பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

2 Oct 2010

எந்திரனைப் பார்ப்போம்! நாட்டையும் நினைப்போம்!


ராசா! வாங்க பங்காளி! இன்னைக்கு எந்திரன் சக்கப்போடு போடுதாமில! ரொம்ப சந்தோஷம்பா!

தல! பட்டையை கிளப்பிட்டீங்க போல!
வாழ்த்துக்கள் தல!
ஆமா ரவி பங்காளி! நம்ப தலைவரு கலக்கி இருக்காருப்பா! ஐயோ! செம தூள்!  Chance-ஏ இல்லப்பா! படம் வர்றதுக்கு லேட்டானாலும் செம லேட்டஸ்டா வந்து தூள் பண்ணிட்டாரு தெரியுமா? எத்தனை முறை வேணும்னாலும் பார்க்கலாம். ஏன் பங்காளி! நீங்க இன்னும் பார்கலைப் போல இருக்கே?

ஆமாம்பா எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. கண்டிப்பா பார்ப்பேன்! கொஞ்சம் சத்தமெல்லாம் அடங்கட்டும்னு காத்திருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சி நிதானமா பார்க்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன். அப்போ டிக்கட் விலையும் நார்மலா இருக்குமில்ல.

அதுவும் சரிதான். நம்ப அளவுக்கு நீங்க தீவிரம் இல்லைங்கிற விஷயத்தை நான் மறந்தேப் போயிட்டேன்.

ஆமாங்க ராசா! நாடு முழுக்க இதேப் பேச்சா இருக்கே, அப்புறம், இன்னைக்கு காந்தி பிறந்த நாள். அதை யாராவது ஞாபகம் வைச்சிருக்காங்களாப்பா? நாம யாருமே அதை ஞாபகம் வைச்சிருக்கிற மாதிரியே தெரியலையே! இதை நினைச்சா மனசு சங்கடப்படுது.

ஓ ரவி! இன்னைக்கு காந்தியோட பிறந்தநாளா? அது தான் டாஸ்மார்க் கடை மூடி இருக்கா.  இன்று விடுமுறைன்னு போர்ட் கூட போட்டிருக்காங்க! ஆமாம் அதைப் பார்த்தப்பின்னாடி தான் தெரிஞ்சது.

ஆமாம்பா! ரொம்ப வருத்தமா இருக்கு! இது என்ன ஒரு மோசமான நாகரீகம்னு தெரியலேயேப்பா. நாட்டுக்காக பாடுபட்டு பல தியாகங்களை செய்த நம்ப தலைவருங்களை நினைக்கிறதுக்குக் கூட ஆள் இல்லையேப்பா. அவரு பிறந்தநாளிலக் கூட சினிமா படங்களா போடறான் டீவியில. என்னக் கொடுமை சரவணன்!

நாட்டில இன்னைக்கு இருக்கிற பல அவலங்களுக்கு நாம சரியானபடி நம்ப தலைவருங்களை பத்தி தெரிஞ்சி வைச்சுக்கலைன்னு தான் காரணம் சொல்வேன். 

சினிமாவை பாருங்க! அது நம்ப பொழுதுப் போக்குக்கு முக்கியமான விஷயம்தான். வாழ்க்கையில பொழுதுப்போக்கும் வேணும் தான். அதை வேண்டாம்னு யாரும் சொல்லல. அவங்க நடிப்பை ரசிங்க! அதையும் வேணாம்னு யாரும் சொல்லலை. அதே சமயம் நம்ப நாட்டைப் பத்தியும் நினைக்கணும் இல்லையா?

நாட்டோட எதிர்காலம், ஏன் இந்த உலகத்தோட எதிர்காலமே, இளைஞர்களோட கையில இருக்குன்னு சொல்றாங்க. அந்த இளைஞர்கள் நல்ல சிந்தனைகளை வளர்த்துக்க வேணும் இல்லையா?

வெறித்தனமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை அமைச்சி, நடிகர்களோட வாழ்கையை மேம்படுத்துறதுதான் தங்களோட வாழ்க்கை இலட்சியம்னு, தங்களோட வாழ்க்கையை பாழாக்கிறவங்க எண்ணிக்கை கூடிக்கிட்டேப் போகுதேப்பா நாட்டில. இந்த அவல் நிலை மாறணுமா இல்லையா ராசா?

ரவி! நீங்க சரியாத் தான் சொல்றீங்க! நீங்க ஒன்னு கூர்ந்துக் கவனிச்சா, ஒரு விஷயம் நல்லா தெரியும், நாம, தலைவர்களை நம்ப மக்களுக்கு அறிமுகம் செய்கிற விதமே தப்பா இருக்கேப்பா. 


காந்தியை பத்தி படிச்சிக்கோ! 5 மார்க் கேள்விகள்ல வரும், பெரியாரைப் பத்தி படிச்சிக்கோ! 10 மார்க் கேள்விகள்ல வரும். இந்தியவிடுதலையைப் பத்தி படிச்சிக்கோ! கட்டுரை டைப் கேள்வியா வரும்ன்னு சொல்லி சொல்லித்தானே வாத்தியாருங்க பாடம் நடத்துறாங்க. இது ரொம்ப தப்பான விஷயம் இல்லையா பங்காளி?

அதனாலத் தான் நாம்ப எல்லோருமே, பள்ளிக்கூடத்தை விட்டதோட நம்ப தலைவருங்களைப் பத்தின நினைப்பையும் விட்டுடறோம். பாடமா படிக்கிறதால அவங்கமேல மதிப்பு வர்றதுக்கு பதிலா வெறுப்பு இல்ல வருது எல்லோருக்கும். மார்க்குக்காக படிச்சா, மார்க்கு வாங்கியப்பின்னாடி அதெல்லாம் பயன் இல்லைன்னு தானே நினைக்கத் தோணும். நீங்களும், நானும் கூட அப்படிதானே படிச்சோம். ஈடுபாட்டோடையா அவங்களைப் பத்தி படிச்சோம்? இல்லையே ரவி! 

ரொம்ப எளிமையா அவங்களைப் பத்தி, கதை வடிவில, நாடகம் வடிவிலன்னு, கலைகள் மூலமா நம்ப தலைவருங்களை, இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய தவறிட்டோமே. அதோட விளைவு தானே இதெல்லாம்.

சரியா சொல்லிட்ட ராசா! இந்த வீனாப்போனக் கல்வி முறை தாம்பா இதுக்கெல்லாம் காரணம்.


அமெரிக்காவிலப் பாரு ஆப்ரஹாம் லிங்கனை பத்தி, மார்டின் லூதர் கிங்கைப் பத்தி எல்லாம் இன்னைக்கு இருக்கிற பொடிப் பசங்க எல்லாங்கூட நல்லா தெரிஞ்சி வைச்சிருக்காங்க. அவங்கெல்லோரும், அவங்களோட தலைவருங்களைப் பத்தி சொல்லும்போதே பெருமையா சொல்றாங்க. கேட்கிற நமக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு. 


அவங்க கல்வி முறை அந்த அளவுக்கு பக்குவமா அவங்களோட தலைவருங்களை, அவங்ககிட்ட கொண்டுபோய் சேர்திருக்கு.

அதுமாதிரி நம்ப நாட்டிலேயும் உடனடியா கல்வி முறையை மாத்தி சீரமைச்சாத்தான் இதுக்கெல்லாம் ஒரு விடிவுக்காலம் பிறக்கும்ப்பா! அதுவரைக்கும் பெற்றோர்கள் தான், அந்த பொறுப்பை எடுத்துக்கணும். நாட்டுத் தலைவருங்களைப் பத்தி பக்குவமா, தங்களோட பிள்ளைங்களுக்கு சுவாரஸ்யமா எடுத்துச் சொல்லணும்.

ஆமாங்க ரவி! நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. நான் கூட, நீங்க சொன்ன வழிமுறையை ஃபாலோ பண்ணப்போறேன். இன்னைக்கி உங்ககிட்டப் பேசினதில ரொம்ப நல்ல விஷயம் ஒன்னுத் தெரிஞ்சிக்கிட்டேன். சரி! ரவி வரேன்பா! அப்புறமா சந்திக்கலாம்.


தாத்தா! எந்திரனையும் பார்போம்!
அதேசமயத்தில உங்க பிறந்த நாளையும்
மறக்கமாட்டோம்!

பங்காளி! இந்த ரெண்டு நண்பர்கள் பேசிகிட்டதை கேட்டீங்க இல்ல? நீங்க என்ன நினைக்கறீங்க, அவங்க சொன்ன கருத்தைப் பத்தி? ஒரு வரி சொல்லிட்டுப் போனீங்கன்னா, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் சொல்லுங்க!                

இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?
              



67 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ப்ரியமுடன் வசந்த் said...

எப்பவும் நாட்டையும் நாட்டுக்காக பாடுபட்டவங்களையுமே நினைச்சுட்டு இருந்தா லூஸ்னு சொல்லிடுவாங்க பங்காளி மைண்ட ரிலாக்ஸ் பண்ணிக்க இதுபோல எண்டெர்டெயின்மெண்ட் தேவை..

காந்தி பிறந்தநாள் யாருமே மறக்கறதில்லை..

எஸ்.கே said...

காந்தியடிகளின் பிறந்தநாளில் அவரின் கொள்கைகளை பின்பற்ற தொடங்குவோம். நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பற்றி விரிவாக அறிந்துகொள்வது குடிமகன்களின் கடமை. நம் கல்விமுறை அதை முழுமையாக செய்யவில்லை என்றாலும், தங்களைப் போன்றவர்களால் அதை முழுமையாக்க முயற்சிப்போம்! ஜெய்ஹிந்த்!

என்னது நானு யாரா? said...

@ப்ரியமுடன் வசந்த்

//எப்பவும் நாட்டையும் நாட்டுக்காக பாடுபட்டவங்களையுமே நினைச்சுட்டு இருந்தா லூஸ்னு சொல்லிடுவாங்க பங்காளி மைண்ட ரிலாக்ஸ் பண்ணிக்க இதுபோல எண்டெர்டெயின்மெண்ட் தேவை.//

நீங்க சொல்றது சரிதான் பங்காளி! எனக்கும் அதில உடன்பாடு இருக்கு. பதிவில அதைத்தானே எழுதி இருக்கேன். காந்தியை மறக்காதவர்களில் நீங்க ஒருத்தர்ன்னு அறியும் போது சந்தோஷம் பங்காளி!

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

//காந்தியடிகளின் பிறந்தநாளில் அவரின் கொள்கைகளை பின்பற்ற தொடங்குவோம். நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பற்றி விரிவாக அறிந்துகொள்வது குடிமகன்களின் கடமை. நம் கல்விமுறை அதை முழுமையாக செய்யவில்லை என்றாலும், தங்களைப் போன்றவர்களால் அதை முழுமையாக்க முயற்சிப்போம்! ஜெய்ஹிந்த்!//

சூப்பருங்க நண்பா! ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க! உங்களைப் போல நினைக்கிறவங்க அதிகமா இருந்திட்டா நாட்டோட சுபிஷத்துக்கு அளவே இல்லைங்க. நம் நாட்டோட எதிர்காலம் பிரகாசமா ஒளிவீச நாம எல்லோருமே முயற்சிப்போமுங்க!

தினேஷ்குமார் said...

வணக்கம் நண்பரே
தங்களின் மின்னஞ்சல் கண்டேன் மிகுந்த மகிழ்ச்சி

நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

http://marumlogam.blogspot.com/

தெய்வசுகந்தி said...

நல்ல கருத்துங்க!!

prabhadamu said...

நல்ல கருத்து நண்பரே :)

Madhavan Srinivasagopalan said...

நீங்க சொல்லுறதெல்லாம் ரைட்டுங்க அப்பு....
'சினிமா மக்களை கேடுக்கரத்துக்காகவே வந்துச்சின்னு' அடிக்கடி எங்கப்பா சொல்லுவாரு.. ஆமாங்க, நமக்காக..(ஓர் பொழு போக்கு அம்சமாக மட்டுமே இருக்கணும் சினிமா)..... சினிமா இல்லாம.. நாம 'அதுக்காக' இருப்பது, நம்ம வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு தடை கல்லாகவே இருக்கும் இல்லையா...

இது தெரியாம பலபேரு சீரழிஞ்சிபோறாங்க..... நா கூட சினிமா மேல உள்ள கடுப்புனாலதான் இப்படி சொல்லுறேன்..

காந்தி ஜெயந்தி அன்னிக்கி, 'மதுக் கடைய' மூடுறது சரி.. ஆனா, எதுக்கு சிறப்பு சினிமா, தொலைக் காட்சிகளில் ?
காந்தி. மக்களோட சுதந்திரத்துக்குத் தான் பாடு பட்டாரு.. 'சுதந்திரமா சினிமா' பாக்குறதுக்காக அவரு போராடல..

ப.கந்தசாமி said...

நம் நாட்டுக்குன்னு தேசீயக்குணம்னு எதாச்சும் இருக்குதுங்களா? உண்மையாக வாழவேண்டும்னு காந்தி சொல்லீட்டுப்போனாரு. ஆனா நாட்டுல நடக்கறது என்ன?

இதை மாற்ற என்ன செய்ய முடியும்னு தெரியல?

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் பங்காளி, ஆனா நான் அக்டோபர் 2 மறக்கல!

என்னது நானு யாரா? said...

@dineshkumar

உங்க பாராட்டுக்கு நன்றிங்க நண்பரே!

@தெய்வசுகந்தி: வாங்க தலைவி! வாங்க! உங்க பாரட்டுக்கு நன்றிங்க! அடிக்கடி நம்ப கடைப் பக்கம் வாங்க!

@prabhadamu: வாங்க பிரபு! உங்க பாரட்டுக்கு நன்றிங்க!

என்னது நானு யாரா? said...

@Madhavan

அட! அட! அட! அண்ணாச்சி! எவ்வளவுத் தெளிவா சொல்லிட்டங்க உங்க கருத்தை.

//சினிமா இல்லாம.. நாம 'அதுக்காக' இருப்பது, நம்ம வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு தடை கல்லாகவே இருக்கும் இல்லையா..//

//இது தெரியாம பலபேரு சீரழிஞ்சிபோறாங்க..... நா கூட சினிமா மேல உள்ள கடுப்புனாலதான் இப்படி சொல்லுறேன்..//

//காந்தி. மக்களோட சுதந்திரத்துக்குத் தான் பாடு பட்டாரு.. 'சுதந்திரமா சினிமா' பாக்குறதுக்காக அவரு போராடல..//

உங்க எல்லா கருத்துகளுக்கும் நான் உடன்படுகிறேன் அண்ணாச்சி! இப்போ பெற்றோர்கள் கையில தான் பொறுப்பு இருக்கு. அவங்க தலைவர்களைப் பத்தி நல்ல விதமா குழந்தைங்களுக்கு சொல்லித் தரணும்.

உங்க கருத்துகளுக்கு ரொம்ப நன்றிங்க அண்ணாச்சி!

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD

//நம் நாட்டுக்குன்னு தேசீயக்குணம்னு எதாச்சும் இருக்குதுங்களா? உண்மையாக வாழவேண்டும்னு காந்தி சொல்லீட்டுப்போனாரு. ஆனா நாட்டுல நடக்கறது என்ன?

இதை மாற்ற என்ன செய்ய முடியும்னு தெரியல?//

ஐயா! உங்க ஆதங்கத்தை நானும் பகிர்ந்திக்கிறேன். மாற்றங்களை நம்ப வீட்டில இருந்து ஆரம்பிக்கலாமுங்க ஐயா!

நல்ல வார்த்தைகளை ஒருத்தரோடு ஒருத்தரு பகிர்ந்துக்கிறது, நல்ல விஷயங்களை சிந்திக்கிறது, என்ன முடியுமோ சேவை செய்றது, லஞ்சம் வாங்கவும் மாட்டோம், கொடுக்கவும் மாட்டோம்ன்னு உறுதி எடுத்துகிறது, அதேப்போலத் தான் வரதட்சனை வாங்கவும் மாட்டோம், கொடுக்கவும் மாட்டோம்ன்னு உறுதி எடுத்துகிறது. எங்கும் எதிலும் ஜாதியோ, மதமோ வேறுப்பாடு பார்க்கமாட்டோம்ன்னு கொள்கைப் பிடிப்போட இருக்கிறது.

இப்படி சின்ன சின்ன நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்தா கண்டிப்பா மாற்றம் சாத்தியம் தானுங்க ஐயா! இது ஒன்னுத் தான் வழி, நமக்கிட்ட இருக்கு!

என்னது நானு யாரா? said...

@சைவகொத்துப்பரோட்டா

//வாழ்த்துக்கள் பங்காளி, ஆனா நான் அக்டோபர் 2 மறக்கல!//

ரொம்ப மகிழ்ச்சி பங்காளி! சரி எந்த விதமா காந்தியை பத்தி இன்னைக்கு நினைச்சீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன். ரொம்ப ஆர்வமா இருக்கு.

நான் அவரோட சத்திய சோதனை புத்தகத்தில சிலப் பகுதிகளை படிக்க போறேன். இரத்த தாணம் கூட கொடுக்கப் போறேன்.

நன்றிங்க பங்காளி! கருத்தைச் சொன்னதுக்கு

சி.பி.செந்தில்குமார் said...

அருமை.கமெண்ட்டுக்கான லே அவுட்ட் கூட கலக்கலா இருக்கு.கட்டுரையில் எனக்குப்பிடித்த வரிகள்.>>>>

கொஞ்ச நாள் கழிச்சி நிதானமா பார்க்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன். அப்போ டிக்கட் விலையும் நார்மலா இருக்குமில்ல.>>>

ஏன்ன்னா நானும் உங்க கட்சிதான்

cheena (சீனா) said...

அன்பின் வசந்த் - பங்காளி
பாத்துட்டேன் - ஓட்டு போட்டுட்டேன் - கேட்டதுக்காக இல்ல - எனக்குப் பிடிசிருந்ததாலே - சரியா பங்காளி

நல்வாழ்த்துகள் பங்காளி வசந்த்

நட்புடன் சீனா

கண்ணகி said...

நம்ப நாட்டிலேயும் உடனடியா கல்வி முறையை மாத்தி சீரமைச்சாத்தான் இதுக்கெல்லாம் ஒரு விடிவுக்காலம் பிறக்கும்ப்பா! அதுவரைக்கும் பெற்றோர்கள் தான், அந்த பொறுப்பை எடுத்துக்கணும். நாட்டுத் தலைவருங்களைப் பத்தி பக்குவமா, தங்களோட பிள்ளைங்களுக்கு சுவாரஸ்யமா எடுத்துச் சொல்லணும்.

நல்ல கருத்து....நல்ல பதிவு..

தமிழ் உதயம் said...

பதிவுலகில் உத்தமர் காந்தியடிகளை நினைவு வைத்து எழுதியவர் நீங்கள் தான். உங்க தயவால் காந்திய சிந்தனைகளை வாசிக்கிறோம். நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

write. aanaa intha friends enthiran interval la thaana itha paththi pesinaanga

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லாத்தான் பேசிக்கிறாங்க. ஆனா இது எந்திரன் பட இடைவேளையின் போதுதான அந்த நண்பர்கள் பேசிகிட்டாங்க..

என்னது நானு யாரா? said...

@சி.பி.செந்தில்குமார்

படத்தை இன்னமும் பார்க்கலையா! படம் பாக்காமலே அதைப் பத்தி தொடர் பதிவுகளா இட்டு கலக்கிட்டீங்க நீங்க. திறமைசாலிதானுங்க நீங்க!

உங்க திறமையை நினைச்சு பாராட்டாம இருக்க முடியல!

என்னது நானு யாரா? said...

@cheena (சீனா)

உங்களின் வருகை எப்போதுமே என்னை ஆனந்தக்கடலில் மூழ்கடிக்கிறது ஐயா! நீங்கள் ஆழ்மனதில் இருந்து சொல்லும் வார்தைகள் என்னுடைய இதயத்தினைத் தொடுகிறது ஐயா.

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க ஐயா!

என்னது நானு யாரா? said...

@கண்ணகி

உங்க பாராட்டுக்கு நன்றிங்க தோழி! தொடர்ந்து நம்ப கடைக்கு வந்து சரக்கெல்லாம் பாத்து ஊக்கம் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன்.

என்னது நானு யாரா? said...

@தமிழ் உதயம்

உங்களைப் போல நல்லவர் கூட்டணி தான் நாட்டை ஜெயிக்க வைக்கப்போகிறது நண்பரே! காந்திய சிந்தனைகளை விரும்பிப் படிப்போர் வாழ்க்கையில் தாழ்ந்த நிலைக்குச் செல்லவே மாட்டார்கள் நண்பரே! உங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றிங்க நண்பரே!

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//நல்லாத்தான் பேசிக்கிறாங்க. ஆனா இது எந்திரன் பட இடைவேளையின் போதுதான அந்த நண்பர்கள் பேசிகிட்டாங்க.//

என்னப்பா போலிசு! பதிவை சரியா படிக்கலையா? ஒரு நண்பரு படம் இன்னும் பார்க்கலைன்னு சொல்றாரே.

சரியா கவனிக்கலப் போல இருக்கு. உங்க அக்கா பொண்ணு உங்களை லூஸ் மாமான்னு சொன்னது சரி தான் போல இருக்கேப்பா!

velji said...

காந்தியை நினைக்க எந்திரனுக்கு குடுத்த லிங்க் நல்லாத்தான் இருக்கு.

பொன் மாலை பொழுது said...

//நம் நாட்டுக்குன்னு தேசீயக்குணம்னு எதாச்சும் இருக்குதுங்களா? உண்மையாக வாழவேண்டும்னு காந்தி சொல்லீட்டுப்போனாரு. ஆனா நாட்டுல நடக்கறது என்ன?//

DrPKandaswamyPhD said...


நான் நாட்டு தேசிய குணம் , பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் , சந்து பொந்துகளிலும், குறிப்பாக அரசாங்க அலுவலக இடங்களிலும் மருத்துவ மனை பகுதிகளிலும் கொஞ்சமும் வெட்கம்,மானம் இன்றி உடல் கழிவுகளை வெளியேற்றுவது.
மற்றதெல்லாம் இதற்க்கு பின்னால்தான் தலைவரே!

dheva said...

பங்காளி....@ உங்க அப்ரோச் புடிச்சு இருக்கு....

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

TechShankar said...

Hi.. Thanks 4 sharing your idea.

by

TS


ரோபோ ரசிகன்

R.பூபாலன் said...

ஒவ்வொருத்தருமே காந்தியின் கொள்கைகளைப் பற்றி
பேச்சளவிலும் எழுத்தளவிலும்தான் பின்பற்றுகின்றோம்.....
அதை விடுத்து, எப்போது அதனை செயல் அளவில்
பின்பற்றுகின்றோமோ அப்போதுதான்
நீங்கள் சொல்வதுபோல் நடக்கும்.

Anonymous said...

நாட்டில இன்னைக்கு இருக்கிற பல அவலங்களுக்கு நாம சரியானபடி நம்ப தலைவருங்களை பத்தி தெரிஞ்சி வைச்சுக்கலைன்னு தான் காரணம் சொல்வேன். //
செம காமெடி

Anonymous said...

மாணவன் தலைவர்களை பற்றி படித்து விட்டு அமெரிக்கா போய் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான்.எதுவும் படிக்காதவன் தலைவன் ஆகி கோடிக்கணக்கில் ஊழல் செய்கிறான்..விடுங்க பங்காளி எத்தனை நாளைக்கி காந்தி தாத்தாவை படிச்சிகிட்டே இருக்கிறது..அவரை வெச்சு ஆட்சியை வேணா பிடிக்கலாம் நல்லவன் ஆக முடியாது

Anonymous said...

அதே சமயம் நம்ப நாட்டைப் பத்தியும் நினைக்கணும் இல்லையா?//
நாட்டைதான் நினைச்சேம் பங்காளி கடைசி நேரத்துல ஈழத்தமிழனை காப்பாத்தி தரும் நு நம்ம நாட்டைத்தான் நம்பினோம் கடைசியில நம்ம நாடுதான் தொப்புள் கொடி உறவுகளை அறுத்ததுன்னு தெரிஞ்சததும் அட போங்க பங்காளி ..ரூட்டை மாத்துங்க..காந்தி தாத்தா காங்கிரஸ் சின்னமாகி ரொம்ப நாளாச்சு..இனியும் அவரை பிடிச்சு தொங்காதீங்கப்பு.

Anonymous said...

காமென்வெல்த் விளையாட்டு போட்டிக்கு 87000 கோடி ரூபாய் செலவாம்.நேரு ஸ்டேடியம் புதுப்பிக்க 970 கோடி ரூபாய் செலவாம்.இந்த செலவுல புதுசா ரெண்டு ஸ்டேடியம் கட்டலாமாம்..காந்தி கொள்கைகளை பரப்பி ஆட்சிக்கு வந்தவர்களே இப்படி என்றால் நான் காந்தியை பத்தி தெரிஞ்சு என்ன பண்ண போறேன்..நான் நாலு காசு சம்பாதிச்சாதான் புள்ளகுட்டியை படிக்க வைக்க முடியும்...அதுக்கு காந்தி உதவுவாரா...அப்பாவியா இருக்காதப்பு..

Anonymous said...

கொஞ்ச நாள் கழிச்சி நிதானமா பார்க்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன். அப்போ டிக்கட் விலையும் நார்மலா இருக்குமில்ல.//
நல்ல யோசனை இது போல பயனுள்ள யோசனைகளை அடிக்கடி வழங்கினால் பலருக்கும் உபயோகப்படும்-;))

Anonymous said...

காந்திய சிந்தனைகளை விரும்பிப் படிப்போர் வாழ்க்கையில் தாழ்ந்த நிலைக்குச் செல்லவே மாட்டார்கள் நண்பரே! //
உங்க ஜோசியமும் நல்லாத்தான் இருக்கு-;))

Anonymous said...

பெற்றோர்கள் தான், அந்த பொறுப்பை எடுத்துக்கணும். நாட்டுத் தலைவருங்களைப் பத்தி பக்குவமா, தங்களோட பிள்ளைங்களுக்கு சுவாரஸ்யமா எடுத்துச் சொல்லணும்//
இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்..குழந்தைகள் அந்த காலத்தில் இருந்தகாசு சம்பாதிக்காத ’’நல்ல’தலைவர்கள் பற்றியும் தெரிந்துகொள்வதும் அவசியம்..அவர்களின் மனௌறுதி,வைராக்கியம்...அறிந்துகொண்டால் தனக்கும் அத்தையக சக்தி உண்டு என புரிந்து கொள்வார்கள்’

AKM... வெற்றியூரான்... said...

Good Ideas... thanks brtr...

AKM... வெற்றியூரான்... said...

கொல்கட்டாவில் நேத்துதான் ரோபோ படம் தெலுங்கில் பார்த்தேன்... தமிழ்ல மூன்ரு நாலைக்கு டிக்கெட் இல்லை...
படம் நல்லா வந்துருக்கு... கொஞ்சம் MATRIX ஙாபகம் வந்தது... அவ்வலவுதான் மட்ரபடி படம் கலக்கல்...

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்...

மங்குனி அமைச்சர் said...

காந்தியை பத்தி படிச்சிக்கோ! 5 மார்க் கேள்விகள்ல வரும், பெரியாரைப் பத்தி படிச்சிக்கோ! 10 மார்க் கேள்விகள்ல வரும். இந்தியவிடுதலையைப் பத்தி படிச்சிக்கோ! கட்டுரை டைப் கேள்வியா வரும்ன்னு சொல்லி சொல்லித்தானே வாத்தியாருங்க பாடம் நடத்துறாங்க. இது ரொம்ப தப்பான விஷயம் இல்லையா பங்காளி?////

எதார்த்தமா ஒரு பெரிய விஷயத்தை அழகா சொல்லி இருக்கிங்களே

Anonymous said...

ரொம்ப நல்ல இருக்கு

Unknown said...

தமிழ் சினிமா வரலாற்றில் பொருட்செலவு அதிகம் செய்து எடுக்கப்பட்ட படம் அதனால் போட்ட பணத்தை எடுக்க யாராயிருந்தாலும் அதற்காக பாடுபடுவார்கள்தான், ஆனால் காந்தியை இந்த வருடம் மட்டுமா நினைக்க மறந்தோம்.. அவர் கொள்கைகளை அவரின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களே குழிதோண்டி புதைத்துவிட்டனர்...

Prathap Kumar S. said...

உண்மைதான்...நிறையேபருக்கு காந்தி பிறந்த நாளும் தெரியாது, இறந்த நாளும் தெரியாது. ஏன் பலபேருக்க சுதந்திரம் என்னிக்கு கிடைச்சதன்னே தெரியாது. ஏதோ நல்லாருந்தா சரி...

நீங்க அநியாயத்துக்கு நல்வராருக்கீங்ளே தோஸ்த்.... :)

Kiruthigan said...

உங்க பாணியில் அருமையாக கூறியுள்ளீர்...
வாழ்க அஹிம்சை..

Unknown said...

நல்ல பதிவு நல்ல வேளை நீங்களாவது நினைவு படுத்தினீர்களே oct 2 ஐ ?

செல்வா said...

//ஏன் பங்காளி! நீங்க இன்னும் பார்கலைப் போல இருக்கே?//

நானும் இன்னும் பார்க்கலை...!!

செல்வா said...

///அவரு பிறந்தநாளிலக் கூட சினிமா படங்களா போடறான் டீவியில. என்னக் கொடுமை சரவணன்!
//

அந்த கொடுமைய எங்க போய் சொல்லுறது ..
நீங்க கூட பாருங்க , சினிமா வசனம் மாதிரி சொல்லித்தான் போட்டிருக்கீங்க .. ஹி ஹி ஹி ..

செல்வா said...

///வெறித்தனமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை அமைச்சி, நடிகர்களோட வாழ்கையை மேம்படுத்துறதுதான் தங்களோட வாழ்க்கை இலட்சியம்னு,தங்களோட வாழ்க்கையை பாழாக்கிறவங்க எண்ணிக்கை கூடிக்கிட்டேப் போகுதேப்பா நாட்டில.///

ஆமாங்க , எங்க தலைவர் ,தெய்வம் அப்படி இப்படின்னு நிறைய பேரு சுத்திட்டிருக்காங்க ..!! என்ன ஆக போறாங்களோ ..? எங்க தலைவர் அப்படின்னு சொல்லிட்டு வேலைய பார்க்க போறவங்களா பாராட்டலாம் .. ஆனா avunkalukku poster otturathu இது மாதிரி ivunka vaalkaya tholachukkaravankala என்ன pannurathu ..?

என்னது நானு யாரா? said...

@velji

//காந்தியை நினைக்க எந்திரனுக்கு குடுத்த லிங்க் நல்லாத்தான் இருக்கு.//

என்ன செய்றது நண்பா? நம்ப ஆளுங்க கிட்ட போகணும்னா அவங்க மொழியில தானே பேச வேண்டி இருக்குது.

உங்க கருத்துக்கு நன்றிங்க!

என்னது நானு யாரா? said...

@கக்கு - மாணிக்கம்

//நான் நாட்டு தேசிய குணம் , பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் , சந்து பொந்துகளிலும், குறிப்பாக அரசாங்க அலுவலக இடங்களிலும் மருத்துவ மனை பகுதிகளிலும் கொஞ்சமும் வெட்கம்,மானம் இன்றி உடல் கழிவுகளை வெளியேற்றுவது. //

இதுக்கு எல்லோருமே பொறுப்பு எடுத்துக்கணும்னு நினைக்கிறேன். போதுமான எண்ணிக்கையில கழிவறைகள் இல்லாததும் ஒரு காரணம் தானே நண்பா?

என்னது நானு யாரா? said...

@dheva

//பங்காளி....@ உங்க அப்ரோச் புடிச்சு இருக்கு....

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!//

நன்றி தேவா! உங்களுக்கும் என் காந்தி பிறந்த நாள் வாழ்த்துக்கள். இண்டர்நெட் கனெக்ஷன்ல 3 நாளா பிரச்சனை. அதனால தான் இப்போ பதில் எழுதறேன்.

என்னது நானு யாரா? said...

@TechShankar

//Hi.. Thanks 4 sharing your idea//

நன்றி நண்பா!

@akm: நன்றி நண்பா!

@denim: நன்றி நண்பா!

என்னது நானு யாரா? said...

@R.பூபாலன்

//ஒவ்வொருத்தருமே காந்தியின் கொள்கைகளைப் பற்றி
பேச்சளவிலும் எழுத்தளவிலும்தான் பின்பற்றுகின்றோம்.....
அதை விடுத்து, எப்போது அதனை செயல் அளவில்
பின்பற்றுகின்றோமோ அப்போதுதான்
நீங்கள் சொல்வதுபோல் நடக்கும்.//

இப்போதே பெரும்பான்மை மக்கள் நேர்மையுடன் தான் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த அளவாவது, நியாயம், தர்மம், நீதி, நேர்மை இருக்கிறது. ஆனால் பதவிகளில் இருப்பவர்கள் நேர்மையைக் கடைப்பிடித்தால் இன்னும் நல்ல நிலையில் நாடு இருக்கும் என்பதே உண்மை. உங்க கருத்துக்கு நன்றிங்க நண்பா!

என்னது நானு யாரா? said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

உங்க கருத்துக்கள்ல அதிகமா மனச்சோர்வு தெரியுது நண்பா. இந்த அளவு மனச்சோர்வை வைச்சிருந்தா மனசில சந்தோஷமோ, தைரியமோ, தெளிவோ இல்லாம போயிடும் நண்பா. அதனால கெட்டதிலேயும் என்ன நல்லது இருக்குன்னு பார்க்கிறது தான் புத்திசாலித்தனம்.

உங்க கருத்துகளுக்கு நன்றிங்க நண்பா!

என்னது நானு யாரா? said...

@akm

//படம் நல்லா வந்துருக்கு... கொஞ்சம் MATRIX ஙாபகம் வந்தது... அவ்வலவுதான் மட்ரபடி படம் கலக்கல்... //

படத்தைப் பத்தி சொன்னதுக்கு நன்றிங்க நண்பா! நானும் கொஞ்ச நாள் கழிச்சிப் பார்க்கலாம்னு இருக்கேன்.

என்னது நானு யாரா? said...

@மங்குனி அமைசர்

//எதார்த்தமா ஒரு பெரிய விஷயத்தை அழகா சொல்லி இருக்கிங்களே//

நன்றிங்க அமைச்சரே! உங்க வருகைக்கும் நன்றிங்க!

என்னது நானு யாரா? said...

@கே.ஆர்.பி.செந்தில்

//ஆனால் காந்தியை இந்த வருடம் மட்டுமா நினைக்க மறந்தோம்.. அவர் கொள்கைகளை அவரின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களே குழிதோண்டி புதைத்துவிட்டனர்.//

சரியாத்தான் சொன்னீங்க அண்ணாச்சி! அதோட விளைவுகளைத் தான் இப்போ நாம சந்திச்சிட்டு இருக்கோம். அடுத்த தலைமறையாவது நல்லபடியா வாழணும்னா, நாம சத்தியத்தோட உதாரணங்களை கடைப்பிடிச்சாத்தான் முடியும் என்று நம்பறேன்.

உங்க கருத்துக்கு நன்றிங்க!

என்னது நானு யாரா? said...

@நாஞ்சில் பிரதாப்

//உண்மைதான்...நிறையேபருக்கு காந்தி பிறந்த நாளும் தெரியாது, இறந்த நாளும் தெரியாது. ஏன் பலபேருக்க சுதந்திரம் என்னிக்கு கிடைச்சதன்னே தெரியாது. ஏதோ நல்லாருந்தா சரி...

நீங்க அநியாயத்துக்கு நல்வராருக்கீங்ளே தோஸ்த்.... :)//

உங்க கருத்து அருமை தல! இந்த நிலை பரிதாபத்துக்குரியது. நாடு இந்த அளவில கேவலப்பட்டிருக்குது. அடுத்த தலைமுறையாவது நல்லபடியா வளரணும்னு நான் ஆசைப்படுறேன்.

நான் நல்லவனா இருக்கேன். மத்தவங்களையும் நேசிக்கிறேன். வாழ்கிற முறை, உயர்ந்த நாகரீகம் அது தான்னு நம்பறேன் தல!

நீங்களும் அதுப்போலத் தான் இருக்கணும் நான் நினைக்கிறேன். இல்லைன்னா இந்த பதிவைப் படிச்சிட்டு கருத்துச் சொல்லிக்கி இருக்கமாட்டீங்க இல்ல?

என்னது நானு யாரா? said...

@Cool Boy கிருத்திகன்.

//உங்க பாணியில் அருமையாக கூறியுள்ளீர்...
வாழ்க அஹிம்சை.//

நன்றி நண்பா! வாழ்க அஹிம்சை!! வாழ்க காந்தியின் புகழ்!

என்னது நானு யாரா? said...

@குழந்தை நல மருத்துவன்!

//நல்ல பதிவு நல்ல வேளை நீங்களாவது நினைவு படுத்தினீர்களே oct 2 ஐ ?//

வாங்க மருத்துவரே! உங்க கருத்துக்கு நன்றிங்க! நல்ல விஷயத்தை மறந்துப் போகக் கூடாது இல்லையா?

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

பலருக்கு ரஜினி தான் காந்தி ...................................

என்னது நானு யாரா? said...

@ஈரோடு தங்கதுரை

//நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள்.//

நன்றிங்க நண்பா! கண்டிப்பா இப்பவே வந்துப் படிச்சிப் பாக்கிறேன்.

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்

/////அவரு பிறந்தநாளிலக் கூட சினிமா படங்களா போடறான் டீவியில. என்னக் கொடுமை சரவணன்!
//

அந்த கொடுமைய எங்க போய் சொல்லுறது ..
நீங்க கூட பாருங்க , சினிமா வசனம் மாதிரி சொல்லித்தான் போட்டிருக்கீங்க .. ஹி ஹி ஹி //

என்ன செய்றது செல்வா? என்னையும் அறியாம நானும் சினிமாக்களுடைய மாயையில சிக்கிக்கிறேன். நானும் சாதரணமான மனுஷன் தான் உங்களைப் போல தம்பி.

கருத்தை வெளிப்படையா சொன்னதுக்கு நன்றி செல்வா!

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்

//ஆமாங்க , எங்க தலைவர் ,தெய்வம் அப்படி இப்படின்னு நிறைய பேரு சுத்திட்டிருக்காங்க ..!! என்ன ஆக போறாங்களோ ..? எங்க தலைவர் அப்படின்னு சொல்லிட்டு வேலைய பார்க்க போறவங்களா பாராட்டலாம் .. ஆனா avunkalukku poster otturathu இது மாதிரி ivunka vaalkaya tholachukkaravankala என்ன pannurathu ..?//

உங்க கவலையை நானும் பகிர்ந்துக்கிறேன். அந்த கடவுள் தான் இவங்களுக்கு நல்ல புத்திக் கொடுத்து அவங்களோட வாழ்க்கையை பாழாக்கிக்காம நல்லபடியா அமைச்சுக்க உதவணும்.

என்னது நானு யாரா? said...

@தமிழ் "தீ" விரவாதி வேனு

//பலருக்கு ரஜினி தான் காந்தி .//

ஆமாம் நண்பரே! உங்க கருத்தை நானும் ஏத்துக்கிறேன். நமக்காக எந்த மாதிரியெல்லாம் தியாகம் செய்தாங்க நம்ப நாட்டுத் தலைவங்கன்னு தெரிஞ்சு வைச்சுக்கணும் இல்லையா? அந்த நிலை வந்தாத்தான் நாம உண்மையாகவே நல்ல நிலைக்கு செல்வோம் நண்பரே.

உங்க கருத்துக்கு நன்றிங்க் நண்பரே!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல பதிவுங்க வசந்த்

The Kid said...

நீங்க ரொம்ப தெளிவா எழுதறீங்க. படிகர்துக்கு நல்லா இருக்கு. நீங்க http://zeole.com/chennai க்கு வந்து ஒரு முறை எழுதணும் ...

zeole.com என்னோட ஒரு முயற்சி தான் ... அதுல ஒவ்வொரு country/city ஆக தனித்தனியாக arrange செய்து இருக்கோம்.

zeole.com/chennai ல , ஒரு 100 readers வருவாங்க . உங்க எழுது பல வாசகர்கள் பார்க்க வைப்பு உள்ளது.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!