மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகியோடும் மெழுகைப் போன்று ஒளியும் வீசலாம்
பாட்டு அருமை இல்ல பங்காளி! கண்ணதாசனுடைய வைர வரிகள்! சரி மனிதன் தெய்வமாக முடியுமா? மத்தவங்களுக்கு, தன்கிட்ட இருக்கிறதை எல்லாம் கொடுத்துட்டு ஓட்டாண்டியா இருக்கிறது தான் தெய்வ நிலையா?
அது விரும்ப படுகிற நிலை தானா? அப்படி தப்பி தவறி யாராவது இருந்திட்டா அவனுக்கு இனா வானா பட்டம் தானே கொடுப்பாங்க. அது என்ன இனா வானான்னு கேட்கிறியா? அது ஒன்னும் இல்ல அது இளிச்ச வாயன்னு அர்த்தமாம்.
உனக்கு என்ன தோணுது பங்காளி?
எனக்கு தோணுறதை சொல்றேன்! முடிவில அது சரியா இல்லையான்னு நீ சொல்லு! மனுஷன் தனிபட்டவன் கிடையாது.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... உண்மைதான் தாயே! உங்களை பார்த்திட்டோம் இல்லையா? |
மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 100 வருஷம் வாழ்வானா அவன்? ஆனா அதுக்குள்ளாற அவன் போடற ஆட்டம் இருக்கே! அவன் ஈகோ, பார்க்கிற எல்லாத்தையும் தன்னோட கட்டுபாட்டுக்கு கீழே கொண்டு வரணும்னு நினைக்குது. அவனை ஒரு கருவியாக்கி எல்லாத்தையும் எப்படியோ எல்லா பொருளையும் புகழையும் அடைய துடிக்குது.
ரஜினி சொன்ன மாதிரி ‘என் வழி தனிவழின்னோ’ இல்ல ‘என் வழி குறுக்கு வழின்னோ’ ஏதோ ஒரு வழியில அவனை ஓட ஓட விரட்டி மூச்சி கூட விடமுடியாத இறுக்கத்தை உண்டாக்குது. குறிக்கோள் மனசுல இருக்கிற ஆசைகளை நிறைவேத்திகிடணும்.
அவன் சக்திக்கும் மிஞ்சி அவனுடைய ஈகோ - மனசு, பெரிய பெரிய கோட்டைகளை ஆகாசத்தில கட்டுது. அந்த ஆகாச கோட்டைகளை அடைஞ்சி ஆள துடிக்குது. அந்த ஆகாச கோட்டைங்களுக்கு வழியை அடைய பூமில தேடிட்டு இருக்கான். இருட்டுல தொலச்சிட்டு வெளிச்சத்தில தேடினானாம் முள்ளா நசிருதின். அதை போல மனுஷன் பூமியில, எதை தேடி அடைஞ்சாலும், அதை அடைகிற வரையில இருக்கிற ருசி, அதை அடைஞ்ச பின்னாடி கண்ணாபிண்ணான்னு நம்ப ஷேர் மார்கெட் மாதிரி ஒரேயடியா டவுனாகி, பின்னாடி டல்லாகி போகுது.
இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு ஓடறான் ஓடறான் வாழ்க்கையோட எல்லைக்கே ஓடறான். எதை அடைஞ்சாலும் திருப்தி இல்ல! எந்த இடத்திலும் நிம்மதி இல்ல. ஓடி ஓடி கலைச்சி போறான். கடைசியில ஊரார் பார்த்திருக்க, உற்றார் அழுதிருக்க, ஐஸ் பாக்ஸ்சே சௌகரியமான இடம்னு அதில போய் படுத்துக்கிறான்.
இவன் வாழ்க்கை கணக்கில, இவனுடைய கணக்கு எல்லாமுமே நஷ்ட கணக்கு தான். ஏன் இந்த ஓட்டம்? அவன் சாதிச்சது தான் என்ன? உங்களுக்கு அலெக்ஸாண்டர் கதை தெரிஞ்சிருக்கும் இல்லையா?
வெறுங்கையை வீசிட்டு போனாயே மூடனே! உன்னால் எத்தனை எத்தனை உயிர்பலிகள்... |
அவன் சாகுறதுக்கு முன்னாடி அவனோட ஆளுங்க கிட்ட சொன்னானாம். ‘நான் செத்த பின்னாடி என்னை சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போகும்போது என்னோட இரண்டு கைகளையும் வெளியே தெரிகிற மாதிரி வைங்க!’
‘அப்பத்தான் இந்த மனுஷங்களுக்கு தெரியும், இவ்வளவு பெரிய ராஜா, ஓடி ஓடி உலகம் மொத்ததையும் தன்னோட கட்டுபாட்டுக்கு கீழே கொண்டுவரணும்னு நினைச்சி, நிறைய நாடுகளா புடிச்சான். கடைசியில ஒன்னுமே கொண்டுபோகாம வெறுங்கையோடவே போறான்னு.’
எவ்வளவு பெரிய உண்மை. ஆனா எவ்வளவு லேட்டா தெரிஞ்சிகிட்டான் Alexander the Great! அவனுக்கு இந்த உண்மை மரண படுக்கையில தானே தெரிய வருது! அதுவே அவன் சீக்கிரம் இதை தெரிஞ்சி இருந்தான்னா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!
அதனால எத்தனை எத்தனை பாதிப்புக்கள், உயிர் இழப்புக்கள். அதை எல்லாம் அவனால ஈடு செய்ய முடிஞ்சதா? இல்ல யாராவது அவனுடைய சட்டை காலரை பிடிச்சி கேள்வி கேட்கும்போது, பதில் சொல்ற நிலைமையில தான் அவன் இருந்தானா?
மனிஷனோட பேராசை, இன்னைக்கும் அதே தானே செய்ய வைக்குது. யாரு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை நான் சௌகரியமா வாழணும். அது தானே பிரதான நோக்கமே இன்னைக்கி எல்லா மனுஷங்க கிட்டேயும் இருக்கு.
யாராவது கவனிக்கும்போது சட்டத்தையும், சமூகத்தையும் மதிக்கிறவன், யாரும் கவனிக்கல நம்பளைன்னு தெரிஞ்சவுடனே அவனுடைய மிருக குணம் வெளிபடுதே. எல்லா சட்ட விரோத செயல்களையும் செய்ய ரெடியா இருக்கானே.
உதாரணத்துக்கு ட்ராஃபிக் போலிஸ் இருந்தா, ஒழுங்கா சிக்னலை மதிச்சி வண்டியை ஓட்டுகிறவன், போலிஸ் இல்லைன்னு தெரிஞ்சவுடனே சிக்னல், ரெட்ல இருந்தாலும் நிக்காம ஓட்டிட்டு போறானே! இந்த கேடு கெட்ட புத்தியை என்னன்னு சொல்லுறது.
அவனுக்கு ஒரு நியாயம்! ஊருக்கு ஒரு நியாயம்! ஊருக்கு தாண்டி உபதேசம் உனக்கில்லைன்னு சொன்னானாம் ஒரு தன்நலக்கார பையன்!
இப்படி சின்ன சின்ன தப்புக்கள் செய்யாதவங்க யாரு? எல்லோருமே ஏதோ ஒரு வகையில தப்பு செய்றோமே என்னை உள்பட! அது சின்னதா பெருசான்னு இல்ல பேச்சு! செய்றோமா இல்லையான்னு தான் பேச்சு!
தப்பை செய்றது மட்டுமில்லாம, செய்கிற தப்பை எல்லாத்தையும் நியாயப்படுத்திடறோம்! அப்புறம் மத்தவங்க யாரும் சரியில்லைன்னு குத்தம் சொல்றோம். இந்த நாடு உருபாடாது, இந்த உலகம் உருபடாது, எதுவும் சரியா வராது, இந்த புலம்பல்களை கேட்டு கேட்டு சலித்து போகலையா நமக்கு? இந்த நிலை மாற வேணாமா?
Charity begins at home-ன்னு சொல்லுவாங்க இல்ல! அதனால மாற்றம் எதுவா இருந்தாலும் அது நம்ப கிட்ட இருந்து தான் ஆரம்பிக்க முடியும். ஊரை மாத்த புறப்படறதுக்கு முன்னாடி முதல்ல நம்பளை மாத்திகிட வேணும் இல்லையா?
இதை பத்தி எல்லாம் யோசிச்சி இருக்கிங்களா நண்பர்களே? கண்டிப்பா மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம். அதற்கான அத்தாட்சி தான் பதிவில இருக்கிற தியாக சுடர் விளக்கு அன்னை தெரேசா அவங்க.
நீங்க எது எது உங்க தனிபட்ட குணம்ன்னு நினைக்கறீங்க. உங்களுடைய நேர்மையான தருணங்கள். அல்லது அதிலிருந்து சறுக்கிய தருணங்கள். மனம் விட்டு சொல்லிட்டு போங்களேன்.
ஒரு புதிய நாகரீகத்தை நோக்கி நம்முடைய பயணம் ஆரம்பிக்க போகிறோம். நீங்க எல்லோரும் கூட வந்தா ரொம்ப சந்தோஷ படுவேன். வருவீக இல்ல?
27 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
அருமையான கருத்து !!! அழகா சொல்லிருக்கீங்க !!! அதனால எல்லோரும் வாழ்ற வரைக்கும் மனுசன வாழ்ந்துட்டு போவோம்.
அன்பின் பங்காளி
நல்ல சிந்தனை - நல்லதொரு இடுகை
மனுசனா வாழணும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். ம்ம்ம் - எங்கோ சறுக்கிடறோம்.
பாப்போம் - மாறுவோம்
நல்வாழ்த்துகள் பங்காளி
நட்புடன் சீனா
நானும் உங்களோட பங்காளியா பழக வர்றேன். ஆனா பன்னீர் ரொம்பவே தெளித்து ஜலதோஷம் பிடிக்க வச்சுரூவீங்க போலிருக்கே. இடுகையில் நான் பார்த்தைவரைக்கும் அறிமுகத்தை ரொம்ப கலக்கலா செய்த ஆளு நீங்க தான். ரொம்ப நல்லவிதமாகத்தான் எழுதுறீங்க. தொடர்கின்றேன்.
மிக நல்லதொரு பதிவு பங்காளி..
மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே இவ்விலகு அமைதி பெரும்..
http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_18.html
\\ யாரும் கவனிக்கல நம்பளைன்னு தெரிஞ்சவுடனே அவனுடைய மிருக குணம் வெளிபடுதே\\
இத சரியா புரிஞ்சிட்டாலே நமக்கு நாமே காவல்,
தவறுகள் குறைந்துவிடும்.
நல்லபகிர்வு பங்காளி
ஓட்டுப்போட்டு பாராட்டுகிறேன்:)
மண்ணுக்கும், பொன்னுக்கும், பெண்ணுக்கும் இப்படி மாத்தி மாத்தி அடிச்சிகிட்டேதான் வாழ்க்கையே முடிஞ்சிருதே...
எவ்வளவு பெரிய உண்மை. ஆனா எவ்வளவு லேட்டா தெரிஞ்சிகிட்டான் Alexander the Great! அவனுக்கு இந்த உண்மை மரண படுக்கையில தானே தெரிய வருது! அதுவே அவன் சீக்கிரம் இதை தெரிஞ்சி இருந்தான்னா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!///
அலெக்ஸாண்டர் மட்டுமா நிறைய பேர் அப்படி தான் இருக்கிறார்கள்
பங்காளி வாழும் வரை ஒற்றுமையாக வாழ்வோம். இடைஞ்சல் யாரவது கொடுத்தால் போட்டு தள்ளுவோம் ஓகே வா?
எல்லா பக்கமும் திரும்பி யோசித்துப் பார்த்திரக்கீங்க.எழுத்துப் பிழைகளை தவிர்க்கலாம்.நல்ல பதிவு.
நன்றி
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்
இதுவரை உடலை செம்மையாக்க உதவும் பதிவுகளை இட்ட நீங்கள் இன்று மனதை செம்மையாக்கும் பதிவை போட்டிருக்கிறீர்கள், மிக்க நன்றி!
@GSV
நன்றி நண்பரே!
//எல்லோரும் வாழ்ற வரைக்கும் மனுசன வாழ்ந்துட்டு போவோம்//
சரியா சொன்னீங்க!
@cheena (சீனா): அண்ணா உங்க கருத்துக்கு நன்றி! தொடர்ந்து வந்து உங்க கருத்தை சொல்லுங்க
@ஜோதிஜி
//ஆனா பன்னீர் ரொம்பவே தெளித்து ஜலதோஷம் பிடிக்க வச்சுரூவீங்க போலிருக்கே.//
பங்காளி! இனி உங்க மேல குறைவாத் தெளிக்கிறேன். போதுமா? அப்படியே ஜலதோஷம் வந்தாக்கூட உபவாச சிகிச்சை முறை தான் கைவசம் இருக்கே. அதனால கவலையை விடுங்க
//அறிமுகத்தை ரொம்ப கலக்கலா செய்த ஆளு நீங்க தான். ரொம்ப நல்லவிதமாகத்தான் எழுதுறீங்க. //
உங்க பாராட்டுக்கு நன்றி! கொஞ்சம் நகைசுவையா எதாவது எழுதலாம்னு தோனிச்சி. அது தான்.
@Riyas
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!
@நிகழ்காலத்தில்:
//\\ யாரும் கவனிக்கல நம்பளைன்னு தெரிஞ்சவுடனே அவனுடைய மிருக குணம் வெளிபடுதே\\
இத சரியா புரிஞ்சிட்டாலே நமக்கு நாமே காவல்,
தவறுகள் குறைந்துவிடும்.//
சரியா சொன்னீங்க பங்காளி! உங்க பாராட்டுக்கு நன்றி!
@சிவராம்குமார்
//மண்ணுக்கும், பொன்னுக்கும், பெண்ணுக்கும் இப்படி மாத்தி மாத்தி அடிச்சிகிட்டேதான் வாழ்க்கையே முடிஞ்சிருதே..//
ஆமாம் நண்பா! அதை மாத்தத்தான் ஆன்மீக சிந்தனைகளை மனத்தில் கொண்டுவர வேண்டும். இது தொடரின் ஆரம்பம். அதனால் இனி நிறைய விஷயங்களை பற்றி பேசுவோம். நீங்களும் தொடர்ந்து வாங்க.
@தமிழ் உதயம்
//அலெக்ஸாண்டர் மட்டுமா நிறைய பேர் அப்படி தான் இருக்கிறார்கள்//
ஆமாம் நண்பரே! வெளியே மனிதன், உள்ளே மிருகம்! இப்படி பல பேரு இருக்காங்க. அவங்களுக்கு உள்ளே ஆன்மீக சிந்தனைகளை விதைச்சா நல்லபடியா மாறுவாங்க.
வால்மீகி திருடனா இருந்து நல்லவனா மாறினதா சொல்றாங்க இல்லையா?
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//பங்காளி வாழும் வரை ஒற்றுமையாக வாழ்வோம். இடைஞ்சல் யாரவது கொடுத்தால் போட்டு தள்ளுவோம் ஓகே வா?//
அது தப்பு போலிசு! நாம மனசால வன்முறையை நினைச்சாக்கூட அது மத்தவங்களை பாதிக்கிறதை விட நம்பளைத் தான் அது அதிகமா பாதிக்குது.
துஷ்டனை கண்டா தூர விலகுன்னு சொல்றாங்க இல்ல!
@சாமீ அழகப்பன்
//எழுத்துப் பிழைகளை தவிர்க்கலாம்.//
நண்பரே! நீங்க உரிமை எடுத்துக்கொண்டு எங்கெல்லாம் எழுத்து பிழை இருக்கிறது என்று சொல்லக் கூடாதா? எது என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் தயவு செய்து மறுபடியும் பதிவை படித்தப்பின் தவறுகளை சுட்டிக் காட்டுங்க நணபரே!
உங்களைப் போன்ற உண்மை நண்பர் எனக்கு வேண்டும். தொடர்ந்து வாருங்கள். தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். நன்றிகள் நண்பரே!
@எஸ்.கே
//இதுவரை உடலை செம்மையாக்க உதவும் பதிவுகளை இட்ட நீங்கள் இன்று மனதை செம்மையாக்கும் பதிவை போட்டிருக்கிறீர்கள்//
இதனை ஆன்மீகத் தொடராக எழுத விருப்பம். அதனால் உடல் நலனை குறித்துச் சிந்திக்கும் அதே வேலையில் மன நலனை பற்றியும் சிந்திப்போமே. உங்களின் ஆதரவு கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையினால்... நன்றி நண்பா!
சிந்தனை எல்லாம் செயல் வடிவு பெற வேண்டும் ...நமக்கு அது தான் பிரச்சனையே ..மனம் துவளாமல் முயற்சி செய்ய வேண்டும் ..
குறைகளின்றி வாழ்வது இயலாதது , இயன்றவரை மனிதனாக வாழ்ந்தாலே போதும் ..
@dr suneel krishnan
//சிந்தனை எல்லாம் செயல் வடிவு பெற வேண்டும் ...நமக்கு அது தான் பிரச்சனையே ..மனம் துவளாமல் முயற்சி செய்ய வேண்டும் ..//
சரியா சொன்னீங்க நண்பா! மனம் துவளாமல்முயற்சி செய்தால் கண்டிப்பா மனிதன் தெய்வமாகலாம்.
மனுஷன் தனிபட்டவன் கிடையாது.
//
அருமையான வாசகம்
நிறையச் சிந்திக்க வைக்கிறீர்கள்.
//ஒரு புதிய நாகரீகத்தை நோக்கி நம்முடைய பயணம் ஆரம்பிக்க போகிறோம். நீங்க எல்லோரும் கூட வந்தா ரொம்ப சந்தோஷ படுவேன். வருவீக இல்ல?//
வந்துட்டே இருக்கிறோம்!
@ஆர்.கே.சதீஷ்குமார்
//மனுஷன் தனிபட்டவன் கிடையாது.
//
அருமையான வாசகம்
நன்றி நண்பா!
@Dr.எம்.கே.முருகானந்தன்:
//நிறையச் சிந்திக்க வைக்கிறீர்கள்//
நன்றி நண்பாரே!
@தெய்வசுகந்தி
//வந்துட்டே இருக்கிறோம்!//
ரொம்ப மகிழ்ச்சி தோழியாரே! உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!
ஒரு புதிய நாகரீகத்தை நோக்கி நம்முடைய பயணம் ஆரம்பிக்க போகிறோம். நீங்க எல்லோரும் கூட வந்தா ரொம்ப சந்தோஷ படுவேன். வருவீக இல்ல?
எப்படி உங்க கூட வர்றது .
மெயில் எனக்கு தொடர்ந்து வரவில்லை எனன்னு பாருங்களேன்
@jebam
//மெயில் எனக்கு தொடர்ந்து வரவில்லை எனன்னு பாருங்களேன்//
Feed burner -ல இருந்து Feed எதுவும் போக மாட்டேனென்கிறது. ஏதோ பிரச்சனை போல இருக்கு! நீங்கள் Google reader-ல் படிக்கலாம். அல்லது நேரடியாக ப்ளாக் பககம் திறந்து படிக்கலாம். நன்றி நணபரே!
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!