பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

27 Sept 2010

வினோத அனுபவங்கள் -2 : அமைதி பயணி


Peace Pilgrim - அமைதிப் பயணியை பற்றிய எல்லா பதிகளும் படிக்க இங்கே அழுத்தவும்

அனுபவங்களை சொல்லிக்கொண்டு
இருப்பவர் - அமைதிப்பயணி

என்னைப் பார்த்து பலர் கேட்கும் ஒரு சந்தேகம், எப்படி இவ்வளவு தூரம் பாதயாத்திரை செல்ல, உங்களுக்கு சக்தி கிடைக்கிறது என்பது தான். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் என்னவென்றால், இவ்வளவு ஆற்றல் ஏதோ, எல்லோருக்கும் இளமைக் காலத்தில் இயல்பாகவே தோன்றுகின்ற சக்தி அல்ல இது. 


இந்த அளவில்லா சக்திக்குக் காரணம் என்னவென்றால், என்னுள், உள் அமைதி மூலம் தோன்றும் முடிவில்லா ஆற்றல், தடையின்றி, இயல்பாகவே ஊற்றெடுத்து பொங்குகிறது.

நீங்கள் கடவுளின் கருவியாகி, கடவுளின் பணியை செய்யும் போது, உங்களுக்கு எந்த ஒரு இடையூறும் நேராது. ஏனெனில் கடவுள் உங்களின் மூலம் பணியை செய்கிறார். நீங்கள் வெறும் கருவி தான். கடவுள் என்ன செய்ய முடியுமோ, அவற்றுக்கு எந்த எல்லையும் இல்லை. நீங்கள் கடவுளுக்காக காரியங்கள் செய்தால், நீங்கள் போராட வேண்டி இருக்காது. நீங்கள் அமைதியும், நிதனாமும், முடிவில்லா ஆற்றலும் கொண்டவராக இருப்பீர்கள்.    

என்னுடைய யாத்திரை ஒரு போராட்டாம் அன்று. போராட்டம் வன்முறையின் பிள்ளை. மக்கள் மீது எதனையும் தினிக்கும் முயற்சி எதுவும் இதில் இல்லை. இந்த எனது யாத்திரை, பிராத்தனையின் வடிமாக இருக்கிறது. பிறருக்கு உதாரணமாக இருக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.

என்னுடைய நடைப் பயணம், அமைதிக்கான பிராத்தனையாகும். நீங்கள் உங்கள் வாழ்க்கையை பிராத்தனையாக அற்பனித்தீர்கள் என்றால், அந்த பிராத்தனை எல்லா எல்லைகளையும் கடந்த ஒரு நிலைக்குக் சென்றிருக்கும். இதனை நான் என் வாழ்க்கையின் சத்தியமாகவே காண்கின்றேன்.

இந்த யாத்திரையை நான் மேற்கொள்ளும் போது, என்னை நான் ஏதோ தனியாக நடந்து செல்லும் ஒரு பெண்ணாக எண்ணுவதேயில்லை. அதற்கு மாறாக, அமைதிக்காக கெஞ்சிக் கதறும் இந்த பூமித்தாயின் இதயத்தின் வடிவமாகவே என்னைக் காண்கின்றேன். மனித இனம் தவறி கீழே விழுந்துவிடுமோ என்கின்ற பயத்துடனேயே அந்தரத்தில் இருக்கும் கத்திமுணைப் போன்ற கூரான பாதையில் நடந்துக் கொண்டிருக்கிறது.


ஒரு பக்கம் குழப்பமும் பயமும், வேதனைகளும் நிறைந்த நரகம் காத்திருக்கிறது. மறுபக்கம் மொத்த மனித இனத்தையே தெய்வ நிலைக்கு உயர்த்தும் உன்னதப் பாதை காத்திருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவெனில், அந்த பயங்கரமான நரகத்தை நோக்கித் தான் இன்று, உலகத்தில் உள்ள எல்லா பெரிய சக்திகளும் இழுக்கின்றன. ஆனால் மனிதர்களே! மனம் தளராதீர்கள். நம்பிக்கையின் ஒளி பிரகாசமாகவே இருக்கிறது.     

சிலரின் ஓய்வில்லாத சேவையைக் கண்டு நான் இப்போதும் நம்பிக்கை கொள்கிறேன். இன்றைய நிலையில் மனித குடும்பம் இருட்டில் குருட்டுத்தனமாக அமைதிக்காக தேடி அலைந்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.


இந்த சோர்வளிக்கும் உண்மை ஒரு பக்கம் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த மனித சமூகத்தின் இதயத்தில் அமைதிக்கான ஆசையே நிறைந்திருப்பதைக் கண்டு நான் நம்பிக்கை கொள்கிறேன். 

என்னுடைய யாத்திரை என் சகோதர சகோதரிகளிடம் அமைதிப் பற்றி பேசுவதற்கான ஒரு வாய்ப்பு. என்னுடைய யாத்திரை ஒரு தவம்! உலகத்தில் நிலவும் இன்றைய துக்ககரமான சூழ்நிலைக்கு நானும் ஏதோ ஒரு வகையில் என்னுடய செய்கைகளினால் காராணமாக இருந்திருக்கின்றேன். அதற்கான பிராயசித்தம் தான் இந்த யாத்திரை.

போர்களினால் ஆறாத இரணங்களைப் பெற்று துனபப்படும் இந்த பூமி, எந்த வழியிலாவது முழுமையான அழிவிலிருந்து விலகி, அமைதிப் பாதைக்கு திரும்புவதற்காக எனது இந்த யாத்திரை, ஒரு பிராத்தனை! என்னுடைய இலட்சியம் பிறர் தம்முள் உள் அமைதி பெற்று, அதன் பயனாக உலக அமைதியைக் கொண்டுவருதலேயாகும். 

நான் உள் அமைதியை கண்டுப்பிடிக்க முடிந்ததென்றால், உங்களாலும் அது முடியும். அமைதிக்கான நேரம் வந்திருக்கிறது. இதனை தவறவிடக்கூடாது! 

அமைதி தூதுவர் - ஆப்ரஹாம் லிங்கன்


பங்காளி! இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க...

சொன்னது வரைக்கும், உங்களை எந்த விதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!

28 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

கருடன் said...

பங்காளி ஓட்டு போட்டேன்... காலைல கமெண்ட் போடறேன்.... :)

ப.கந்தசாமி said...

ஆஜர் போட்டுக்கிறேன்.

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS)

//பங்காளி ஓட்டு போட்டேன்... காலைல கமெண்ட் போடறேன்...//

நன்றி பங்காளி! உங்க கமெண்டுக்காக காத்திருக்கேன்.

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD

யெஸ் சார்! உங்க பிரசண்டை ஏத்துக்கிறேன்.

Anonymous said...

அருமையா எழுதி இருக்கீங்க! இன்னைக்கு உலகத்தில அமைதி என்கிறதே இல்லாம போச்சு! இந்த மாதிரி பதிவுகள் நிறைய வரணும்.

மகா கெட்டிகாரன் said...

அட! அட! அருமையா சொல்லிட்டு வர்றீங்க! உங்க பகிர்வுக்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present sir

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

Present sir

இன்னமும் அந்த ஸ்கூல் நினைப்பிலேயே இருங்க! கல்யாணம் ஆயிட்டப்பின்னாடி உங்க தங்க்ஸ் கிட்டேயும் Present sir-ன்னு சொல்லி மாட்டீக்காதீங்க.

அப்புறம் உங்களை கொமட்டுலேயே குத்துவாங்க.

என்னது நானு யாரா? said...

@Anonymous

//அருமையா எழுதி இருக்கீங்க! இன்னைக்கு உலகத்தில அமைதி என்கிறதே இல்லாம போச்சு! இந்த மாதிரி பதிவுகள் நிறைய வரணும்.//

நன்றிங்க நண்பரே! சரியா சொன்னீங்க! தொடர்ந்து வாங்க!

என்னது நானு யாரா? said...

@மகா கெட்டிகாரன்

//அட! அட! அருமையா சொல்லிட்டு வர்றீங்க! உங்க பகிர்வுக்கு நன்றி//

நன்றி நண்பரே!

Anonymous said...

ரொம்ப நல்லாருக்குங்க..மனதை தைக்கும் அனுபவ பாடம்

என்னது நானு யாரா? said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

//ரொம்ப நல்லாருக்குங்க..மனதை தைக்கும் அனுபவ பாடம்//

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ்!

எஸ்.கே said...

ஆசை மனதை அலைகழிக்கிறது. அதை அமைதிப்படுத்தினால் வாழ்க்கை இனிமையாகும்! மீண்டும் ஒரு சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

//ஆசை மனதை அலைகழிக்கிறது. அதை அமைதிப்படுத்தினால் வாழ்க்கை இனிமையாகும்! மீண்டும் ஒரு சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!//

சரியாக சொன்னீர்கள் நண்பா! உங்களின் கருத்தை எல்லோருமே ஏற்றுக்கொண்டால் மன அமைதி கண்டிப்பாக கிட்டும்.

செல்வா said...

// ஏனெனில் கடவுள் உங்களின் மூலம் பணியை செய்கிறார். நீங்கள் வெறும் கருவி தான்.//

இது உண்மைதாங்க , இந்த உண்மை தெரியாத்தலதான் இங்க பல பிரச்சினைகளே வருது .. நான்தான் செய்தேன் , என்னோடது அப்படின்னு ..!!

செல்வா said...

//மனித இனம் தவறி கீழே விழுந்துவிடுமோ என்கின்ற பயத்துடனேயே அந்தரத்தில் இருக்கும் கத்திமுணைப் போன்ற கூரான பாதையில் நடந்துக் கொண்டிருக்கிறது.//

எனக்கும் நிறைய பயமாக இருக்கிறது .. இங்கே நடக்கும் கலவரங்கள் , தீவிர வாதங்களைப் பார்க்கும் போது அடுத்து என்ன நடக்குமோ என்கின்ற பயம் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது .. நான் உலக அளவில் நடந்து கொண்டிருக்கும் தீவிரவாதங்களை பற்றி இங்கே கூறுகின்றேன் . ஏனெனில் இப்பொழுது உலக நாடுகளுக்கிடையே இருக்கும் போக்கு மூன்றாம் உலகபோரில் முடிந்துவிடுமோ என்கின்ற அச்சம் வருகிறது ..!!

செல்வா said...

அட இங்க நம்ம படம் ஓடுது ..?!?

அம்பிகா said...

\\போர்களினால் ஆறாத இரணங்களைப் பெற்று துனபப்படும் இந்த பூமி, எந்த வழியிலாவது முழுமையான அழிவிலிருந்து விலகி, அமைதிப் பாதைக்கு திரும்புவதற்காக எனது இந்த யாத்திரை, ஒரு பிராத்தனை!\\
நல்ல பகிர்வு. பிரார்த்தனை நிறைவேறட்டும்.

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்

பதிவோட நோக்கத்தை புரிஞ்சிகிட்டீங்க செல்வா! எனக்கு ரொம்ப் ரொம்ப சந்தோஷமா இருக்கு! வாழ்க வளமுடன்!

என்னது நானு யாரா? said...

@அம்பிகா

//நல்ல பகிர்வு. பிரார்த்தனை நிறைவேறட்டும்.//

வாங்க தோழி! அவங்க மட்டும் இல்ல! நாம எல்லோருடைய பிரார்த்தனையும் ஒன்னா சேர்ந்தா தான் அந்த உலக அமைதி என்கிற கனவை அடைய முடியும்.

உங்க வருகைக்கு நன்றி!

GSV said...

Nice....makka.

சி.பி.செந்தில்குமார் said...

லே அவுட் பக்காவா இருக்கு.இந்த சரக்கு விக்கலைன்னா வேற எது விக்கப்போவுது?

என்னது நானு யாரா? said...

@GSV

உங்க பாராட்டுக்கு நன்றி நண்பரே! தொடர்ந்து வரணும்னு கேட்டுக்கிறேன். அமைதிப் பயணி அவங்களோட அனுபவங்களைப் பத்தி, நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க.

என்னது நானு யாரா? said...

@சி.பி.செந்தில்குமார்

//லே அவுட் பக்காவா இருக்கு.இந்த சரக்கு விக்கலைன்னா வேற எது விக்கப்போவுது?//

உங்க பாராட்டுக்கு நன்றிங்க செந்தில். தொடர்ந்து வாங்க! அமைதிப் பயணியோட சேர்ந்து நாமலும் பயணிக்கலாம்.

Anonymous said...

அமைதி என்பது அவரவர்க்கு ஏற்படும் பக்குவம் குறித்து வேறுபடுகிறது.
வாழ்வில் கிடைத்த பல அனுபவங்களின் மூலம் நம்மை அதற்குத் தயார்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

என்னது நானு யாரா? said...

@இந்திரா

//அமைதி என்பது அவரவர்க்கு ஏற்படும் பக்குவம் குறித்து வேறுபடுகிறது.
வாழ்வில் கிடைத்த பல அனுபவங்களின் மூலம் நம்மை அதற்குத் தயார்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.//

சரியாக சொன்னீங்க இந்திரா! அமைதியை தேடி இன்று மனிதன் ஓடிக்கொண்டே ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் எப்போது அமைதியைக் காண்பானே தெரியவில்லை. நன்றித் தோழி!

தொடர்ந்து வாருங்கள்!

சௌந்தர் said...

நான் உள் அமைதியை கண்டுப்பிடிக்க முடிந்ததென்றால், உங்களாலும் அது முடியும். அமைதிக்கான நேரம் வந்திருக்கிறது. இதனை தவறவிடக்கூடாது!////

ஒரு சில நேரங்களில் அமைதியை கடைபிடித்தால் எந்த பிரச்னையும் வராது

என்னது நானு யாரா? said...

@சௌந்தர்

//ஒரு சில நேரங்களில் அமைதியை கடைபிடித்தால் எந்த பிரச்னையும் வராது//

முடிந்தவரை அமைதியை கடைப்பிடித்தால் உடலும் மனமும் சுகமே நண்பா.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!