட்டாங்களாம். அவங்களை இவரு தொலைச்சி எடுத்திட்டாராம் தெரியுமா? அந்த குட்டியூண்டு பென்சிலை தேடி கண்டுபிடிச்சி அவர்கிட்ட கொடுக்கிற வரைக்கும் விடைலையாம் நம்ப தாத்தா!
இந்த ஆஸரமத்தில தான் காந்தி தாத்தா, சின்ன பென்சில் துண்டை தேட வச்சாரு! சமர்மதி ஆஸ்ரம் |
எப்படி இருக்கு பாத்தீயா கதை! உனக்கு இதை கேக்கும்போது ஆச்சரியத்தை தருதோ இல்ல சிரிப்பை தருதோ எனக்கு தெரியல. ஆனா எதையும் வேஸ்ட் பண்ண கூடாதுன்னு ஒரு கொள்கை பிடிப்போடு இருந்தாரு பாரு! அதை நாம பாராட்டியே ஆகணும். அந்த கொள்கை தான் அவரை மஹாத்மாவா மாத்தி இருக்குதுங்கிறேன்.
நீ, நானு எல்லாம் மஹாத்மாவா மாற முடியலைன்னா, போகுது விடு! அதுக்கு நிறைய விஷயம் செய்யணும். ஆனா குறைஞ்சபட்சம் ஒரு நல்ல ஆத்மாவா இருக்க ட்ரை பண்ணலாம் இல்ல! உனக்கும் டென்ஷன் இல்லாம, ஊருக்கும் டென்ஷன் இல்லாம, நாம வாழ்ற பூமிக்கும் டென்ஷன் இல்லாம, நாம வாழ்ந்து முடிச்சிட்டா, அது தானே சந்தோஷம்!
ஒவ்வொரு பொருளை தயாரிக்கிறதுக்கும் இயற்கை வளங்களை அழிச்சித் தான் தயாரிக்க படுது. அதனால இயற்கை அன்னையை முடிஞ்ச வரை டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா அந்த அன்னை எப்பவுமே சிரிச்சி சிங்காரிச்சி அழகா இருப்பாங்க! நம்பளையும் சிரிக்க வைச்சி சிங்காரிச்சி அழுகு பார்ப்பாங்க!
அவங்களை டிஸ்டர்ப் செய்தோம்னா, அவங்க பத்ரகாளியா மாறி, அவங்க கோபத்தை நம்ப மேலேயே திருப்பிடுவாங்க! அந்த கோபத்தை தாங்கிற சக்தி யாருக்கு இருக்கு சொல்லு பங்காளி?
இன்னைக்கி கதை அது தானே நடந்திட்டு இருக்கு! சரியானபடி மழை பொழிய மாட்டெங்குது, பொழிஞ்சா வெள்ளக்காடா ஆக்குது ஊரையெல்லாம். வெய்யில் கொடுமையோ நம்பளை சுட்டு எரிக்குது. ரோட்டிலேயே முட்டை ஆம்லேட் போடற அளவுல, நம்பை மண்டையை காய வைக்குது. அதை பத்தி ஒரு அக்கா நல்லா காமெடியா சொல்லி இருக்காங்க பங்காளி. அதை படிக்கணும்னா இது வழியா ஏறி போப்பா!
எந்த பொருளை பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
Re Duce
Re Use
Re Cycle
விஷயம் சொல்றது புரியுதா?
பொருட்களோட பயன்பாட்டை குறைச்சுக்கோ!
முடிஞ்ச வரை அவைகளை மறுமறுபடியும் பயன்படுத்து!
அவைகளை மறு சுழற்ச்சி செஞ்சி மறுபடியும், பயன்பட்டுக்கு கொண்டு வா!
இதை எத்தனை பேரு கேக்கிற மனநிலையில இருக்காங்க பங்காளி? இன்னைக்கு மாசம் பொறந்தா 2 செட் புது ட்ரஸ் எடுக்குறாங்க, 3 மாசத்துல்ல ஒரு செல்ஃபோன் வாங்குறாங்க, 2 வருஷத்தில ஒரு முறை காரு பைக்க்னு வாங்கறாங்க, கட்டின பொண்டாட்டி புருஷனை அப்படி ஈஸ்யா மாத்தமுடியலைன்னு நிறைய பேரு தவிக்கிறதா கேள்வி.
எப்பவுமே புதுசு புதுசா, தினுசு தினுசா, பார்க்கணும், திங்கணும், ட்ரஸ் பண்ணனும்னு நினைக்கிறது ஒரு மனநோய் தெரியுமா? அதோட பேரு Maglomania. இன்னைக்கி அந்த வியாதி, பலபேருக்கு இருக்கும் போல
எனக்கு எப்பவுமே Simple and Sweet தான் Best Policy பங்காளி! என்னை பத்தி சொல்லி இருக்கேனே “என்னை பற்றி இங்கேன்னு” ஒரு தனி பக்கத்திலே. அதிலே வேணா போய் படிச்சி பாரு. நான் எப்படி பட்டவன்னு உனக்கு நல்லா தெரிய வரும்.
இந்த எளிய வாழ்க்கை வாழறதை பத்தி நிறைய பேசலாம். டாபிக் புடிச்சிருக்கான்னு ஒரு வார்தை சொல்லிட்டு போங்க மக்கா! சந்தோஷபடுவேன்.
32 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
scroll panni thaavu theeruthu.. maelae ulla kolaththaiyum, suya puraanaththaiyum thookki vera engavathu vaiyunga. ungalukku punniyamaa pogum
@Anonymous
//scroll panni thaavu theeruthu.. maelae ulla kolaththaiyum, suya puraanaththaiyum thookki vera engavathu vaiyunga. ungalukku punniyamaa pogum//
நண்பா! அவைகள் தான் என் அடையாளங்கள். அதனால் என்னை மன்னிச்சிடுங்க!
பாஸ் உங்க பதிவுகள் மீது எனக்கு உள்ள கோபத்தை பதிவாக போட்டிருக்கிறேன்
இப்பொழுதுதான், இந்த இடுகையை வாசித்தேன். Interestingly, இந்த கருவை வைத்துதான் எனது அடுத்த இடுகையை எழுதி கொண்டு இருக்கிறேன்.... ஆச்சர்யமாக இருந்தது.
Good One and quite interesting to read. Seems to be not possible to get rid of tension:-) Keep up the good work.
@அலைகள் பாலா
//பாஸ் உங்க பதிவுகள் மீது எனக்கு உள்ள கோபத்தை பதிவாக போட்டிருக்கிறேன்//
கோபம் மனுஷனுக்கு நோய்களை உண்டாக்கும்னு தெரியாதா நண்பா? ஏன் கோபமா போட்டீங்க, சாந்தமாவே பதிவு இடுங்க. உடலுக்கும் மனசுக்கும் டென்ஷன் இல்ல பாருங்க!
உங்க பதிவை படிச்சி, நீங்க கேட்டிருக்கிற கேள்விகளுக்கு பதில்களையும் சொல்லி இருக்கின்றேன்.
------------------------
மற்ற நண்பர்களே! நண்பர் அலைகள் பாலா என் பதிவுகளின் கருத்துக்களை எதிர்த்து ஒரு பதிவை இட்டு இருக்கின்றார்.
நீங்கள் எல்லோரும் நேரம் இருக்கும் போது அதனை படித்துப் பார்த்து உங்களின் கருத்தை சொல்லிட்டு வாங்க! கீழே அந்த பதிவோட லிங்கையும் கொடுத்திருக்கேன்.
http://alaigal-bala.blogspot.com/2010/09/blog-post_19.html
நன்றி நண்பர்களே!
@Chitra
oh! What a concidence! நீங்க சொன்னது எனக்கு ஆச்சரியமா இருந்தது. சரி! நேத்து ஏன் Absent? நேத்துப் போட்ட பதிவை படிச்சீங்களா இல்லையா?
ஆன்மீகத் தொடர் இது. தொடர்ந்து படிக்க வரணும்னு கேட்டுகிறேன்.
@பெயர் சொல்ல விரும்பாத நண்பரே!
//Seems to be not possible to get rid of tension:-) //
வருகைக்கும், உங்க கருத்துக்கும் நன்றி! டென்ஷன் இல்லாம வாழறதுக்கு கொஞ்சம் மனப் பயிற்சி இருந்தா போதும் பாஸ். எல்லாமே பழக்கத்தினாலே வர்றது தானே? என்ன நான் சொல்றது?
நீங்க சொல்றதை கேட்டுக்கிறேன்.
ஆசைதான் அழிவுக்கு காரணம். பணம், பொருள், ஆடம்பரம் இது மீது கொண்ட ஆசைகள்தான் இன்று பலரின் பிரச்சினைக்கே காரணம். மிக நல்ல பதிவு. தொடர்ந்து சமூக நல பதிவுகளை எழுதுங்கள். மிக்க நன்றி!
nice
// உலகத்தில எல்லோருடைய தேவைக்கும் போதுமானபடி பொருட்கள் இருக்கு, ஆனா எல்லோருடைய பேராசைக்கு தகுந்த மாதிரி தான் பொருட்கள் இல்லைன்னு//
அது உண்மைதாங்க...!! ஏன்னா பேராசை அப்படிங்கிறது உலகத்துல இருக்குற எல்லாமே தனக்கு வேணும் அப்படின்னு நினைக்க வைக்கும்ல ..!!
ஆஹா சூப்பர் சார் .... மிக விரிவான பதிவு ...பாராட்டுக்கள் ...
சரிதான், ஆனால் சாத்தியப்படுமா என்பது தான் கேள்விக்குறி
@தமிழ் உதயம்
உங்க கருத்துக்கு நன்றி நண்பரே!
@எஸ்.கே:
//ஆசைதான் அழிவுக்கு காரணம். பணம், பொருள், ஆடம்பரம் இது மீது கொண்ட ஆசைகள்தான் இன்று பலரின் பிரச்சினைக்கே காரணம்.//
ஆமாம்! ஆமாம்! சரியாக சொன்னீங்க நண்பா!
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): நன்றி போலிசு!
@ப.செல்வக்குமார்
//பேராசை அப்படிங்கிறது உலகத்துல இருக்குற எல்லாமே தனக்கு வேணும் அப்படின்னு நினைக்க வைக்கும்ல ..!!//
தம்பி சரியா சொன்னீங்க செல்வா! நன்றிப்பா!
@கே.ஆர்.பி.செந்தில்: உங்க பாராட்டுக்கு என் நன்றிகள் அண்ணாச்சி
@அருண் பிரசாத்:
//ஆனால் சாத்தியப்படுமா என்பது தான் கேள்விக்குறி//
உள்ளத்தோட அமைதியை பெரிய விஷயமா நினைச்சா, கண்டிப்பா சாத்தியப்படும் அருண். நன்றி அருண்!
கொஞ்சம் மனசு வச்சா சாத்தியப் படும் போலதான் இருக்கு, நல்ல இடுகை!
உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா? இதுவரைக்கும் இல்லன்னா கண்டிப்பா பன்னகூடதுனு ஒரு கொள்கைல்ல இருப்பிங்க. ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு கடைசியில் துறவறம் போக நினைப்பிங்க. இது காமடி இல்ல பங்காளி என்னுடைய prediction .
சரியா இல்லையானு பின்னூட்டம் போடுங்க பங்காளி
//கட்டின பொண்டாட்டி புருஷனை அப்படி ஈஸ்யா மாத்தமுடியலைன்னு நிறைய பேரு தவிக்கிறதா கேள்வி. //
இந்த கருthதுலேந்து 110% முரண்படுகிறேன் பங்காளி.
@பெயர் சொல்ல விருப்பமில்லை
//கொஞ்சம் மனசு வச்சா சாத்தியப் படும் போலதான் இருக்கு//
ஆமாம் அண்ணா! நீங்க சொல்றது ரொம்ப சரி!
@small ஆப்பு
//உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா? இதுவரைக்கும் இல்லன்னா கண்டிப்பா பன்னகூடதுனு ஒரு கொள்கைல்ல இருப்பிங்க. ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு கடைசியில் துறவறம் போக நினைப்பிங்க.//
உங்க Prediction சரிதான் பங்காளி! எப்படி கண்டுபிடிச்சீங்கன்னு என்னுடைய ஈமெயிலுக்கு உங்க பதிலை அனுப்புங்க.
@GSV
////கட்டின பொண்டாட்டி புருஷனை அப்படி ஈஸ்யா மாத்தமுடியலைன்னு நிறைய பேரு தவிக்கிறதா கேள்வி. //
இந்த கருthதுலேந்து 110% முரண்படுகிறேன் பங்காளி.//
நாட்டில இப்போ, அதிகமா டைவர்ஸ் நடக்குதுன்னு செய்திகள் வருதில்லையா? அதை வைச்சித்தான் சொன்னேன் அண்ணாச்சி!
குட் போஸ்ட்..
நிறைய புது விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன்
இதே போல் நிறைய மனம் சம்பந்தப்பட்ட பதிவுகளும்
இடுகையா எழுதுங்க வசந்த்
வாழ்த்துகள்
வாவ்... அருமையான பதிவுங்க வசந்த்... நெறைய நேரம் எடுத்து நல்ல தகவல்களை தொகுத்து இருக்கீங்க... வாழ்த்துக்கள்
@ப்ரியமுடன் வசந்த்
//இதே போல் நிறைய மனம் சம்பந்தப்பட்ட பதிவுகளும்
இடுகையா எழுதுங்க வசந்த்//
தலைவா! வாங்க! உங்க வருகைக்கு நன்றி! நீங்க சொல்ற மாதிரி மனம் சம்ப்ந்தப்பட்ட பதிவுகளும் எழுதறேன். தொடர்ந்து படிச்சிப் பாருங்க!
@அப்பாவி தங்கமணி
//நெறைய நேரம் எடுத்து நல்ல தகவல்களை தொகுத்து இருக்கீங்க... வாழ்த்துக்கள்//
உங்க பாராட்டுக்கு நன்றிங்க அக்கா! தொடர்ந்துப் படிக்க வருவீங்க இல்லையா அக்கா?
நீங்கள் காந்திய கோட்பாடுகளில் பட்டம் பெற்றவர் என்ற முறையில் காந்திய முறைகளை பற்றி நிறைய எழுதுங்கள் .
@dr suneel krishnan
//நீங்கள் காந்திய கோட்பாடுகளில் பட்டம் பெற்றவர் என்ற முறையில் காந்திய முறைகளை பற்றி நிறைய எழுதுங்கள்.//
உங்க கருத்துக்கு நன்றி நண்பரே!
இயற்கை மருத்துவம், எளிய வாழ்க்கை, சைவ உணவுக் கொள்கை, ஆன்மீக சிந்தனைகள், உள் அமைதி, உலக அமைதி என்று இது வரை எழுதியது, இனிமேல் எழுத இருப்பது எல்லாமுமே காந்திய சிந்தனைகள் தான் நண்பரே!
Vasanth your each discussion all good.Try to get more ladies readers that is only possible to change all.All mens show as a king but inside house all are servers and working happy to their kids and wife.After reading your message ladies can change food style and follow Gandhiji path .But before that if any way to disconnect T.V channels that is only help to save all the peoples from their magic world
@Tirupurvalu
//After reading your message ladies can change food style and follow Gandhiji path .But before that if any way to disconnect T.V channels that is only help to save all the peoples from their magic world//
உண்மை தான் நண்பரே! சில பெண்கள், இந்த வலைபக்கத்திற்கு ஆதரவு தருகிறார்கள். நாம் யாரையும் கட்டாயப்படுத்தி மாற்ற முடியாது இல்லையா நண்பரே!
மனசு பக்குவபட்டால் தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அது வரை நம் கடன் பணி செய்துக் கொண்டிருப்பதே என்று இருக்க வேண்டியது தான்.
//யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்//
எனக்கு ரொம்ப பிடித்த குறள். முடிந்த வரை கடைப்பிடிக்கிறேன் (கடைசியா நான் போட்ட பதிவு ஒரு exception).
பதிவு ஜோர்.
@DrPKandaswamyPhD
//எனக்கு ரொம்ப பிடித்த குறள். முடிந்த வரை கடைப்பிடிக்கிறேன் (கடைசியா நான் போட்ட பதிவு ஒரு exception).
பதிவு ஜோர்.//
நன்றி ஐயா! இந்த குறள்படி வாழ்க்கையை அமைச்சிகிட்டா அப்புறம் பிரச்சனை இல்லை தானே ஐயா! எனக்கு பிடிச்ச குறள்களில் இதுவும் ஒன்று!
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!