பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

26 Sept 2010

ஜோக்ஸ்! வாங்க! சிரிச்சிட்டுப் போகலாம் வாங்க!


ராமு: வக்கிலுங்க கிட்டேயும் டாக்டருங்க கிட்டேயும் உண்மையை சொல்லணும்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?

சோமு: ஒரு வேலை, நம்ப கிட்ட எவ்வளவு பணம் இருக்குதுங்கற உண்மை தெரிஞ்சப்பின்னாடி அதுக்கேத்தமாதிரி வேலை செய்வாங்களோ என்னமோ?

வாய்விட்டு சிரிச்சிடுங்க!
இறுக்கமெல்லாம் போய்விடுங்க.

ராமு: சரி! கோழியில இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில இருந்து கோழி வந்ததா?

சோமு: கோழியில இருந்து தான் முட்டை வந்தது. ஏன்னா, முட்டையில இருந்து சேவல் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கே

ராமு: சரி! ஒருத்தன் 8 அடிக்கு ஃப்ளூட் ஒன்னு செய்தான். அதுக்கு என்ன பேரு வைச்சான் சொல்லு?

சோமு: அது பெரிசா இருந்ததாலே புல்லாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் குழல்ன்னு பேரு வெச்சிருப்பான். ஜோக் புரியலையா புல்Long குழல். இப்போ புரிஞ்சதா?

ராமு: ஒரு தத்துவம் சொல்றேன் கேளு! 
மெயில்ல (Train) மயிலை ஏத்தலாம்; அது தாங்கும். ஆனா மயில்ல மெயில் ஏத்தினா அது தாங்குமா? அது செத்துடும்.

சோமு: நானும் ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!

எருமை மேல சவாரி செய்றவன் எமன்.
புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்

ராமு: பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து உன்னை அடிக்க வரப்போறாங்க பாத்து பேசுப்பா!
சோமு: அப்படி வந்தா சரணாகதி தான். சட்டுனு அவங்க கால்ல விழுந்திட மாட்டேன்.
ராமு: நீ செய்தாலும் செய்வே சரி! இந்த பஞ்ச் டயலாக்கை கேளேன்!

பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி

சோமு: சூப்பரு!

ராமு: ஒரு பெரியவரு, கையில கொம்பு வைச்சிட்டு, கல்யாண சத்திரத்தை சுத்தி சுத்தி வந்திட்டே இருந்தாராம் எதுக்கு சொல்லு சோமு?

சோமு: இது ரொம்ப சிம்பிள்! கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிருன்னு சொல்லுவாங்க இல்லை. அதனால காக்கா குருவி ஓட்டுறதுக்காக இருக்கும்.

அதை இப்படியும் சொல்வாங்க தெரியுமா? கல்யாண சத்திரத்தில, ஆடு மாடுங்களை உள்ளே விடமாட்டாங்க. ஏன்னா? கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிரு. அதை, இதுங்கல்லாம் மேய்ஞ்சிட்டு போயிடக்கூடாது இல்ல.

ராமு: ஆட்டோ ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ஆட்டோ ஓட்டுவாரு

ராமு: பஸ் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: பஸ்சை ஓட்டுவாரு

ராமு: ட்ரைன் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ட்ரைன் ஓட்டுவாரு

ராமு: சரி! அப்போ ஸ்க்ரு ட்ரைவர்???...


ரெண்டு அக்காங்க பேசிக்கிறாங்க!

விமலா: உன் புருஷன் தங்கமானவருன்னு சொன்னே!
கமலா: ஆமாம் சொன்னேன்.
விமலா: அதுக்காக அவரு பாதுகாப்பா இருக்கணும்னு, அவரை பீரோல வைச்சிப் பூட்டுறது, கொஞ்சம் கூட நல்லா இல்ல.

விமலா: எங்க விட்டில இன்னைக்கி விலை உயர்ந்த சமையல்ப்பா!
கமலா: அப்படி என்னப்பா செய்தே?
விமலா: 22 கேரட்ல பொரியலும், 18 கேரட்ல குழம்பும் வைச்சேன்

தங்கமணி: என்னங்க! ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
ரங்கமணி: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.



குறிப்பு: ஜாலியா சிரிங்க! ஜாலியா ஜோலியைப் பாருங்க! சில ஜோக்ஸ் எப்பவோ எங்கேயோ படிச்சது. பெயர் தெரியாத, முகம்தெரியாத ஜோக்ஸ் எழுத்தாளர்கள், சமூகத்துக்கு நல்லா சேவைச் செய்றாங்கப்பா! எழுதிய புண்ணியவான்க எல்லோருக்கும் தேங்க்ஸ்ங்கோ!


படிச்சதைப்பத்தி என்ன நினைக்கறீங்க! படிச்சதில பிடிச்சது எதுங்க! கொஞ்சம் கருத்து சொல்லிட்டுப் போங்க! ஆங்...அப்படியே ஓட்டுப் போட மறக்காதீங்க! மறுபடியும் சந்திக்கலாமுங்க! 

41 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sirikkirathukku iyarkai vaiththiyamaa?

சௌந்தர் said...

எருமை மேல சவாரி செய்றவன் எமன்.
புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்///

என்ன ஒரு தத்துவம்...இதுவும் ஒரு வைத்தியம் சொல்லி போட்டு இருக்கீங்க நல்லா இருக்கு

கருடன் said...

ஹா..ஹா..ஹா.ஹா...ஹா...ஹி..ஹி..ஹீ

பங்காளி சிரிச்சிடேன்.... சத்தம் கேட்டுதா??

இம்சைஅரசன் பாபு.. said...

சிரிப்பு வைத்தியம் நல்ல இருக்கு

கருடன் said...

@ரமேஷ்
//sirikkirathukku iyarkai vaiththiyamaa?//

எப்படி இருந்தாலும் உன்னால சிரிக்க முடியாது... Becoz மனுஷ்ங்க மட்டும்தான் சிரிக்க முடியும்... நான் மனுஷன், பாரு மேல எப்படி சத்தம் போட்டு சிரிச்சி இருக்கேன்...

Chef.Palani Murugan, said...

என்ன‌ ப‌ங்காளி ச‌க‌ல‌வித‌மான‌ விருந்து ப‌டைக்கிறீங்க‌.ஜ‌மாய்ங்க‌

GSV said...

@Terror
பங்காளி !!! சிரிகாதவங்க பெரிய மனுஷன் இது தெரியாதா!!!

கிறுக்கன் said...

மிகவும் பிடித்தது
பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி

;-)))))

அருண் பிரசாத் said...

சரி பங்காளி ஏதோ ஜோக்கு சொல்லுறேன்னு சொன்னீங்களே! அதை சொல்லுங்க

Madhavan Srinivasagopalan said...

//பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி//

nice

கருடன் said...

@GSV said...
//பங்காளி !!! சிரிகாதவங்க பெரிய மனுஷன் இது தெரியாதா!!//

நோ நோ பாலிடிக்ஸ்...!!!

அன்புடன் மலிக்கா said...

பாசக்கார புள்ளை பளிச்சின்னு சிரிக்க வச்சிபாக்குது. ஹா ஹா தாங்கலமா.சிரிப்பு..

எஸ்.கே said...

சிரிப்பு அற்புதமான மருந்துதான்! நகைச்சுவை அனைத்தும் நன்றாக இருந்தன! சரி வந்ததுக்கு நான் இரண்டு ஜோக் சொல்லட்டா?

ஜோக் 1 :
ஒரு தம்பதியினர் இன்பச் சுற்றுலாவிற்காக(picnic) ஒரு காட்டில் தனியாக முகாமிட்டிருந்தனர். அங்கே மனநலகாப்பகத்திலிருந்து தப்பித்த ஒருவன் அங்கே
வந்தான்.

அவன் திடீரென மனைவியின் கழுத்தில் ஒரு கத்தியை வைத்து ”நான் உன்னைக் கொல்லப் போகிறேன் ”உன் பெயர் என்ன சொல்” என்றான்.

அவள் ”மேரி” என்றாள்.

”அது என் அம்மாவோட பேர், நீ என் அம்மாவை ஞாபகபடுத்திட்ட.அதனால உன்னை விட்டிரேன்” என்றான் அவன்.

பிறகு கணவனைப் பார்த்து கேட்டான் ”உன் பெயர் என்ன?”

கணவன் சொன்னான் ”என் பெயர் ஜோசப், ஆனால் நண்பர்கள் என்னை மேரி என அழைப்பார்கள்.”
**************
ஜோக் 2:
ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.

அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”

அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள்.

அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள்.
அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் அந்த பெண்ணிடம் கிளி மறுபடியும் அப்படி சொல்லாது என வாக்குறுதி தந்தார்.

அவள் மாலை வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,”ஏ, பெண்ணே”

அவள் ”என்ன” என்றாள்

கிளி சொன்னது, “உனக்கே தெரியும்”

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//sirikkirathukku iyarkai vaiththiyamaa?//

மனம்விட்டு சிரிக்கறது; பிறரை மகிழவைத்து சிரிக்க வைக்கிறது; ரெண்டுமே இயற்கை வைத்தியம் தான் ரமேஷ்! நன்றி சிரிப்புப் போலிஸ்!

என்னது நானு யாரா? said...

@சௌந்தர்

//என்ன ஒரு தத்துவம்...இதுவும் ஒரு வைத்தியம் சொல்லி போட்டு இருக்கீங்க நல்லா இருக்கு//

சும்மா ஒரு காமெடிக்கு...தலைக்குப் பிடிச்சிருக்கிறது எனக்குத் சந்தோஷம்.

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS)

//ஹா..ஹா..ஹா.ஹா...ஹா...ஹி..ஹி..ஹீ

பங்காளி சிரிச்சிடேன்.... சத்தம் கேட்டுதா??//

டெரர் பங்காளி! நீங்க தான் ஓய் நல்ல மனுஷன். வாய்விட்டு சிரிக்கறீங்க பாருங்க. சந்தோஷமா சிரிச்சீங்கன்னா சங்கடம் எதுவும் இல்லைங்க! நன்றி பங்காளி! தொடர்ந்து வாங்க!

என்னது நானு யாரா? said...

@இம்சைஅரசன் பாபு..

//சிரிப்பு வைத்தியம் நல்ல இருக்கு//

எல்லோருக்குமே பிடிச்ச ரொம்ப மகிழ்ச்சியான வைத்தியம் இல்லையா நண்பா? உங்க வருகைக்கு நன்றி இம்சை அரசா!

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS)

//எப்படி இருந்தாலும் உன்னால சிரிக்க முடியாது... Becoz மனுஷ்ங்க மட்டும்தான் சிரிக்க முடியும்... நான் மனுஷன், பாரு மேல எப்படி சத்தம் போட்டு சிரிச்சி இருக்கேன்.//

நோ சண்டை! இங்க அமைதியைப் பத்தி பேசிட்டி நாமலே சண்டையைப் போடலாமா? அவரு தெய்வ மனுஷன் பங்காளி

என்னது நானு யாரா? said...

@Chef.Palani Murugan, LiBa's Restaurant

//என்ன‌ ப‌ங்காளி ச‌க‌ல‌வித‌மான‌ விருந்து ப‌டைக்கிறீங்க‌.ஜ‌மாய்ங்க‌//

நன்றி பங்காளி! இன்னைக்கி சண்டே இல்லையா? அதனால ஜாலியா சிரிக்கலாம்ன்னு தான். மத்த நாள்ல எப்பவும்போலவே இருக்கும் பங்காளி.

என்னது நானு யாரா? said...

@GSV

//பங்காளி !!! சிரிகாதவங்க பெரிய மனுஷன் இது தெரியாதா!!!//

புரியலையே பங்காளி! எப்படி பெரிய மனுஷம் ஆகமுடியும்? சிரிச்சி சந்தோஷமா நோய் எதுவும் இல்லாதவன் தானே பெரிய மனுஷன்?

என்னது நானு யாரா? said...

@அன்புடன் மலிக்கா

//பாசக்கார புள்ளை பளிச்சின்னு சிரிக்க வச்சிபாக்குது. ஹா ஹா தாங்கலமா.சிரிப்பு.//

நன்றி சம்பந்தி! உங்க பாராட்டுக்கு நன்றிங்க!

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

நண்பா! நீங்க எழுதின ரெண்டு ஜோக்குகளும் சூப்பரு! அருமையா இருக்குங்க. கருத்து மட்டும் சொல்லிட்டுப் போகாம உங்க பங்குக்கு ஜோக்குங்க சொன்னீங்க பாருங்க. படிக்கிற மத்த நண்பர்களும் உங்க ஜோக்குகளைப் படிச்சி வயிறு வலிக்க சிரிக்கப் போறாங்க!

என்னது நானு யாரா? said...

@Madhavan

நன்றி அண்ணாச்சி

@கிறுக்கன்: நன்றி பங்காளி!

@அருண் பிரசாத்:

//சரி பங்காளி ஏதோ ஜோக்கு சொல்லுறேன்னு சொன்னீங்களே! அதை சொல்லுங்க//

அருண்! ஜோக் சொல்லும்போது எங்கப் போனீங்க! இப்படி லேட்டா வந்தா எப்படி? ஜோக் சொல்லி முடிச்சிட்டேனே.

பெசொவி said...

சிரிப்பதால் ஆயுள் கூடும் என்பார்கள், உங்கள் பங்குக்கு என் ஆயுளைக் கூட்டி விட்டீர்கள், நன்றி!

கருடன் said...

@என்னது நானு யாரா?

//நோ சண்டை! இங்க அமைதியைப் பத்தி பேசிட்டி நாமலே சண்டையைப் போடலாமா? அவரு தெய்வ மனுஷன் பங்காளி//

என்ன பங்களி இப்படி சொல்லிடிங்க? நானும் ரமேசும் அண்ணன், தம்பி மாதிரி (ரமேசு அண்ணன்..).

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் அருமை . கலக்குங்க . பகிர்வுக்கு நன்றி

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS)

//என்ன பங்களி இப்படி சொல்லிடிங்க? நானும் ரமேசும் அண்ணன், தம்பி மாதிரி (ரமேசு அண்ணன்..)//

அப்போ சரி! விளையாட்டா யாருக்கும் அடிபடாம சண்டையைப் போட்டுக்கோங்க! அவரு அண்ணன்னு சொல்றீங்க ஆனா அவரைப் பாத்தா நம்ப முடியலையே! அவ்வளவு வயசானவரா அவரு?

என்னது நானு யாரா? said...

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

//அனைத்தும் அருமை . கலக்குங்க . பகிர்வுக்கு நன்றி//

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே! தொடர்ந்து வருக! ஆதரவுத் தருக நண்பரே!

Chitra said...

விமலா: எங்க விட்டில இன்னைக்கி விலை உயர்ந்த சமையல்ப்பா!
கமலா: அப்படி என்னப்பா செய்தே?
விமலா: 22 கேரட்ல பொரியலும், 18 கேரட்ல குழம்பும் வைச்சேன்

தங்கமணி: என்னங்க! ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
ரங்கமணி: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.


....very funny!

என்னது நானு யாரா? said...

@Chitra

//....very funny!//

நன்றிங்க சித்ரா! Very Funny மட்டும் தானா? உங்க ட்ரேட் மார்க் சிரிப்பு ஹா ஹா இல்லையே! ரொம்ப வருத்தமா இருக்கு. உங்களையே சிரிக்க வைக்க முடியலையே. அப்புறம் வேற யாரை சிரிக்க வைக்க போறேன்.

சிரிக்க வைக்கிற தொழில் கஷ்டம் தான் போல இருக்கு. சரி இன்னும் அதிகமா ட்ரை பண்றேன்.

என்னது நானு யாரா? said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை

//சிரிப்பதால் ஆயுள் கூடும் என்பார்கள், உங்கள் பங்குக்கு என் ஆயுளைக் கூட்டி விட்டீர்கள், நன்றி!//

ஆயூள் கூடிப்போச்சா! என் காதில ஆயில் கூடிப்போச்சுன்னு விழுந்துடிச்சி! சாரி ப்ரதர்!

Sen22 said...

:)))))))

Super Jokes...

என்னது நானு யாரா? said...

@Sen22

நிறையவே சிரிச்சி என்னை சந்தோஷப் படுதிட்டீங்க!

நன்றி நண்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லவேளை பங்காளி ஜோக்குன்னு முன்னாடியே போட்டுட்டதால நானும் நல்லாவே சிரிச்சிட்டேன்!, வரட்டா....!

என்னது நானு யாரா? said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

//நல்லவேளை பங்காளி ஜோக்குன்னு முன்னாடியே போட்டுட்டதால நானும் நல்லாவே சிரிச்சிட்டேன்!, வரட்டா.//

என்ன சாரே செய்றது! உங்க லெவலுக்கு நான் வர்றணும்னா அதுக்கு நிறைய ட்ரைனிங்க் வேணும்னு எனக்குத் தெரியாதா? சும்மா குரங்கு பெடல் அடிச்சி கத்துக்கிட்டு இருக்கேன் சாரே! எப்படியோ திட்டாம விட்டீங்களே! அது வரைக்கும் நல்லது தான்.

உங்க மனசு தங்கமான மனசு இல்ல? அதனால திட்டாம போயிட்டீங்க போல!

வெங்கட் நாகராஜ் said...

இயற்கை வைத்தியத்திற்கு பிறகு சிரிப்பு வைத்தியம்? நல்ல ஜோக்ஸ்......

என்னது நானு யாரா? said...

@வெங்கட் நாகராஜ்

//இயற்கை வைத்தியத்திற்கு பிறகு சிரிப்பு வைத்தியம்? நல்ல ஜோக்ஸ்.//

உங்க பாராட்டுக்கு நன்றி தல! அடிக்கடி வாங்க! நீங்கெல்லாம் வந்தா மனசுக்கு சந்தோஷம்.

Dhana Lakshmi said...

பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி super

செல்வா said...

//அட இங்க நம்ம படம் ஓடுது ..?!?///

அம்பிகா said...

\\பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி\\
nice.

Unknown said...

எல்லாமே சூப்பரு மக்கா

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!